Friday, 11 July 2025

ஜெகதேவி நெற்றிக்கண் விநாயகர்

தமிழ் நாட்டில் கல்லில் செதுக்கப்பட்ட புடைப்புச் சிற்பங்கள் பல்லவர் ஆட்சிக்காலத்துடனேயே தொடங்குகின்றன எனலாம். கோயில்களைக் குடைவரைகளாகக் கல்லில் உருவாக்கியது பல்லவர் காலத்திலேயேயாம். இக் காலக் குடைவரை கோயில்கள் பலவற்றில் புடைப்புச் சிற்பங்கள் ஏராளமாகக் காணப்படுகின்றன. மாமல்லபுரம் குடைவரைகளில் காணப்படும் புடைப்புச் சிற்பங்கள் இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. பின்னர் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்ட கற்றளிகளிலும் புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டன.
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு @KHRDT https://maps.app.goo.gl/bk4z7YVxKxRkSQQy8

No comments:

Post a Comment