பேரிகை
ஏரியில், 14ம்
நூற்றாண்டைச் சேர்ந்த ஒய்சாளர்களின் கடைசி
அரசன்
வீர
வல்லாளனின் நில
தானம்
கொடுத்த கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் அறம்
வரலாற்று ஆய்வு
மையத்தைச் சேர்ந்த அறம்
கிருஷ்ணன் தலைமையில், பிரியா,
மஞ்சுநாத், வெங்கடாசலபதி, மஞ்சுநாத் குமாரி,
ஆகியோர் ஒன்றிணைந்து செயல்பட்ட கள
ஆய்வில் இந்தக்
கல்வெட்டு இருப்பதை அறம்
வரலாற்று ஆய்வு
குழுவினர் கண்டறிந்துள்ளனர்.
ஒய்சாள
அரசன்
மூன்றாம் நரசிம்மனின் மகன்தான் மூன்றாம் வீர...
வல்லாளன் (கி.பி. 1291–1342). ஒய்சாள அரசன் வீர
ராமநாதனுக்குப் பிறகும் ஒய்சாள
அரசு
பல்வேறு பகுதியாக பிரிந்திருந்த நிலையில் வீர
வல்லாளன் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த
பிறகு
ஒய்சாள
அரசு
மீண்டும் ஒன்றாக
இணைக்கப்பட்டு, முகலாய
படை
எடுப்பிலிருந்து தென்பகுதியைக் காப்பாற்ற தனது
இறுதி
காலம்
வரை
போராடியது மட்டுமல்லாமல், தவிழ்
(தமிழ்)
ஒன்றிணைந்த பகுதிகளுக்கு ஒய்சாளர்களின் கடைசி
அரசனாகவும் இருந்தான். இப்பகுதியில் இவனோடு
ஒய்சாளர்களின் ஆட்சி
முடிவு
பெற்றது.
ஓசூரிலிருந்து பாகலூர் வழியாக 12 கி.மீ தூரம்...யணம் செய்தால் பேரிகை வருகிறது.
பேரிகை
பஸ்
நிலையத்தின் எதிர்பக்கம் ஏரியில்தான் ஒய்சாள
அரசன்
வீர
வல்லாளனின் கல்வெட்டு இருக்கிறது.
ஏரியின் கிழக்குக் கரைப்
பகுதியில் ஒட்டியிருக்கும் இக்கல்வெட்டு தூண்,
நான்கடி உயரமும் இரண்டடி அகலமும் கொண்டதாக ஏரிக்கரையை ஒட்டி
நடப்பட்டுள்ளது.
14ம் நூற்றாண்டில் செதுக்கப்பட்ட இந்தக்
கல்வெட்டானது ஒய்சாள
அரசன்
வீர
வல்லாளன் காலத்தில் இங்கு
குறிப்பிடும் பேரிகையில் உள்ள
திருவந்தீகரமுடைய நாயனாருக்கு நிலத்துண்டுகள் கொடுக்கப்பட்டதை குறிப்பிடுகிறது.
நன்றி அறம் கிருஷ்ணன்
https://maps.app.goo.gl/Rn3dcrk5VkU4G5d26
No comments:
Post a Comment