Saturday, 24 February 2018

10.நீர் நமது வாழ்வாதாரம் 2 (லிங்கம்மா ஏரி)


பெயருக்கு எற்ப பின்புறம் லிங்கமாக தெரிகிறது
மொத்த பரப்பு 0.98 எக்டேர்  total AREA -0.98 Hectare
நீர் கொள்அளவு  10780 கனமீட்டர்  Capacity 10780 cum
கோடிபோனநாள் 02.10.2017
லிங்கம்மா ஏரி சையத் பாஷா மலையின் கிழக்கு திசையில் கால பைரவர் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ளது.சோழர் கால மதகும் அங்கு உள்ளது.தற்போது ஏரி நிறம்பி கோடி போகிறது.ஏரியில் கொட்டிக்கிழங்கு அதிகம் கிடைக்கிறது. இந்த உபரி நீர் பாப்பாரப்பட்டி ஏரியை சென்றுஅடையும் வண்ணம் கால்வாய் உள்ளது. .அதிகம் படர்ந்துள்ளது .கிருஷ்ணகிரி
ஒன்றியம் கிருஷ்ணகிரி மாவட்டம் (கணேசன் உடன்) அன்புடன் தமிழ்
The lingamma lake is on the way to the Bhairavar temple in the east direction of the Syed Basha mountain. There is also a temple of the goddess.  This surplus water paparapatti lake has a canal. .......Tamil Union of Krishnagiri (with Ganesan) in Tamil

பெயருக்கு எற்ப பின்புறம் லிங்கமாக தெரிகிறது
நு◌ாற்றாண்டுகளை  கடந்து நிற்கும் மதகு



ஏரி நிரம்பி கோடி போகும் போது கோடிக்கரையில் கங்கைக்கு (நீர்) கங்காபூசை செய்யப்படுகிறது. ஆடு போன்றவை பலியிடப்படுகின்றன

இந்த ஏரி நிரம்பி கால்வாய் வழியாக பாப்பாரப்பட்டி ஏரிக்கு செல்கிறது.






Friday, 23 February 2018

9.history of krishnagiri ஓர் வேட்டைக்கருவி (ஈட்டி )The spear is the weapon of ancient times


The spear is the weapon of ancient times  . ஈட்டி என்பது, இரும்பினால் செய்யப்பட்டு ஓர் கம்பால் இணைக்கப்பட்ட  ஒரு பண்டைய கால ஆயுதம் ஆகும்.  அதைக்கண்டு பள்ளிக்கு எடுத்துவந்து மாணவர்களுக்கு விளக்கினேன்.( I took it to school and explained to the students.)
 At the time of the king's guard, he would have a guarded guard. While hunting, the spear is taken for safety. மன்னரின் பாதுகாப்பின் சமயமும் கைகளில் ஈட்டி பொருந்திய கோலை காவலாளி வைத்து இருப்பார். வேட்டைக்கு செல்லும் போதும் பாதுகாப்புக்காக ஈட்டி எடுத்துச் செல்லப்படும் .

தமிழர் பண்பாட்டில்  ஈட்டி

பண்டையத் தமிழர்கள் ஈட்டி ஆயுதமாகப் பயன்படுத்தினர். அக்காலத்துப் போர்க்களங்களில் மற்றும் வேட்டையின் போதும் பயன்படுத்தப்பட்டது. பழங்காலத்தில் நேருக்கு நேர் வாள், வில், ஈட்டி முதலியன கொண்டு போரிடும் முறையே இருந்தது.Ancient Tamils used the weapon as a weapon. It was used during the time of battle and hunting. In ancient times there was a straightforward sword, bow, spear, etc.
ஓர் பழங்கால ஈட்டியை பார்க்கும் 5 தலைமுறைகளாக பாதுகாக்கப்படும் அந்த ஈட்டி  .


கனமான முங்கிலில் சித்திர வேலைப்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இது கவியரசு தாத்தா பாதுகாத்து வைத்திருந்தது.
மூங்கிலை பூச்சிகள் அரிக்காமல் இருக்க வேப்பம் எண்ணை அவ்வப்போது தடவி வந்துள்ளனர்
கம்பின் அடியில் தேள் போன்று வரையப்பபட்டுஇருந்தது


ஈட்டியை எறிந்து பார்த்தோம்

Saturday, 17 February 2018

8.history of krishnagiri நாம் வரலாற்றுக்கு முந்தய காலத்தில் பெத்ததாளாப்பள்ளி பாறை ஓவியங்கள்


பெத்ததாளாப்பள்ளி பாறை ஓவியங்கள் 

வரலாற்றுக்கு முந்தய காலத்தில் மனிதன் எழுத்துக்களை பயன்படுத்துவதற்கு முன்  வெண்சாந்து கொண்டு பாறைகளில் வரைந்தான்

மூன்று பேர் தங்கள் கையை து◌ாக்கிகொண்டு இருப்பது போன்ற படம் அருகே ஒரு சக்கரம் இல்லா வாகனத்தை ஓர் விலங்கு இழுத்து வருவது போன்ற மாதிரி வரையப்பட்டுள்ளது.
 வீடும் அருகே இருவர் மூன்று பேர் உள்ளது போல் ஓர் பாறையில் வரையப்பட்டுள்ளது.
 பாண்டில் விளக்கும் வளமைச்சின்னங்களும்
 பாறை அடியில் அம்மன் கோயில் அமைக்கப்பட்டுள்ளது.


பாண்டில் விளக்குகள் அதிகமாக காணப்படுகின்றது

 மனிதனின் உருவம்
 நண்பர் கனேசனுடன் நான் (தமிழ் செல்வன்)
 பாறை ஓவியங்களை காட்டிய பெத்ததாளாப்பள்ளி மாணவர்கள் அவர்களுக்கு நன்றி



 எதிரே உள்ள பாறையில் தான் பாறை ஓவியங்கள் உள்ளன
 பாறை ஓவியம் காண செல்லவேண்டிய வழி கிருஷ்ணகிரியில் இருந்து 4 கிமீ தொலைவில்
 மாவட்ட ஊராட்சி கட்டிடத்துக்கு எதிரே கீழ் உள்ளபடத்தில் உள்ள வழியில் செல்லவேண்டும்
http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/rock-paintings-of-iron-age-period-found-near-krishnagiri/article3829926.ece

Friday, 16 February 2018

01.நீர் நமது வாழ்வாதாரம் 1 (பையனப்பள்ளி ஏரி)


இதற்காக 12 ஆண்டுகள் காத்திருப்பு

(நீர் நமது வாழ்வாதாரம் பையனப்பள்ளி ஏரி கிருஷ்ணகிரி மாவட்டம் .)

அக்டோபர் 2017  ---- கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, பையனப்பள்ளி ஏரி, 12 ஆண்டுகளுக்கு பின் நிரம்பி, தண்ணீர் வெளியேறி வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி - பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில், குந்தாரப்பள்ளி அருகே உள்ள பையனப்பள்ளி ஏரி, 150 ஏக்கர் கொண்டது. 41855 கனமீட்டர் நீர் கொள்ளவு கொண்டது 





 இந்த வீடியோவில் பாருங்கள் கண் கொள்ளா காட்சி


இயற்கையாகவே பையனப்பள்ளி ஏரிக்கு ஏரியின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள மலைத்தொடர்களில் பெய்யும் மழை வேப்பனப்பள்ளி ஏரிகள் நிரம்பி வரும் நீர் பையனப்பள்ளி ஏரியை வந்து அடைகிறது


ஏரியில் அமைக்கப்பட்டுள்ள பழங்கால கருங்கல் மதகு

 நெடுஞ்சாலையில் இருந்து ஏரியின் தோற்றம்
ஏரி நிரம்பி வழிந்தோடு அழகிய காட்சி
ஏரி நிரம்பி வழிந்தோடு அழகிய காட்சி
ஏரி அமைந்துள்ள பகுதியின் படம் நீர் இல்லாமல் இருந்த போது
கண்டிப்பாக அரசுக்கு நன்றி சொல்லியாக வேண்டும்


பையனப்பள்ளி ஏரியில் 10 ஆயிரம் கன மீட்டர் பரப்பளவில் மண் எடுத்து ஏரிக்கரை பலப்படுத்தப்படும். மார்ச் மாதம் பணிகள் தொடங்கி 3 மாதத்துக்குள் நிறைவு பெற்றது (  பையனப்பள்ளி ஏரியில் திங்கள்கிழமை தொடங்கிய பணியை மாநில கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் பி.பாலகிருஷ்ணா ரெட்டி பார்வையிட்டார்.) இதன் காரணமாக அதியஅளவு நீர் தேக்கப்படுகிறது

Monday, 12 February 2018

Video மேல்பட்டி கிருஷ்ணகிரி பாறைஓவிய



விடியோவை பதிவிடுகிறேன்.
கிருஷ்ணகிரி மேல்பட்டி பாறை ஓவியங்கள் கிருஷ்ணகிரியில் இருந்து மகராசகடை செல்லும் வழியில் 3கிமீ தொலைவில் மேல்பட்டி கிராமத்தில் இடதுபுறமுள்ள சிறு குன்றின் மீது உள்ள கவியில் (குகை போன்ற அமைப்பு).அதில் உள்ள பாறை ஓவியங்கள் தோராயமாக 3000- 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

Saturday, 10 February 2018

7.history of krishnagiri மேல்பட்டி வரலாற்றுக்கு முற்பட்ட கலத்திய (7,000-3,000 B.C.) பாறை ஓவியங்கள்

கிருஷ்ணகிரியில் வரலாற்றுக்கு முற்பட்ட (மேல்பட்டி )காலத்திய பாறை ஓவியங்கள் (கிருஷ்ணகிரி வரலாறு)  history of krishnagiri.

 மேல்பட்டி பாறை ஓவியங்கள் கிருஷ்ணகிரியில் இருந்து மகராசகடை செல்லும் வழியில் 3கிமீ தொலைவில் மேல்பட்டி கிராமத்தில் இடதுபுறமுள்ள சிறு குன்றின் மீது உள்ள கவியில் (குகை போன்ற அமைப்பு). தோராயமாக 5000- 3000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது.

இவ்வெண்சாந்து ஓவியத்தில் மங்கலவிளக்கும். மலைமுகடுகளும் நட்சத்திர வடிவமும் . கட்டங்களுக்குள் கட்டங்களும் , கழுதை மீதுகையில் வாளுடன். அமர்ந்து செல்லும் வீரனின் ஓவியமும்.வரையப்பட்டுள்ளது


ஓவியத்துக்கு அருகே ஒரு கோயில் காணப்படுகிறது இதில் காளியம்மன் வழிபாடு நடக்கிறது.

 பாறை உடைப்பவர்களுக்கும் அதன் உரிமையாளருக்கும் நன்றி சொல்லவேண்டும் இப்பாறையை அவர்கள் உடைக்கப்போவதில்லை




 குகை அமைந்துள்ள இடம்

வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திய பாறை ஓவியங்கள் 

  வரலாற்றுக்கு முற்பட்ட காலம் என்பதற்கு எழுத்துகளைப் பயன்படுத்துவதற்கு முந்தைய காலம் என விளக்கம் தருவார் வரலாற்று அறிஞர் எச்.டி.சங்கலியா (H.D.Sankalia).

அக்கால மக்கள் தங்களது வாழ்வின் நிகழ்வுகளைப் பதிவு செய்ய வேண்டுமென்று எண்ணியதால் ஓவியங்களை வரைந்து இருக்கலாம். அவர்களுக்கு வேட்டையாடுதலே முக்கியத் தொழில். எனவே பல்வேறு மிருகங்களைத் தாம் வேட்டையாடுவது போல ஓவியங்களை வரைந்தால், வேட்டையாடும் போது அதிக மிருகங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலும், விலங்குகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் பெறலாம் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலும் அவற்றை வரைந்திருக்கலாம். 

அங்கனப்பற்று - மகராசகடை - பாறை ஓவியம் -பணரத்து பண்டா- - MAHARAJAKADI -PANAMARATHUPANDA PREHISTORIC ROCK ART ( PAINTING ) புதிய கண்டறிதல்

மேலும் சிறப்பு பெறும் மகராசகடை ( அங்கனப்பற்று )பகுதி - நடன பாறை ஓவியம் -மகராசகடை மலை அடிவாரப்பகுதியில் உள்ள பனமரத்துபண்டா என்ற இடத்தில் ...