Monday, 4 August 2025

குட்டப்பள்ளி நடுகல் கல்வெட்டு

1. சர்வ தான்யவருஷத்து மா 2. சி மாதம் 15 ந் தேதி புதுப் 3. பற்று பல்லேரி பள்ளி யில் 4. புறை ஆண்டயேன் நாட்டி கட் 5. டை இராயன் பாகாப்பாக மோ 6. கையில் ....... முத்தைஊரிலே சென்று தலை 7. ப் பட்டு முதலில் இராகத்தனுட்டுக் குதி 8. ரையை பூங்குத்தி தானும் பட்டா இவனுக் 9. கு சருவ மனியமாக பெரிய. ஏரிஇ 10. கம்மேரியிலே கல்லவூர்....கண்ட 11. க கழனியும் இரு கண்டக கொல்லை முனி 12. பட்டிலே விட்டேன் வைக்கும் ஆட்டுக்கு கு 13. தலைக்கு இவை சர்வ மாண்யமாக விட்டோம் 14. அதமவாக்கரும் நம்மக்கள் அவன்மக்கள் மண்யம் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவானது வேப்பனப்பள்ளி ஒன்றியம் கோடிப்பள்ளி பஞ்சாயத்தின் குட்டப்பள்ளி என்ற இடத்தில் குதிரைவீரன் நடுகல்லுடன் கல்வெட்டும் இருப்பதாக வரலாற்று ஆய்வாளர் சதாநந்தகிருஷ்ணகுமார் கூறி அந்த இடத்துக்கு அழைத்துச்சென்றார். அவருடன் ஆய்வுக்குழு தலைவர் நாராயனமூர்த்தி தலைமையில் அருங்காட்சிய காப்பாச்சியர் கோவிந்தராஜ் உடன் சென்றது. இது பற்றி காப்பாச்சியர் கூறும் போது கிருஷ்ணகிரி மாவட்டம் தமிழகத்திலேயே அதிகமான நடுகற்களை கொண்ட மாவட்டமாகும் வழக்கமாக நடுகல் மட்டும் அதிகமாக காணப்படும். அரிதாக நடுகல்லுடன் சேர்ந்த கல்வெட்டும் காணப்படும் . இது நடுகல்லோடு கூடிய கல்வெட்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது .நான்கு அடிக்கு ஆறு அடி அளவில் நடுகல் வீட்டோடு அமைந்துள்ளது. ஊரின் கோவில் மன்டுவின் ஆலமரத்தடியில் காணப்படுகிறது. தலைவன் சண்டையிடுவது போலவும் போரில் தலைவன் வீழ்ந்து இறந்ததையும் ,குதிரையும் மாண்டு போனதையும் சிறப்பாக காட்டி இருக்கிறார்கள் . புதுப்பற்றில் உள்ள பல்லேரிப்பள்ளியில் தலைவனுடன் பாதுகாப்புக்கு குதிரை வீரன் செல்கிறான் செல்லும் போது தலைவனை கொல்ல எதிரிகள் குதிரையுடன் வருகிறார்கள் . தலைவனை காப்பாற்ற வீரன் எதிரியின் குதிரையை கொன்று அவர்களை வீழ்த்தி தானும் தன் குதிரையுடன் இறக்கிறான் . இப்படி தலைவனுக்கான இறந்த வீரனின் சந்ததிக்கு பெரிய ஏரிக்கரையில் உள்ள நிலத்தை ஊர் மக்கள் தானமாக கொடுக்கிறார்கள் இது வீரனின் பரம்பரை பரம்பரையாக இவர்களுக்கானது என்ற வாசகம் தெளிவாக குறிப்பிடுகிறது இக் கல்வெட்டு புதுப்பற்றில் உள்ள பல்லேரிப்பள்ளியில் சர்வதானிய வருசத்தில் மாசிமாதத்தில் பொரிக்கப்பட்டதை குறிக்கிறது இன்றும் பல்லேரிப்பள்ளி . என்ற ஊர் தற்போதும் வருகிறது இறந்து போனவன் சிவபக்தன் என்பதை காட்டும் வண்ணம் மேற்பகுதியில் சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இவரும் உடன்கட்டை ஏறிய இவரின் மனைவியும் சிவலோகத்தை அடைவது காட்டப்பட்டுள்ளது. போர்க்காட்சி சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது . அதன்கீழ இறந்த விரன் உடல் கிடப்பதையும் தெளிவாக காட்டி இருக்கிறார்கள். 350-400 ஆண்டுகள் பழமையானதாகும் இந்த ஆய்வுப்பணியில் சதாநந்தகிருஷ்ணகுமார், ரவி, தமிழ்செல்வன். விஜயகுமார், மதிவாணன். கனேசன். டேவிஸ் பிரகாஷ் , ஆகியேர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment