Sunday, 5 April 2020

94.13 ஆம் நூற்றாண்டில் ஆழ்வான்பள்ளி ஊரே தற்போதுள்ள ஆம்பள்ளியாகும்.

 பார்சுவநாதர் அல்லது பார்ஸ்வ (Parshvanatha) (Pārśvanātha)  மகாவீர்ருக்கு முந்தைய சமண  சமயத்தின் 23ஆவது தீர்த்தங்கரர் ஆவார்        இவர் கி. மு., 877-777-ஆம் ஆண்டில் வாழ்ந்த சமண சமயத் தலைவர்.

பகவான் பார்சுவநாதர், இச்வாகு குலத்தில், காசி நாட்டு அரசன் அஸ்வசேனா - ராணி வாமா தேவிக்கு வாரணாசியில் பிறந்தவர் முப்பது வயதில் உலக இன்பத்தை துறந்து துறவி ஆனார். பார்சுவநாதர் தொடர்ந்து 84 நாட்கள் கடும் தவம் இயற்றி ஞானம் அடைந்தார் தனது 100ஆவது அகவையில் முக்தி அடைந்தார். சமணர்களால் மிகவும் போற்றத்தக்கவராயிருந்தார்.
 பார்சுவநாதர் இவருடைய அடையாளம் தலைக்குமேல் குடையின் கீழ் பாம்பு படம் எடுத்தவாறு இருக்கும்,இவர் நாடெங்கும்     சமண சமயத்தைப்
பரப்புவதில் பெரும்பங்காற்றியவர். வேத வேள்விச் சமயத்தாரின்
தாக்குதல்களிலிருந்து இம்மதத்தைக் கட்டிக் காத்த பெருமையும்
இவருக்கு உண்டு.
 நான்கு வகைக் குழுக்களாகப் பிரித்துச் சமண சமயத்தைப்
பரப்பினார். ஆர்யதத்தர் என்ற துறவியின் தலைமையில் 16,000
துறவிகள், புட்பகுலர் என்ற பெண் துறவியின் தலைமையில்
38,000 குரத்திகள் (பெண் துறவியர்), சுவரதர் என்பவர்
தலைமையில் 1,64,000 இல்லற ஆடவர், சுநந்தர் தலைமையில்
3,27,000 இல்லறப் பெண்டிர் ஆகிய இவர்கள் மூலம் நாடெங்கும்
சமண மதம் பரவும் வழிவகைகளைப் பார்சுவநாதர் செய்தார்.
 விடுகாதழகிய பெருமாள் 13 ஆம் நூற்றாண்டில்   தகடூர் நாட்டை ஆட்சி செய்தவர் 
ஆழ்வான்பள்ளி என்று இக்கல்வெட்டில் குறிக்கப்படும் ஊரே தற்போதுள்ள ஆம்பள்ளியாகும். விடுகாதழகிய பெரும்பள்ளி என்ற தன் பெயரில் ஏற்படுத்திய சமணப்பள்ளிக்கு பள்ளிசந்தமாக கங்ககாமிண்டன் கட்டின ஏரி மற்றும் நிலத்தை விடுகாதழகிய பெருமாள் விட்டதை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது.


இடம் பர்கூர் ஆம்பள்ளியில்  

கல்வெட்டு புத்தகத்தின் பக்கத்தை அனுப்பிய சென்னையனுக்கு நன்றி 

இருப்பிடம்
12.453,78.42812.453,78.428

மேலும் வீடியோவில் பார்க்க
https://www.youtube.com/watch?v=fthhcc8QbuA

https://www.youtube.com/watch?v=U5dzFP-qhk0
எங்களால் இயன்றது .
 நன்றிகளுடன்..
அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் 
அருங்காட்சிய காப்பாச்சியர்
கோவிந்தராஜ்                                  -790453987
தலைவர் - நாராயணமூர்த்தி -  9442276076
செயலாளர் டேவிஸ்                     -9487723678
பொருளாளர் விஜயகுமார்      --9488830969
ஒருங்கிணைப்பாளர் 
தமிழ்செல்வன்                                 -9787536970
தங்கள் பகுதியில் ஏதாவது கல்வெட்டுகள் மற்றும் நடுகற்கள் பழமையான கோவில்கள் இருப்பின் எங்களுக்கு தெரிவியுங்கள் நம் கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுக்க வசதியாக இருக்கும்.
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி அருங்காட்சியகத்துடன் இணைந்து வரலாற்றினை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இது தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணிகிருஷ்ணகிரி வட்டாரக்கிளையின் ஜே.எஸ்.ஆர் கிருஷ்ணாஜி கல்வி அறக்கட்டளை நடத்துவதாகும்
இது தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கிருஷ்ணகிரி வட்டாரக்கிளையின் ஜே.எஸ்.ஆர் கிருஷ்ணாஜி கல்வி அறக்கட்டளை நடத்துவதாகும்


No comments:

Post a Comment

அங்கனப்பற்று - மகராசகடை - பாறை ஓவியம் -பனரத்து பண்டா- - MAHARAJAKADI -PANAMARATHUPANDA PREHISTORIC ROCK ART ( PAINTING ) புதிய கண்டறிதல்

மேலும் சிறப்பு பெறும் மகராசகடை ( அங்கனப்பற்று )பகுதி - நடன பாறை ஓவியம் -மகராசகடை மலை அடிவாரப்பகுதியில் உள்ள பனமரத்துபண்டா என்ற இடத்தில் ...