கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு அருங்காட்சியக காப்பாளர் திரு கோவிந்தராஜ் தலைமையில் அவதானப்பட்டி ஏரியின் மேற்கு பக்கத்தில் உள்ள மலையில் சுகவனமுருகன் அவர்கள் கூறியபடி இராமானுஜன் ஆசிரியர் அவர்களின் குறிப்பில் உள்ள மளவராயனம்பட்டிணம் கல்வெட்டை தேடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 1947 ஆம் ஆண்டு இப்பாறை ஓவியம் பார்வையிடப்பட்டு இருக்கலாம் என எண்னும்படி குறிப்பு உள்ளது கிருஷ்ணகிரி அவதானப்பட்டி ஏரியின் மேற்கு புறத்திலும் கிருட்டினகிரி அணை ஒட்டி அமைந்துள்ள கொத்தப் பள்ளி மலையில் உள்ள காட்டு பெருமாள் சாமி கோவிலின் தெற்கு பக்கமாக மலை மீது 1 கி.. மி தொலைவு சென்றால் இயற்கையாய் அமைந்த நீர் சுணையும் அருகே கல்யாண குண்டு என்ற பாறையின் அடியில் சுனையின் நீர் ஊற்று ஓடி பாறை அடியில் 4 அடி விட்டத்தில் நின்று பின் மலையின் கீழ் இறங்குகிறது அந்த கல்யான குண்டின் தெற்கு பகுதியில் 10 மனிதர்கள் ஓய்வு எடுக்கும் படி இடம் அமைந்துள்ளது அந்த விதானப்பகுதியில் பாறை ஓவியங்கள் மூன்று கட்டங்களாக வரையப்பட்டு உள்ளன இவற்றில் சில 2000 ஆண்டு முற்பட்ட பாறை ஓவியங்கள் காணப்படு கின்றது . முக்கியமாக ஒரு மனிதனின் தலைப்பகுதியில் இரு ஆண்டனாக்கள் போல் வரையப்பட்டுள்ள ஓவியம் பழமையானதாக காணப்படுகின்றது அவனின் பக்கத்தில் ஒரு விலங்கு தலைகீழாக வரையப்பட்டுள்ளது ..அவனின் கீழ் பகுதியில் விலங்குகள் ஆங்காங்கே காணப்படுகின்றன . இது மேய்தல் தொழிலைக்குறிப்பதாக இருக்கலாம் . பாறையின் தென்மேற்கு பகுதியில் குடில் போன்ற அமைப்பும் அதன் அருகே விலங்குகளின் படமும் குறியீடகளும் பாண்டில் விளக்குபோல் ஒரு ஓவியமும் வரையப்பட்டுள்ளது . மலைமுகடுகளை குறிக்கும் படமும் அதில் காணப்படுகிறது கீழ் பகுதியில் இரு கட்டங்களுக்கு மேல் கோலம் போன்று வரையப்பட்டுள்ளது அது குடியிருப்பாகவோ அல்லது இறந்தவர்களை அடக்கம் செய்வது போன்றதாகவோ இருக்கலாம் பக்கத்தில் இரு மனித உருவங்கள் காணப்படுகின்றன.
குழுவின் தலைவர் நாராயனமூர்த்தி ஏற்பாடுகள் செய்திருந்தார் . பொருளாளர் விஜயகுமார் உடன் ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் , ரவி ,மதிவாணன் டேவீஸ் ,பிரகாஷ் , செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதன் அருகே ஒரு தீப் பாறை (நூரம்பு )மழைமற்றும்
இயற்கை கால ஓட்டத்தில் இரண்டாக பிளந்து ஒரு பெண் முகத்தின் பின் ஓரு ஆண்முகம் இருஷ்ணகிரி அணையை நோக்கி ஓரு காதல் ஜோடி பார்ப் Uது போல் அமைந்துள்ளது இப்பாறை 30 அடி உயரம் கொண்டதாக உள்ளது
தூராத்திலிருந்து பார்த்தாலும் தெரியாது, பக்கத்தில் போய் பார்த்தாலும் தெரியாது....குறிப்பிட்ட இடத்தில் நின்று பார்த்தால் ஒரு ஆணும் பெண்ணும் அழகாய் பார்க்கும் பாஸ்போர்ட் சைஸ் அளவுக்கு முகங்கள் மட்டும் தெரியும் அளவில்...கற்பாறையில் அழகாய் காண முடியும்.
அருமையான பதிவு!
ReplyDelete