ஓசூருக்கு அருகில் உள்ள நாகமங்கலத்தில் சிதிலமான நடுகற்கல்கள் பற்றிய செய்தி வந்துள்ளது.
சிதிலமடைந்து காணப்படும் கி.பி.12 ஆம் மற்றும் 13 ஆம் நூற்றாண்டுகளை சேர்ந்த நாகமங்கலத்தில் இருக்கும் நடுக்கல் தொகுப்பு.
தேன்கனி கோட்டம் வட்டம் கெலமங்கலத்திற்கும் இராயகோட்டைக்கும் இடையில் இருக்கும் நாகமங்கலத்தில் கி.பி.12 ஆம் மற்றும் 13 ஆம் நூற்றாண்டுகளை சேர்ந்த ஆறு நடுகல் தொகுப்பு மிகவும் சிதிலமடைந்த நிலையில் காணப்படுகின்றன.
கிருஷ்ணகிமாவட்டத்தில் வரலாற்று ஆய்வாளர் அறம்கிருஷ்ணன் தலைமையில் பிரியன், மஞ்சுநாத்,சந்திரப்பா , உள்ளிட்டோர் ஒன்றினைந்து செய்யப்பட்ட களஆய்வில் இந்த நடுகல் தொகுப்பை கண்டுபிடித்துள்ளனர்.
ஒவ்வோறு வருடமும் தை முதல் நாள் அல்லது அதனை தொடர்ந்து வரும் நாட்களில் இறந்து போன மூதாதையர்களின் நினைவாக நட்டுவைத்திருக்கும் நடுகல்லுக்கு குடும்பத்துடன் சேர்ந்து படையல் போட்டு வணங்குவது இன்று வரை தொன்று தொட்டாக கிருஷ்ணகிரி,தருமபுரி மாவட்ட மக்களின் பழக்கமாக இருந்து வருகிறது.நடுகற்களை வணங்கும் பழக்கம் இரண்டாயிரம் வருடத்திற்கும் மேலாக நம்முடைய மக்களிடம் இருந்து வருகிறது.அதற்கு முக்கிய காரணம் தமிழ் நாட்டில் அதிகமான நடுகற்கல்கள் இருப்பது தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில்தான். -அறம்கிருஷ்ணன்
No comments:
Post a Comment