தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி வரலாற்றை அருங்காட்சியகத்துடன் இணைந்து கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல்
Saturday, 7 June 2025
தேவர்முக்குளம் வணிகர்குழு -வீரத்தாவளம் பற்றி கூறும் தேவர்முக்குளம் ரங்கநாதர் கோயில் கல்வெட்டு -கிருஷ்ணகிரி @KHRDTமாவட்ட கல்வெட்டுகள்
கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகமும் கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் இணைந்து கிருஷ்ணகிரி மாவட்டம், தேவர்முக்குளம் கிராமத்தில் வணிகக்குழு கல்வெட்டினை புதிதாய் கண்டறிந்துள்ளது. இங்குள்ள பள்ளிகொண்ட பெருமாள் கோயிலில் கூரையில் வைத்துக் கட்டப்பட்டிருந்த முதலாம் ராஜேந்திரசோழனின் 18ம் ஆட்சியாண்டை சேர்ந்த வணிகக் குழு கல்வெட்டு, கோயிலை பிரித்து கட்டியபோது கீழே தனியே வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து அருங்காட்சியகக் காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது:
இக்கல்வெட்டு கூரையிலிருந்தபோது மத்திய தொல்லியல் துறையினரால் 1926ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்போது கிரந்த எழுத்துடன் கூடிய ஐநூற்றுவரின் சமஸ்கிருத மெய்கீர்த்தி மட்டும் வெளியில் தெரிந்ததால் துண்டு கல்வெட்டு எனப் பதியப்பட்டுள்ளது.
தேவர் முக்குளத்தில் பிரகாஷ் அந்த கற்குவியலை ஆராய்ந்த போது 1926ல் மத்திய தொல்லியல் துறையால் குறிப்பிடப்பட்ட துண்டு கல்வெட்டு உண்மையில் முழு கல்வெட்டு என்று 97 வருடங்கள் கழித்து தெரியவந்திருக்கிறது . அதை சுத்தம் செய்வது சிரமமாகத்தான் இருந்தது. உடன் காப்பாச்சியர் கோவிந்தராஜ் ,சதாநந்தகிருஷ்ணகுமார், நாராயணமூர்த்தி, பிரகாஷ், எம்.என் ரவி . தமிழ்செல்வன்
You tube
https://youtu.be/Vm1qV1xOYzQ
வேறு தகவல்கள் இல்லை. இது தற்போது வெளியில் உள்ளதால் அதன் இரண்டு பக்கமும் எழுத்துக்களைக் கொண்டிருப்பதை அறிய முடிகிறது. இக்கல்வெட்டு மேற்புறம் அரைவட்ட வடிவில் உள்ளது. ராஜேந்திர தேவரின் 18வது ஆண்டு என்பது மட்டும் தமிழிலும் அதனை தொடர்ந்து கிரந்தத்தில் சுலோகமும் அதனைத் தொடர்ந்து தமிழில் கல்வெட்டும் உள்ளது. கல்வெட்டின் கீழ்பகுதி உடைந்துள்ளது.
சோமையன் மகன் சாமுண்டன் என்ற வீரன் வீரகள் புத்திரனைக் கொன்ற மாளன் என்பவனைக் குத்தி கொண்டுவந்து சமயத்தாரிடம் நிறுத்துகிறான். இவனது வீரச் செயலைக் கண்டு மாப்புளியுமனைக் கொன்ற பணிய்மக்கள் மண்டலங்காக்கும் கண்டழி முதல் வாளையூர் ஐநூற்றுவாண்டான் வரை பல்வகை வீரர்களும் இணைந்து சாமுண்டன் பெயரில் வீரப்பட்டணத்தை உருவாக்கிய செய்தியை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. வீரப்பட்டணம் என்பது வீரர்கள் தங்குவதற்காக உருவாக்கப்படும் இடமாகும். எனவே 11ம் நூற்றாண்டில் தேவர்முக்குளம் சிறந்த வணிகத்தளமாக இருந்ததையும் அங்கு பல்வேறு வணிகக் குழுக்கள் இருந்து அவர்கள் தங்கள் பாதுகாப்புக்கென வீரர் படைகளை வைத்திருந்ததையும் அவ்வீரர்கள் தங்குவதற்கான வீரப்பட்டணம் இருந்ததையும் அறிகிறோம். அண்மையில் ஐகுந்தத்திலும் இத்தகைய வணிகக்குழுக்கள் இணைந்து வீரத்தாவளம் உருவாக்கிய செய்தியைக் கூறும் கல்வெட்டினை கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகமும் கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் இணைந்து கண்டு வெளிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும் என்றார்.
ஓர் புதிய கண்டறிதல் -தேவர்முக்குளம் வணிகத்தளமாக இருந்ததையும் அங்கு பல்வேறு வணிகக் குழுக்கள் இருந்து அவர்கள் தங்கள் பாதுகாப்புக்கென வீரர் படைகளை வைத்திருந்ததையும் அவ்வீரர்கள் தங்குவதற்கான வீரப்பட்டணம் இருந்ததையும் அறிகிறோம். அண்மையில் ஐகுந்தத்திலும் இத்தகைய வணிகக்குழுக்கள் இணைந்து வீரத்தாவளம் உருவாக்கிய செய்தியைக் கூறும் ..............
https://youtu.be/3xog53ryXs8
https://maps.app.goo.gl/XpkixY2USBD7xfgC7
நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவதில் உங்களின் உதவி எங்களுக்க தேவை . நாம் இணைந்தே இந்த வரலாற்றனை மேம்படுத்துவோம் . எனவே உங்கள் ஊரில் இப்படி நடுகற்கள் , கல்வெட்டுகள், பழைய கோவில்கள் இருப்பின் தெரியபடுத்தவும் , வாருங்கள் நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவோம் .
தொடர்புக்கு
ஒருங்கியைப்பாளர் தமிழ் செல்வன் 9787536970
காப்பாச்சியர் சிவக்குமார் 86809 58340
மேநாள் காப்பாச்சியர் கோவிந்த ராஜ் 79045 13987
வாட்சப்குழுவில் இணைந்திட
https://chat.whatsapp.com/EyXDAX0i4KB7eTAbItqtxh
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும்
ஆவணப்படுத்தும் குழு @KHRDT
Subscribe to:
Post Comments (Atom)
தளி ஏரிக்கரையில் இருந்த கல்வெட்டு தற்போது கெலமங்கலம் தாலுகா அலுவலகத்தில்
இப்படத்தில் உள்ள கன்னட உரையின் தமிழ் மொழிபெயர்ப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது: 81 21. தளி, ஏரிக்கரையின் மீது உடைந்த நிலையில் கிடக்கும் கல்லில...
-
கிருஷ்ணகிரி ரயில்வே ஸ்டேசன் krishnagiri railway station Krishnagiri Train Station, Borivali N...
-
இது சாக்கியமாள் என்று இன்றும் வழிபாட்டில் இருக்கும் ஒரு பெண்ணுக்கான நடுகல் இதில் ஒரு கையை உயர்த்தி ஒரு விரலை காட்டும் வகையிலும் ,தோள்மாலை இ...
-
காணொலி - https://youtu.be/wmlf11rwjsw https://maps.app.goo.gl/c89C8B1bNXG2pRob6












No comments:
Post a Comment