ஸுவஸ்திஸ்ரீ இரட்டைபாடி ஏழரை இலக்கமும் கொ
ண்டு கொல்லாபுரத்து ஜயத்தம்ப நாட்டி
ப் பேராற்றங்கரைக்குக் கொப்பத்தாசுவ மல்
லனை அஞ்சுவித்தருளி அவந் ஆணைகு
திறை பெண்டிர் பண்டார மகப்படவித்த
வீராஸிம்மாஸநத்து வீற்றிருந்தருளிந கோ
பரகேஸரி பன்மரான உடையார் ஸ்ரீ ராஜே
.png)
த.நா.அ.தொல்லியல் துறை தொடர் எண் : 114 / 1975
மாவட்டம் : கிருஷ்ணகிரி
வட்டம் : கிருஷ்ணகிரி
ஊர் : மோட்டூர்
மொழி : தமிழ்
எழுத்து : தமிழ்
அரசு : சோழர்
மன்னன் : இராசேந்திரன் II
ஆட்சி ஆண்டு : 5
வரலாற்று ஆண்டு : கி.பி. 11 ஆம் நூ.ஆ.
இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை : -
முன் பதிப்பு : -
ஊர்க் கல்வெட்டு எண் : 1
இடம்: விரண்ணன் கொல்லையில் உள்ள நடுகல்.
குறிப்புரை: இரண்டாம் இராசேந்திர சோழனது ஐந்தாவது ஆட்சியாண்டில் விஜைய ராசேந்திர சோழமண்டலத்துத் தகடூர் நாட்டுப் புல்லமங்கலத்தில் பாம்பு கடித்து இறந்தவனுக்காகவும் அவனுடன் தீபாய்ஞ்ச அவனது மனைவிக்காகவும் எடுக்கப்பட்ட நடுகல். கல் வீட்டமைப்பில் உள்ள இந்நடுகல்லின் பின்புறக் கல்லில் அவனும் அவனது மனைவியும் அமர்ந்த நிலையில் காட்டப்பட்டுள்ளனர். வலப்புறக் கல்லில் இக் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. மேலே இவர்கள் சொர்க்கத்திற்கு செல்கின்ற நிலையில் காட்டப்பட்டுள்ளனர்.
கல்வெட்டு:
ஸுவஸ்திஸ்ரீ இரட்டைபாடி ஏழரை இலக்கமும் கொள்
ண்டு கொல்லாபுரத்து ஜயத்தம்ப நாட்டி
ப் பேராற்றங்கரைக்குக் கொப்பத்தாசுவ மல்
லனை அஞ்சுவித்தருளி அவந் ஆணைகு
திறை பெண்டிர் பண்டார மகப்படவித்த
வீராஸிம்மாஸநத்து வீற்றிருந்தருளிந கோ
பரகேஸரி பன்மரான உடையார் ஸ்ரீ ராஜே
ந்திரதேவர்க்கு யாண்டு அஞ்சாவது
விஜைய ராஜேந்திர மண்டலத்துத் தகடூர்
நாட்டுக் கங்கநாட்டுப் புல்லமங்கலத்து
அவனரமச்சிபள்ளியில் இவந் மகந் சாமுண்
டந் பாம்பு கடிச்சி செத்தாந் இவந் மணவா
ட்டி விச்சிக்கந் தீபாஞ்சாள் அவள் ம[ர]
ணிபமாக நட...
.png)
No comments:
Post a Comment