Tuesday, 28 April 2020

97.விஜயநகர மன்னர் முதலாம் தேவராயனின் 1407 ஆண்டு போத்தாபுரம் கல்வெட்டு என்ன சொல்கிறது

இரண்டாம் ஹரிஹரனின் மகனான முதலாம் தேவராயனின் காலத்தில் இக்கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. கி.பி.1407ம் ஆண்டைச் சேர்ந்த இக்கல்வெட்டு காடைய நாயக்கர் குமாரர் வரதைய நாயக்கரும், ஒருபரி நாயக்கர் குமாரர் இம்மடி நாயக்கரும், நாட்டவரும் இணைந்து ஒரு பௌர்ணமி நாளில் பையூர் பற்று பையுர் சீமையில் உள்ள வரதசமுத்திரத்தில் ஏரிகள் உட்பட நஞ்சை, புஞ்சை நிலங்களை பிராமணர்களுக்கு பிரமதேயமாக அளித்ததை இக்கல்வெட்டு விவரிக்கிறது.

விஜயநதரர் காலத்தில் சிறப்புற்றிருந்த சோமப்ப தண்டநாயக்கர் மகன் கண்டரகூளிமாராய நாயக்கன், இருகைய நாயக்கன் மகன் பொம்மைய நாயக்கன்,  ஆரோதன் ராமநாயன் பொன்னிக் கூத்தன், பொம்மைய நாயக்கன் மகன் திம்மைய நாயக்கன் வரிசையில் இக்கல்வெட்டு வாயிலாக காடைய நாயக்கர் குமாரர் வரதைய நாயக்கரும், ஒருபரி நாயக்கர் குமாரர் இம்மடி நாயக்கரும் வரலாற்றின் வெளிச்சத்துக்கு வருகின்றனர். ஏனெனில் இவர்களுக்கும் முறையே மஹாநாலங்க ராச ராயர் ழூவராய பசவஸங்கரன் பாஷைக்கு தப்புவ நாயக்கா,; கண்டந் மற்றும் பாஸரநாரி ஸஹோதர தாநவமுராரி ஆவகத்தாற்று மண்டலீகன் தலைகொண்ட கண்டன் ஆகிய பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளதை இக் கல்வெட்டுத் தெரிவிக்கிறது. இவர்கள் பையூர் பகுதியின் முக்கிய தலைவர்களாக இருந்துள்ளனர்.

அளிக்கப்பட்ட நிலத்தின் நான்கு எல்லைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. மொத்த நிலத்தை 18 பாகங்களாகப் பிரித்து
1.கோயிலுக்கு 2 பாகமும்,
2.காஸ்யப கோத்ரத்து விநாயக பட்டர், சவரி பெருமாள் பட்டருக்கு 2 பாகம்,
3.தந கோத்ரத்து சீராமதேவர், சிங்கபெருமாளுக்கு 1 பாகம்,
4.ஹரித கோத்ரத்து விருப்பணருக்கு 1 பாகம்,
5.ஜாமதக்நி விருஷ கேத்ரத்து நரசிம்ம தேவருக்கு 2 பாகம்,
6.பாரத்வாஜ கோத்ரத்து உமாபதி தம்பிரானுக்கும் எடுத்தமுதயார்க்கும் 2 பாகம், 7.ஷடமர்ஷன கோத்ரத்து திருவேங்கடமுடையார், மண்டலபுருஷர், சீரங்கநாதர் ஆகியோருக்கு 3 பாகம்,
8.காஸ்யப கோத்ரத்து சோனாம்பர பட்டருக்கு 1 பாகம்,
9.ஜமதக்நி கோத்ரத்து திருவேங்கடமுடையாருக்கும், அபிமாருக்கும் 2 பாகம்,
10.குண்டிந கோத்ரத்து பெருமாளுக்கு 1 பாகம்,
11.பாரத்வாஜ கோத்ரத்து பஞ்சநாராயணருக்கு ½ பாகம்,

12.தக் கோத்ரத்து இளையபெருமாளுக்கு ½ பாகம்
என பிரித்து இந்த தானம் அளிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டின் தொடக்கத்திலும் முடிவிலும் சமஸ்கிருத ஸ்லோகங்கள் வெட்டப்பட்டுள்ளன.
ஆய்வின்போது காப்பாச்சியர் கோவிந்தராஜ்  ,  சுரேஷ், அகத்தியன், அருங்காட்சியகப் பணியாளர்கள் கிருஷ்ணன், செல்வகுமார் உடனிருந்தனர்.
நான்கு அடிக்கு எழு அடி 65 வரிகள் கொண்ட அந்த கல்வெட்டின் ஒருபக்க தோற்றம் 





 நன்றிகளுடன்..
அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் 
அருங்காட்சிய காப்பாச்சியர்
கோவிந்தராஜ்                  -790453987
தலைவர் - நாராயணமூர்த்தி -  9442276076

செயலாளர் டேவிஸ்                     -9487723678

பொருளாளர் விஜயகுமார்              --9488830969
ஒருங்கிணைப்பாளர் 
தமிழ்செல்வன்                                 -9787536970
தங்கள் பகுதியில் ஏதாவது கல்வெட்டுகள் மற்றும் நடுகற்கள் பழமையான கோவில்கள் இருப்பின் எங்களுக்கு தெரிவியுங்கள் நம் கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுக்க வசதியாக இருக்கும்.
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி அருங்காட்சியகத்துடன் இணைந்து வரலாற்றினை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது

No comments:

Post a Comment

அங்கனப்பற்று - மகராசகடை - பாறை ஓவியம் -பனரத்து பண்டா- - MAHARAJAKADI -PANAMARATHUPANDA PREHISTORIC ROCK ART ( PAINTING ) புதிய கண்டறிதல்

மேலும் சிறப்பு பெறும் மகராசகடை ( அங்கனப்பற்று )பகுதி - நடன பாறை ஓவியம் -மகராசகடை மலை அடிவாரப்பகுதியில் உள்ள பனமரத்துபண்டா என்ற இடத்தில் ...