
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி வரலாற்றை அருங்காட்சியகத்துடன் இணைந்து கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல்
Sunday, 6 July 2025
தம்மான்றள்ளி கல்வெட்டு -வீர ராஜேந்திரனின் 8 வது ஆட்சியண்டில் அத்திமல்லன் பூர்வதராயன் பேரில் இருந்த சித்திரமேழி பெரியநாட்டார் என்ற வணிகக்குழு ...- கிருஷ்ணகிரி மாவட்ட கல்வெட்டுகள்
கிருஷ்ணகிரியின் வரலாற்றை வெளிக்கொண்டு வரும் நோக்கில் நாராயணமூர்த்தி தலைமையில் செயல்பட்டு வரும் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வுமற்றும் ஆவணப்படுத்தும் குழு அருங்காட்சியக காப்பாச்சியர் , தொல்லியல் ஆய்வாளர் சுகவணமுருகன் , வரலாற்று ஆசிரியர் ரவி ஆகியோருடன வேப்பனப்பள்ளி ஒன்றியம் தம்மாண்ரஅள்ளி என்ற ஊரில் பசவராஜ் ஆசிரியர் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டது..
நாம் கண்டறியும் கல்வெட்டுகள் யாவும் வரலாற்றுக்கு ஒரு புதிய வெளிச்சத்தை தருவதாகவே உள்ளன. இக்கல்வெட்டும் அதற்கு ஏற்றார் போலவே உள்ளது. இதில் இரண்டு முக்கிய வரலாற்று செய்திகள் உள்ளன. முதலாவதாக பூர்வதராஜர் என்ற குறுநில மன்னர்கள் பற்றியது. நமது மாவட்டத்தில் இவர்களைப் பற்றிய தனித்த கல்வெட்டுக்களே அதிகம். ஓரிரண்டு ஒய்சாசாள கல்வெட்டுகளில் இவர்களது பெயர்கள் காணப்பட்டதால் சாந்த லிங்கம் அவர்கள் பூர்வா தராயர்களை ஓய்சளர்களின் குறுநில தலைவர்கள் என்றார். ஆனால் நாம் பார்த்த இந்த இக்கல்வெட்டில் முதன்முறையாக சோழர் ஆட்சி ஆண்டில் பூர்வாத ராயரின் பெயர் வந்துள்ளது.கல்வெட்டுச் வீர ராஜேந்திரனின் 8 வது ஆட்சியண்டில் அத்திமல்லன் பூர்வதராயன் பேரில் இருந்த சித்திரமேழி பெரியநாட்டார் என்ற வணிகக்குழு விரியூர் நாட்டில் கோமறு உடையார் என்ற கோயிலில் திருப்பணி பூசை முதலியவற்றை செய்ய பணம் தானமளித்த செய்தியை இக்கல்வெட்டு தெறிவிக்கிறது.மூன்றாம் ராஜராஜனின் ஆட்சியாண்டோடு ஒத்துவருவதால் இவருக்கும் வீரராஜேந்திரன் என்ற பெயர் இருந்திருக்கலாம்.(இருக்க வாய்ப்பில்லை என்பதை நீக்கிவிடவும்). அத்திமல்லன் (கி.பி.1260) குறிப்பிடப்படுவதால் தமிழ் ஆண்டை கருத்தில் கொள்ளாமல் இவனை மூன்றாம் ராஜேந்திரன் எனக்கொள்ளலாம். எனவே சோழர் வரலாற்றின் இறுதிகட்டத்தில் நிலவிய குழப்பமான சூழ்நிலையை இக்கல்வெட்டு வெளிச்சமிட்டு காடுவதாகக் கருதலாம். மேலும் விரிவான ஆய்வுக்கு இக்கல்வெட்டு அடித்தளம் இட்டிருக்கிறது.
யுடுப்
https://maps.app.goo.gl/5uDJjfbKnThNrCVQ6
நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவதில் உங்களின் உதவி எங்களுக்க தேவை . நாம் இணைந்தே இந்த வரலாற்றனை மேம்படுத்துவோம் . எனவே உங்கள் ஊரில் இப்படி நடுகற்கள் , கல்வெட்டுகள், பழைய கோவில்கள் இருப்பின் தெரியபடுத்தவும் , வாருங்கள் நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவோம் .
தொடர்புக்கு
தலைவர் நாராயணமூர்த்தி 9442276076
ஒருங்கியைப்பாளர் தமிழ் செல்வன் 9787536970
காப்பாச்சியர் சிவக்குமார் 86809 58340
மேநாள் காப்பாச்சியர் கோவிந்த ராஜ் 79045 13987
வாட்சப்குழுவில் இணைந்திட
https://chat.whatsapp.com/I8E0HtvyuSBBghu4qII9sI?mode=r_c
div class="separator" style="clear: both;">
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும்
ஆவணப்படுத்தும் குழு @KHRDT

Subscribe to:
Post Comments (Atom)
-
கிருஷ்ணகிரி ரயில்வே ஸ்டேசன் krishnagiri railway station Krishnagiri Train Station, Borivali N...
-
இது சாக்கியமாள் என்று இன்றும் வழிபாட்டில் இருக்கும் ஒரு பெண்ணுக்கான நடுகல் இதில் ஒரு கையை உயர்த்தி ஒரு விரலை காட்டும் வகையிலும் ,தோள்மாலை இ...
-
காணொலி - https://youtu.be/wmlf11rwjsw https://maps.app.goo.gl/c89C8B1bNXG2pRob6














No comments:
Post a Comment