Tuesday, 15 July 2025

வலைகாரப்பட்டி - மூங்கில் குட்டை ( கரகூர் அருகே ) கரிமலை குண்டு பாறை ஓவியம் - கிருஷ்ணகிரி மாவட்ட பாறை ஓவியம்-கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு @KHRDT

வில் ஏந்திய ஒருவனும் அவனுக்கு கீழ் பக்கம் இருவர் காட்டப்பட்டுள்ளனர் ஒருவன் கையை மேல்நோக்கியும் , ஒருவன் கீழ் நோக்கியும் கையை வைத்துள்ளனர் , இரண்டாமவன் இடையில் வாள் உள்ளது
தமிழகத்திலேயே பாறை ஓவியங்கள் அதிகம் உள்ள மாவட்டம் கிருஷ்ணகிரி . பொதுவாக பாறை ஓவியங்கள் வெண்சாந்து வகை , சிவப்பு, கருப்பு. ஆரஞ்சு நிறங்களில் வரையப்பட்டு இருக்கும் . அதில் வெண்சாந்து வகை ஓவியங்கள் 2000 ஆண்டுகள் பழமையானவையாக கருதப்படுகின்றன சில வரலாற்றுகாலத்தினை சேர்ந்தவையாகவும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. பாறை ஓவியங்கள் வரலாற்றுக்கு முந்தைய மனிதர்களின் வாழ்க்கை முறைகள், நம்பிக்கைகள், வழிபாடு மற்றும் கலைத்திறன் ஆகியவற்றைப் பற்றிய முக்கியமான சான்றுகளாகும்.
த ொடர்ச்சியான 5 மனித உருவங்கள் செல்வது போல் காட்டப்பட்டுள்ளது.
பாறையின் அமைப்பு இதன் விதான பகுதியில் தான் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது.
அருகே பாண்டில் விளக்கு காட்டப்பட்டுள்ளது . இது இறந்தவர்களின் நினைவுச்சின்னமாக இருக்கலாம்.
வளைக்காரப்பட்டி- மூங்கில் குட்டை பாறை ஒவியங்கள் Rock Paintings MUSEUM &KHRDT-கிருஷ்ணகிரிவரலாறு https://youtu.be/hedJTT3Qpmg
https://maps.app.goo.gl/YyQv4UJTuSbTPNWx8
நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவதில் உங்களின் உதவி எங்களுக்க தேவை . நாம் இணைந்தே இந்த வரலாற்றனை மேம்படுத்துவோம் . எனவே உங்கள் ஊரில் இப்படி நடுகற்கள் , கல்வெட்டுகள், பழைய கோவில்கள் இருப்பின் தெரியபடுத்தவும் , வாருங்கள் நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவோம் . தொடர்புக்கு
தலைவர் நாராயணமூர்த்தி 9442276076
ஒருங்கியைப்பாளர் தமிழ் செல்வன் 9787536970
காப்பாச்சியர் சிவக்குமார் 86809 58340
மேநாள் காப்பாச்சியர் கோவிந்த ராஜ் 79045 13987 வாட்சப்குழுவில் இணைந்திட
https://chat.whatsapp.com/I8E0HtvyuSBBghu4qII9sI?mode=r_c div class="separator" style="clear: both;">
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு @KHRDT

No comments:

Post a Comment