ஆத்துக்கால்வாய் சென்று அடையும் பெரிய ஏரிக்கரையில் உள்ளது அங்கும்( ரத்னா நகர்) பெருமாள் கோவிலின் வலது புறம் பூசாரிக்காக நடுகல் அமைக்கப்படடுள்ளது. அதில் பூசாரி இடக்கையில் மணியை பிடித்துக் கொண்டும் வலதுகையில் தூபகிண்ணத்தை வைத்துள்ளார். தலையில் ருத்ராச்சமாலை கட்டியிருக்கிறார். அவரின் பின்புறம் ஒரு கோல் அமைக்கப்பட்டுள்ளது. பூசாரியின் அருகே காளை ஒன்று பூசாரியை நோக்கி அமைக்கப்பட்டுள்ளது. பூ சேகரிக்கும் கூடையை கையில் மாட்டிகொண்டுள்ளார். இவர் வலக்கை பழக்கம் உள்ளவராக இருக்கலாம். உள்ளது. இவர் இறந்த உடன் இவரின் மனைவி இவருடன் உடன்கட்டை ஏறி இறக்கிறார். எனவே இது ஒரு சதிக்கல் ஆகும் . குறைந்தது 250 வருடம் பழைமையானதாகும் . இதன் அருகே பழைமையான கோவில் கட்டுமாணம் போன்ற அமைப்பு உள்ளது . இருக்கும் என அருங்காட்சியக காப்பாச்சியர் கோவிந்தராஜ் அவர்கள் தெரிவித்தார்.
கல்லகுறுக்கி ஊரின் அருகே முனியப்பன் கோவிலை தாண்டி கால்வாயை ஒட்டிய பகுதியில் ஒரு இராமர் கோவில் உள்ளது அந்த கோவிலின் விளக்குத்தூண் . அதன் எதிரே வடக்கு பக்கம் பார்த்தவாறு ஆஞ்சனேயருக்கு கல்வீடு அமைக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு வலதுபுறம் கோவில் பூசாரிக்கு நடுகல் வீடு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதில் பூசாரி வலக்க்யில் மணியை பிடித்துக் கொண்டும் இடதுகையில் தூபகிண்ணத்தை வைத்துள்ளார். இவர் இடக்கை பழக்கம் கொண்டவராக இருக்ககூடும். தலையில் ருத்ராச்சமாலை கட்டியிருக்கிறார். அருகே பூ சேகரிக்கும் கூடையும் உள்ளது. இவர் இறந்த உடன் இவரின் மனைவி இவருடன் உடன்கட்டை ஏறி இறக்கிறார் எனவே இது ஒரு சதிக்கல் ஆகும்
https://youtu.be/P6Dqxyh7tOo
https://epaper.dinakaran.com/2284590/Salem-Main/14-08-2019#page/4/2
கிருஷ்ணகிரி மாவட்டம்
தமிழ்நாட்டிலேயே அதிக நடுகற்களைக் கொண்ட மாவட்டமாகும் .நடுகல் என்பது பெரும்பாலும்
வீரனுக்காக எடுக்கப்பட்ட நடுகல் தான் பெரும்பாலும் அறியப்படுகிறது. போரில் உயிர்நீத்த
வீரனுக்கும் ஆநிரை கவர்தல் பூசலில். வேட்டையில் இறந்தவர்களுக்கும் நடுகல் எடுப்பது
வழக்கமாக தமிழ்ர்களிடையே இருந்து வந்துள்ளது. ஆனால் கோவில் பூசாரிக்காக நடுகல் எடுப்பது
அபூர்வமே. அப்படிப்பட்ட இரண்டு நடுகற்கள் ஒன்று இடக்கை பழக்கமுடைய பூசாரியும் ஒன்று
வலக்கை பழக்கமுள்ள பூசாரியின் நடுகல்லும் ஆய்வு செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி வரலாற்றினையும் கிருஷ்ணகிரி மாவட்ட
மக்களின் பண்டைய கால வாழ்வியலையும் வெளிக் கொணரும் வகையில் அரசு அருங்காட்சியகம் மற்றும்
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு முயற்சிகளை எடுத்து வருகிறது.
அருங்காட்சிய காப்பாச்சியர் கோவிந்தராஜ் , ஆய்வாளர் சுகவணமுருகன் ஆய்வுக்கு குழு தலைவர்
நாராயணமூர்த்தி .வரலாற்று ஆசிரியர் ரவி ஆயியோர் தங்கள் குழுவினருடன் கல்லுகுறுக்கி
ஆத்துக்கால்வாய் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த இரண்டு நடுகற்களும் பெருமாள் கோவில்களிலே
அமைக்கப்பட்டுள்ளது. அந்த விளக்கு து◌ாண்களின் காலமும் 250 வருடங்கள் இருக்கலாம் ,
இரண்டும் கோவிலின் வலதுபுறம் அமைக்கப்பட்டுள்ளன. பூசாரிகளுக்கும் நடுகல் அமைக்கப்பட்டு
வரும் மரபு அக்காலத்தில் இருந்தது என்பதற்கான ஆதாரமாக இதைக் கொல்லலாம் . இது போன்ற
ஒரு நடுகல் அரசு கலைக்கல்லுரியில் வரலாற்று பேராசிரியர் வெங்கடேஷ்வரன் அவர்களால் கல்லு◌ாரி
காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. காலங்காலமாக நம் தமிழ் இன மக்களிடம் தொடரும்பண்பாட்டு
மரபுகளில் நடுகல் வழிபாடும் ஒன்றாகும், நேற்று நடைபெற்ற விழாவில் பூசாரியின் நடுகல்லுக்கும்
பூசை செய்யப்பட்டது. நடுகல் வழிபாடு இனத்தை செழிக்கச் செய்யும் என்ற நம்பிக்கை மக்களிடையே
காணப்படுகிறது. இந்த ஆய்வுப்பணியில் தமிழ்செல்வன். விஜயகுமார், மதிவாணன். கனேசன். பிரகாஷ்
,காவேரி , ஶ்ரீராமன் ஆகியேர் கலந்து கொண்டனர்.
..
No comments:
Post a Comment