Tuesday, 30 April 2019

1699 ஆம் ஆண்டின் பேராயிர உடையார் (சிவதாண்டவர்)-ஓரப்பம்-MUSEUM &KHRDT

சின்ன ஒரப்பம் எதிரே தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே ஏரிக்கரையில உள்ள திரௌபதியம்மன்  கோவில்ன் வடக்கு பக்கம் உள்ள தென்னந்தோப்பின் அருகே உள்ள பாறையில் இந்த கல்வெட்டு உள்ளது.
பாறையின் பெரும்பகுதி சிதைந்து இருக்கிறது. கல்வெட்டிலும் முதலில் உள்ள எழுத்துக்கள் சிதைந்து காணப்படுகின்றது.
சுமார் 321 ஆண்டுகளுக்கு முன்னர் பாலபாத துணியார் 
என்பவர் கடவுள் செல்லப் பிள்ளையாருக்கு 2 கழனியையும் 
பேராயிர உடையார் என்றழைக்கப்படும் சிவன் கடவுளுக்கு 
ஒரு கழனியையும் நீர்வார்த்து தானமாகக் கொடுத்த 
செய்தியை இக்கல்வட்டு தெரிவிக்கிறது..

10 ஆம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனுடைய ஆட்சியின்போது  சிதம்பரம் கோயிலிலே கவனிப்பாரற்றுக் கிடந்த திருமுறைகள் பூச்சிகளால் அரிக்கப்பட்டு அழிந்தவை போக எஞ்சியவற்றை, நம்பியாண்டார் நம்பி என்பவர் திருமுறைகளாகத் தொகுத்தார். அவற்றில் திருநாவுக்கரசர் எழுதிய ஆறாம் திருமுறை , திருவையாறுதிருத்தாண்டகத்தில்


ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும்
அனலாடி ஆரமுதே யென்றேன் நானே
கூரார் மழுவாட் படையொன் றேந்திக்
குறட்பூதப் பல்படையா யென்றேன் நாதனே
பேரா யிரமுடையா யென்றேன் நானே
பிறைசூடும் பிஞ்ஞகனே யென்றேன் நானே
ஆரா அமுதேயென் ஐயா றன்னே
யென்ணென்றே நானரற்றி நைகின் றேனே
 இதில் குறிப்பிடப்படும் திருவையாறு சிவனை திருநாவுக்கரசர் பேராயிரமுடையார் என்று குறிப்பிடுகிறார்
அந்த கோவிலுக்கு சென்றுவந்த சிவனடியார் இந்த கோவிலுக்கு பேராயிரமுடையார் கோவில் என பெயர் வைத்து இருக்கலாம். அல்லது சோழர் வழிவந்த ஒருவர் அப்பெயர் வைத்திருக்கலாம் . அதற்கு ஒரு கழனி நிலம் தானமாக கொடுத்திருக்கிறார் பாலபாத துணியார் என்பவர் 


கல்வெட்டு வாசகம் 
1. ஸ்ரீமது வெகுதானிய வருஷத்து ஆஷாட
2. மாதம் 10ம் தேதி பாலபாத
3. துணியார் செல்லப்பிள்
4. ளையாற்கு குடுத்த கழனி
5. இரண்டும் தாராபூறுவம்
6. இதன் மேற்கு கழனி ஒன்றும்
7. பேராயிர உடையாற்கு
8. தாரா பூறுவம்.

https://www.youtube.com/watch?v=Z0P1hfym9JQ





கோவிலின் வெளியில் பழைய கோவிலின் நந்தியும், கோவில் விமானத்தின் மேல்பகுதியும் உள்ளது.
கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள செல்லப்பிள்ளையார் சிலை இதுவாகவும் இருக்க வாய்புகள் உள்ளது.  அதேபோல் பேராயிரஉடையார் சுயம்பு லிங்கமும் இதுவாக இருக்க வாய்ப்பு உண்டு.இவை சின்ன ஒரப்பம் கோயிலில் உள்ளது
இந்த கோவில் 1870 (தோராயமாக) ஆண்டில் மறுகட்டமைப்பு செய்யப்படும் போது சிவத்தாண்ட தேவர்  ஆக கல்வெட்டில்குறிப்பிடப்படுகிறது ஆதாரம் 

 https://jsrkrishnaji.blogspot.com/2020/04/150-museum-history-of-krishnagiri.html

களப்பணியில் காப்பாட்சியர் கோவிந்தராஜ், நாராயணமூர்த்தி, டேவிஸ், விஜயகுமார் ஆகியோருடன் தமிழ்ச்செல்வன்.


எங்களால் இயன்றது . 
நன்றிகளுடன்..அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் 
அருங்காட்சிய காப்பாச்சியர்
கோவிந்தராஜ்                  -790453987
தலைவர் - நாராயணமூர்த்தி -  9442276076

செயலாளர் டேவிஸ்                     -9487723678


பொருளாளர் விஜயகுமார்              --9488830969
ஒருங்கிணைப்பாளர் 
தமிழ்செல்வன்                                 -9787536970
தங்கள் பகுதியில் ஏதாவது கல்வெட்டுகள் மற்றும் நடுகற்கள் பழமையான கோவில்கள் இருப்பின் எங்களுக்கு தெரிவியுங்கள் நம் கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுக்க வசதியாக இருக்கும்.
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி அருங்காட்சியகத்துடன் இணைந்து வரலாற்றினை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இது தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, கிருஷ்ணகிரி வட்டாரக்கிளையின் ஜே.எஸ்.ஆர் கிருஷ்ணாஜி கல்வி அறக்கட்டளை நடத்துவதாகும்



படித்து மற்றவர்களுக்கும் பகிரவும்

வாட்சப் லிங்

https://chat.whatsapp.com/I4EcVZsGimD7EO0x1Xsgpj

28 comments:

  1. 1699 ஆண்டின்
    1699-ஆம் ஆண்டின்

    ReplyDelete
  2. திரொபதியம்மன் கோவில்ன்
    திரௌபதியம்மன் கோவிலின்

    ReplyDelete
  3. எழுத்துக்கள்
    எழுத்துகள்

    ReplyDelete
  4. என்றழக்கப்படும்
    என்றழைக்கப்படும்

    ReplyDelete
  5. இக்கல்வட்டு
    இக்கல்வெட்டு

    ReplyDelete
  6. இராஜராஜ சோழனின் ஆட்சியின்போது
    இராஜராஜ சோழனுடைய ஆட்சியின்போது

    ReplyDelete
  7. குறட்பூதப் பல்படையா யென்றேன் நாதனே
    குறட்பூதப் பல்படையா யென்றேன் நானே

    ReplyDelete
  8. ஆரா அமுதேயென் ஐயா றன்னே
    ஆரா வமுதேயென் ஐயா றனே

    ReplyDelete
  9. யென்ணென்றே நானரற்றி நைகின் றேனே
    யென்றென்றே நானரற்றி நைகின் றேனே

    ReplyDelete
  10. வைத்திருக்கலாம் .
    வைத்திருக்கலாம்.

    ReplyDelete
  11. கோவிலின் வெளியில் உள்ள பழைய கோவிலின் நந்தியும் . கோவில் விமானத்தின் மேல்பகுதியும் உள்ளது.

    கோவிலின் வெளியில் பழைய கோவிலின் நந்தியும், கோவில் விமானத்தின் மேல்பகுதியும் உள்ளது.

    ReplyDelete
  12. உண்டு.இவை சின்ன ஒரப்பம் கோவிலில் உள்ளது
    உண்டு. இவை சின்ன ஒரப்பம் கோவிலில் உள்ளது.

    ReplyDelete
  13. செய்யப்படும் போது சிவத்தாண்ட தேவர் ஆக கல்வெட்டில்குறிப்பிடப்படுகிறது ஆதாரம்

    செய்யப்படும்போது 'சிவத்தாண்ட தேவர்' என கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறது. ஆதாரம்..

    ReplyDelete
  14. களப்பணியில் .காப்பாச்சியர் கோவிந்தராஜ் . நாராயணமூர்த்தி, டேவீஸ் .விஜயகுமார் இவர்களுடன் தமிழ்செல்வன் .

    களப்பணியில் காப்பாட்சியர் கோவிந்தராஜ், நாராயணமூர்த்தி, டேவிஸ், விஜயகுமார் ஆகியோருடன் தமிழ்ச்செல்வன்.

    ReplyDelete
  15. எங்களால் இயன்றது . நன்றி
    அருங்காட்சிய காப்பாச்சியர்


    நன்றிகளுடன்..
    அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ்

    ReplyDelete
  16. செயலர் டேவீஸ்
    செயலாளர் டேவிஸ்

    ReplyDelete
  17. தமிழ்செல்வன்
    தமிழ்ச்செல்வன்

    ReplyDelete
  18. தெவியுங்கள்
    தெரிவியுங்கள்.

    ReplyDelete
  19. அருங்காட்சியத்துடன்
    அருங்காட்சியகத்துடன்

    ReplyDelete
  20. நடத்துவதாகும்
    நடத்துவதாகும்.

    ReplyDelete

அங்கனப்பற்று - மகராசகடை - பாறை ஓவியம் -பனரத்து பண்டா- - MAHARAJAKADI -PANAMARATHUPANDA PREHISTORIC ROCK ART ( PAINTING ) புதிய கண்டறிதல்

மேலும் சிறப்பு பெறும் மகராசகடை ( அங்கனப்பற்று )பகுதி - நடன பாறை ஓவியம் -மகராசகடை மலை அடிவாரப்பகுதியில் உள்ள பனமரத்துபண்டா என்ற இடத்தில் ...