Tuesday, 19 May 2026

ஓசூர் சப் கலைக்டர் அலுவலகம் 150 ஆண்டுகள் பழமையானது

 


ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் (1845 - 1850) சேலம் மாவட்ட கலெக்டர் (சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல்) வால்டன் லிலியட், ஓசூரை சேலம் மாவட்டத்தின் தலைமையகமாக செய்தார். பின்னர் தலைநகரம் சேலத்துக்கு மாற்றப்பட்ட போதிலும் சேலம் மாவட்டத்தின் கோடைக்கால தலைநகராக ஓசூர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் முடியும்வரை நீடித்தது.

இப்படி பலரின் ஆட்சிக் காலத்தை கண்ட ஓசூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 1875ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி திறப்பு விழா காணப்பட்டது. 1947 ஆம் ஆண்டு சுதந்திர இந்தியாவில், இக்கட்டடம் சேலம் மாவட்டம், தருமபுரி மாவட்டத்தை தொடர்ந்து தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்திற்குட்பட்ட சார் ஆட்சியர் அலுவலகமாக செயல்பட்டு வருகிறது.


1947ஆம் ஆண்டு E.C. அல்லர்டீஸ் என்பவர் முதல் தற்போது 77வது சார் ஆட்சியராக சரண்யா IAS அவர்கள் பதவி வகித்து வருகிறார். 1875ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட ஓசூர் சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று 148வது பிறந்தநாள். தற்போது அரசு அலுவலகங்கள், கட்டடங்கள் 20 முதல் 30 ஆண்டுகள் பழுதடையாமல் இருப்பதே அரிதிலும் அரிது.

ஆனால், பிரம்மாண்டமான முறையில் பெரிய தூண்கள் அப்போதைய காலகட்டத்திற்கு ஏற்ப டிசைன்களால் ஓடுகள் அமைத்து கட்டப்பட்டுள்ளது. சுண்ணாம்பால் கட்டப்பட்ட சுவர்கள், இன்றுவரை கரையான்கள் அரிக்காமல் திடமாக நிற்கும் ஜன்னல் கதவுகள், மேலும் ஆங்கிலேயே காலத்தில் பயன்படுத்தப்பட்ட மரப்பெட்டி, மரமேஜைகள் இன்றளவும் எவ்வித சேதமின்றி பயன்பாட்டிலேயே உள்ளன.

ஒன்றரை நூற்றண்டுகளை கண்டுள்ள இந்த ஓசூர் சார் ஆட்சியர் அலுவலக கட்டடம், இனியும் ஒரு நூற்றாண்டு காலம் உறுதியாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. ஆங்கிலேயே ஆட்சிக்கால தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்ட சார் ஆட்சியர் அலுவலகம் இன்றும் கம்பீரமாய் நம் கண்முன் நிற்கிறது.





No comments:

Post a Comment

அதியமானின் அரச சின்னமான வில்லுடன் கூடிய நடுகற்கள் -அதியமான் தொகரப்பள்ளிக்கு படை எடுத்து வந்த போது எதிர்த்து போரிட்டு உயிரிழந்தவர்களின் நடுகல் தொகுதி -தொகரப்பள்ளி

  தொகரப்பள்ளி நடுகல்தொகுப்பு வீரத்தை போற்றும் நடுகல் தொகுப்பு 13 ஆம் நூற்றாண்டு மார்கழி 27 ஆம் தேதி புதுபற்று நாட்டு துவறப்பள்ளி ( தொகரப்பள்...