Thursday, 29 March 2018

17.history of krishnagiri ஜெகதேவி நெற்றிக்கண் செல்வ விநாயகர் (புடைப்பு சிற்பம்)


ஜெகதேவியில் அற்புதம் ஸ்ரீ நெற்றிக்கண் செலவ விநாயகர்



அரிதிலும் அறிதாக சில இடங்களில் காணப்படும் இவ்வகை விநாகயர் அனைத்து தோஷங்களையும் நீக்குவதாக பக்தர்கலால் கூறப்படுகிறது  - காலம் 800 ஆண்டுகள் இருக்கலாம் 


 புடைப்புச் சிற்பங்கள் கல், மரம், உலோகம் முதலிய பல்வேறு பொருட்களில் உருவாக்கப்பட்டு உள்ளன. மரத்தில் செதுக்கு வேலைகளைச் செய்வது இலகுவாக இருப்பதால் காலத்தால் முந்திய புடைப்புச் சிற்பங்கள் மரத்தால் ஆனவையாகவே இருந்திருக்கும். ஆனாலும், மரச் சிற்பங்கள் நீண்டகாலம் நிலைத்திருக்கும் வாய்ப்புக் கிடையாது ஆகையால் நமக்குக் கிடைக்கக் கூடிய மிகப் பழைய புடைப்புச் சிற்பங்கள் கல்லில் செதுக்கப்பட்டவையாக உள்ளன. மரம், கல் முதலிய பொருட்களில் செதுக்குவதன் மூலம் பகுதிகளை அகற்றிப் புடைப்புச் சிற்பங்கள் உருவாக்கப்படும் வேளை, உலோகத்தாலான புடைப்புச் சிற்பங்கள் அச்சுகளில் உருக்கி வார்க்கப்படுவதன் மூலமோ, உலோகத் தகடுகளைப் பின்புறம் அடிப்பதன் மூலமோ உருவாக்கப்படுகின்றன.
.

விபூதி அலங்கரத்தில் ரீ நெற்றிக்கண் 

செல்வ விநாயகர்

முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் , அசுரர்களுக்கும் , இறேழு பதினான்கு லோகங்களுக்கும் முழுமுதற் பொருளான ஸ்ரீ நெற்றிக்கண் செலவ விநாயகரையும் , ஸ்ரீ காட்டு வீர ஆஞ்சநேயரையும் ஒவ்வொரு வாரமும் சனிகிழமை அன்று ஸ்ரீ நெற்றிக்கண் செல்வ விநாயகருக்கும் ஆஞ்சநேயருக்கும் நெய் தீபம் ஏற்ற வேண்டும்.. தொடர்ந்து ஒன்பது வாரம் தீபம் ஏற்றினால் அவர்களுடைய நவகிரக தோஷம் மற்றும் செய்வினை , ஏவல் ஆகியவை நீங்கி லக்ஷ்மி காட்சம் பெருகும் . கணபதி மேல் நம்பிக்கை வைத்து வரவேண்டும்


 
 தமிழ் நாட்டில் கல்லில் செதுக்கப்பட்ட புடைப்புச் சிற்பங்கள் பல்லவர் ஆட்சிக்காலத்துடனேயே தொடங்குகின்றன எனலாம். கோயில்களைக் குடைவரைகளாகக் கல்லில் உருவாக்கியது பல்லவர் காலத்திலேயேயாம். இக் காலக் குடைவரை கோயில்கள் பலவற்றில் புடைப்புச் சிற்பங்கள் ஏராளமாகக் காணப்படுகின்றன. மாமல்லபுரம் குடைவரைகளில் காணப்படும் புடைப்புச் சிற்பங்கள் இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. பின்னர் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்ட கற்றளிகளிலும் புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டன.
 





 நன்கடி உயரத்தில் தமிழனின் கைவண்ணத்தில் அற்புதமாக காட்சி அளிக்கும் விநாயகர்
 இக் கோயில் ஜகதேவி கோட்டைக்கு செல்லும் வழியில் 500 அடி உயரத்தில் அமைந்து அருள் தருகிறார்
 விநாயகர் கோவிலில் இருந்து ஜகதேவி
 வழி எங்கும் மின்சார வசதி செய்யப்பட்டுள்ளது
ஜெகதேவி கிருஷ்ணகிரி - திருவண்ணாமலை சாலையில் கிருஷ்ணகிரியில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. திருமால் குளத்துக்கு எதிரே செல்லும் பாதையில் செல்லவேண்டும் 500 அடி உயரம் மலை ஏறவேண்டும கனேசனுடன் தமிழ்

No comments:

Post a Comment

அங்கனப்பற்று - மகராசகடை - பாறை ஓவியம் -பனரத்து பண்டா- - MAHARAJAKADI -PANAMARATHUPANDA PREHISTORIC ROCK ART ( PAINTING ) புதிய கண்டறிதல்

மேலும் சிறப்பு பெறும் மகராசகடை ( அங்கனப்பற்று )பகுதி - நடன பாறை ஓவியம் -மகராசகடை மலை அடிவாரப்பகுதியில் உள்ள பனமரத்துபண்டா என்ற இடத்தில் ...