Tuesday, 2 July 2019

63.1 சோழகோநார் விட்டநில(ம்)- 300 ஆண்டுகளுக்கு முந்தய தானப்பத்திரம் KHRDT & MUSEUM (HISTORY OF KRISHNAGIRI

 தானக் கல்வெட்டு கண்டெடுப்பு அனைவருக்கும் வணக்கம்.
சிறிய இடைவெளிக்குப் பின், காவேரிப்பட்டினம் பையூர் அருகே பழமையான கல்வெட்டு இருப்பதாக அறிந்து அதை காண, கிருட்டினகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு 

  தமிழ்ச்செல்வன், நாராயணமூர்த்தி, சுகவன முருகன், எம்.என்.இரவி, பிரகாஷ் இவர்களோடு மாருதி மனோகரன் ஆகியோர்
 பார்வையாக கிருட்டினகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் ஒன்றியம் அடுத்த பையூர் கோனார் கொட்டாய், சொக்கன் குட்டை, சுப்பிரமணியம் என்பவர் நிலத்தில் ஒரு பாறையில் இருக்கும் நாலு வரி கல்வெட்டினை காண சென்றோம்.
 வயலும் வயல் சார்ந்த தென்னை மரங்கள் சூழ, ஒரு பெரும் பாறை குன்று ஒட்டிய நிலத்தில் புதர் மண்டிய இடத்தில் அந்த கல்வெட்டு இருந்தது, உடனடியாக அந்த இடத்தை சுத்தம் செய்தபின், கல்வெட்டு வாசகத்தை படியெடுத்தோம்.

 அந்த கல்வெட்டு நான்கு வரிகள் கொண்டதாக இருந்தது....அதில்
நம்பியார் திருவண் எமது
ப் பெருமாளுக்கு மடப்புறம்
சோழகோநார் விட்டநில(ம்) நால்(வர்)
கண்டகம்......
அதாவது கோவிலுக்கு குறிப்பிட்ட நிலத்தை தானம் அளித்தற்கான கல்வெட்டு என திரு. சுகவன முருகன் அவர்கள் தெரிவித்தார்கள்.




 அந்த கல்வெட்டு பாறைக்கு அருகிலேயே அஸ்ட மங்கல சின்னங்கள் கொண்ட ஒரு கல்வெட்டும் இருந்தது. அதில் வரையப்பட்ட சூலம், தூப கலசம், பாதம், வெண் கொற்றகுடை, கண்ணாடி, ஸ்வஸ்திக் சின்னம் ஆகியவை காட்டப்பட்டுள்ளது.

இன்றும் அப்பகுதியில் கோனார்கள் வாழ்வது குறிப்பிடதக்கது


தவறு இறுப்பின் தெரிவிக்கவும்
தொலைபேசி எண் 9787536970
thamiltestf@gmail.com


No comments:

Post a Comment

அங்கனப்பற்று - மகராசகடை - பாறை ஓவியம் -பனரத்து பண்டா- - MAHARAJAKADI -PANAMARATHUPANDA PREHISTORIC ROCK ART ( PAINTING ) புதிய கண்டறிதல்

மேலும் சிறப்பு பெறும் மகராசகடை ( அங்கனப்பற்று )பகுதி - நடன பாறை ஓவியம் -மகராசகடை மலை அடிவாரப்பகுதியில் உள்ள பனமரத்துபண்டா என்ற இடத்தில் ...