Tuesday, 23 July 2019

2500 years old menhir -2500 ஆண்டுகள் பழமையான குத்துக்கல் (சஜ்சலப்பள்ளி) MUSEUM &KHRDT - KRISHNAGIRI HISTORY

 கிருஷ்ணகிரி வட்டம் திப்பனப்பள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட சஜ்சலப்பள்ளி புதியதாக கட்டப்பட்டுள்ள ஊர் குட்டை மாரியம்மன் கோவில் அருகே குத்துக்கல்


 கிருஷ்ணகிரி தொன்மையும் பெருங்கற்கால எச்சங்களையும் வெளிகொணரும் பணியில் அருங்காட்சியகம்  மற்றும் கிருண்ஷகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும்குழு இணைந்து செயலாற்றி வருகிறது. ஆய்வுக்குழுவிற்கு  கிருஷ்ணகிரி வட்டம் திப்பனப்பள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட சஜ்சலப்பள்ளி புதியதாக கட்டப்பட்டுள்ள ஊர் குட்டை மாரியம்மன் கோவில் அருகே நடுகல்லும் வரலாற்று எச்சங்களும் உள்ளதாக தாசரிப்பள்ளி ஆசிரியர் திருவேங்கடம் அவர்கள் தகவல் அளித்ததன் அடிப்படையில் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டது. அங்கு பழைய மாரியம்மன் கோவிலை இடித்துவிட்டு புதிய மாரியம்மன் கோவிலை கட்டுவதற்கு நிலத்தை சமன்படுத்தி உள்ளனர் அப்போது ஒரு உயரமான கல்லை மட்டும் அப்படியே விட்டுள்ளனர். அது 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட குத்துக்கல் என அறியப்பட்டது. இவை குத்துக்கல் (menhir) அல்லது நெடுங்கல் என அழைக்கப்படுகின்றது .நிலைக்குத்தாக நாட்டப்பட்டுள்ள தனி நடுகல்லாகும் இது வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாகவே இறந்தோருக்காக அமைக்கப்படும் நினைவுச் சின்னமாகும். இப்பகுதியில் இருந்த கல்திட்டைகள் பல விவசாயத்துக்காக நிலத்தை சமன் படுத்தும் போது அழிந்து விட்டன. இது 8அடி உயரமும் நான்கு அடி சுற்றளவும் கொண்டு உள்ளது இது அப்பகுதியின் தலைவனுக்கானதாக இருக்கலாம் . உலகம் முழுவதும் இறந்தவர்களுக்கு குத்துக்கல் வைக்கும் வழக்கம் இருந்துள்ளது.குத்துக்கல்லைத் தமிழகத்தில் முன்னோர்களாக நினைத்து வணங்கி வழிபட்டு வந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 8 இடத்தில் உள்ளது இது 9வது இடமாகும்  தொல்லியலாளர் சுகவனமுருகன் தெரிவித்தார். இதற்கு அருகே சுமார் 300 ஆண்டுகள் பழமையான மாறுபட்ட உருவ அமைப்பில் புலிகுத்திப்பட்டான்கல் ஒன்றும் அப்பகுதி மக்களால் வழிபாட்டில் உள்ளது   இந்த வீரன் மொட்டை தலையுடனும் மீசை உடனும் உள்ளான் இவன் புலியுடன் சண்டையிடும் காட்சியும், அருகில் தீக்குளித்து இறந்த அவனது இரு மனைவிகள் உருவமும் உள்ளது ள்என அருங்காட்சிய காப்பாச்சியர் கோவிந்தராஜ் அவர்கள் தெரிவித்தார்   .   தாசரிப்பள்ளி ஆசிரியர் திருவேங்கடம் கூறுகையில் 5 மற்றும் ஆறாம் வகுப்புகளில் வரலாற்றுக்கு முந்தயகால வரலாறு பற்றி பாடம் வருகிறது அப்போது நமது மாவட்டதில் உள்ள வரலாற்று சான்றுகள் பற்றி கூறினோம் இதை தொடர்ந்து மாணவர்கள் ஆர்வம் அதிகரித்தது அவர்கள் இப்பகுதியில் நடுகல் பற்றி கூறியதன் படியே ஆய்வுக்குழுவுக்கு தெரிவித்தேன் என கூறினார. இந்த ஆய்வுப்பணியில் நாராயணமூர்த்தி . விஜயகுமார் பிரகாஷ். வரலாற்று ஆசிரியர் ரவி , திருச்செல்வன். தமிழ்செல்வன் கெண்ணடி வாணன், தலைமை ஆசிரியர் பாத்திமா மேரி ஆகியோர் ஈடுபட்டனர்
 The museum and the Krishnagiri History resersh and documentary Team are working on uncovering the Krishnagiri myth and the ancient remnants. The study was conducted on the basis of the information given by the Dasari Palli teacher Thiruvenkadam to the inspection team that the new building of the Sajsalapalli belonging to the Tipperanapalli Panchayat of Krishnagiri Circle is located near the Mariyamman temple. There they have demolished the old Mariamman temple and leveled the land to build the new Mariamman Kovil, leaving only a tall stone. It was known as piercing
2500 years ago. These are known as menhir or longitudinal .This is a monument to the dead from prehistoric times. Many of the colonies in the area have perished while leveraging land for agriculture. It is 8 feet high and four feet in circumference, possibly for the head of the region. Throughout the world there has been the practice of punching dead people. Archaeologist Sukavanamurugan said that this is the 9th place in Krishnagiri district. Near this is a 300-year-old variegated structure with a tiger head and a mustache. Dasari Palli teacher Thiruvenkadam said that there is a lesson in prehistoric history in the 5th and 6th grades. Then we told about the historical evidence in our district. This was followed by the interest of the students. Narayanamurthy in this study. Vijayakumar Prakash. Historian Ravi, Tiruchelvan. Thamilselvan Kennedy Wanan and Editor-in-Chief Fatima Marie were also









1980 களில் இருந்து இதுபோன்ற வரலாற்று சுவடுகளை பலர் பார்த்திருக்கலாம். இதையே கூட ஆவணப்படுத்தி இருக்கலாம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுபோன்ற வரலாற்று எச்சங்கள் இருப்பின் 9787536970 க்கு தகவல் கொடுக்கவும் நன்றி

No comments:

Post a Comment

அங்கனப்பற்று - மகராசகடை - பாறை ஓவியம் -பனரத்து பண்டா- - MAHARAJAKADI -PANAMARATHUPANDA PREHISTORIC ROCK ART ( PAINTING ) புதிய கண்டறிதல்

மேலும் சிறப்பு பெறும் மகராசகடை ( அங்கனப்பற்று )பகுதி - நடன பாறை ஓவியம் -மகராசகடை மலை அடிவாரப்பகுதியில் உள்ள பனமரத்துபண்டா என்ற இடத்தில் ...