Saturday, 10 February 2018

7.history of krishnagiri மேல்பட்டி வரலாற்றுக்கு முற்பட்ட கலத்திய (7,000-3,000 B.C.) பாறை ஓவியங்கள்

கிருஷ்ணகிரியில் வரலாற்றுக்கு முற்பட்ட (மேல்பட்டி )காலத்திய பாறை ஓவியங்கள் (கிருஷ்ணகிரி வரலாறு)  history of krishnagiri.

 மேல்பட்டி பாறை ஓவியங்கள் கிருஷ்ணகிரியில் இருந்து மகராசகடை செல்லும் வழியில் 3கிமீ தொலைவில் மேல்பட்டி கிராமத்தில் இடதுபுறமுள்ள சிறு குன்றின் மீது உள்ள கவியில் (குகை போன்ற அமைப்பு). தோராயமாக 5000- 3000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது.

இவ்வெண்சாந்து ஓவியத்தில் மங்கலவிளக்கும். மலைமுகடுகளும் நட்சத்திர வடிவமும் . கட்டங்களுக்குள் கட்டங்களும் , கழுதை மீதுகையில் வாளுடன். அமர்ந்து செல்லும் வீரனின் ஓவியமும்.வரையப்பட்டுள்ளது


ஓவியத்துக்கு அருகே ஒரு கோயில் காணப்படுகிறது இதில் காளியம்மன் வழிபாடு நடக்கிறது.

 பாறை உடைப்பவர்களுக்கும் அதன் உரிமையாளருக்கும் நன்றி சொல்லவேண்டும் இப்பாறையை அவர்கள் உடைக்கப்போவதில்லை




 குகை அமைந்துள்ள இடம்

வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திய பாறை ஓவியங்கள் 

  வரலாற்றுக்கு முற்பட்ட காலம் என்பதற்கு எழுத்துகளைப் பயன்படுத்துவதற்கு முந்தைய காலம் என விளக்கம் தருவார் வரலாற்று அறிஞர் எச்.டி.சங்கலியா (H.D.Sankalia).

அக்கால மக்கள் தங்களது வாழ்வின் நிகழ்வுகளைப் பதிவு செய்ய வேண்டுமென்று எண்ணியதால் ஓவியங்களை வரைந்து இருக்கலாம். அவர்களுக்கு வேட்டையாடுதலே முக்கியத் தொழில். எனவே பல்வேறு மிருகங்களைத் தாம் வேட்டையாடுவது போல ஓவியங்களை வரைந்தால், வேட்டையாடும் போது அதிக மிருகங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலும், விலங்குகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் பெறலாம் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலும் அவற்றை வரைந்திருக்கலாம். 

No comments:

Post a Comment

அங்கனப்பற்று - மகராசகடை - பாறை ஓவியம் -பனரத்து பண்டா- - MAHARAJAKADI -PANAMARATHUPANDA PREHISTORIC ROCK ART ( PAINTING ) புதிய கண்டறிதல்

மேலும் சிறப்பு பெறும் மகராசகடை ( அங்கனப்பற்று )பகுதி - நடன பாறை ஓவியம் -மகராசகடை மலை அடிவாரப்பகுதியில் உள்ள பனமரத்துபண்டா என்ற இடத்தில் ...