Tuesday, 30 April 2019

1699 ஆம் ஆண்டின் பேராயிர உடையார் (சிவதாண்டவர்)-ஓரப்பம்-MUSEUM &KHRDT

சின்ன ஒரப்பம் எதிரே தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே ஏரிக்கரையில உள்ள திரௌபதியம்மன்  கோவில்ன் வடக்கு பக்கம் உள்ள தென்னந்தோப்பின் அருகே உள்ள பாறையில் இந்த கல்வெட்டு உள்ளது.
பாறையின் பெரும்பகுதி சிதைந்து இருக்கிறது. கல்வெட்டிலும் முதலில் உள்ள எழுத்துக்கள் சிதைந்து காணப்படுகின்றது.
சுமார் 321 ஆண்டுகளுக்கு முன்னர் பாலபாத துணியார் 
என்பவர் கடவுள் செல்லப் பிள்ளையாருக்கு 2 கழனியையும் 
பேராயிர உடையார் என்றழைக்கப்படும் சிவன் கடவுளுக்கு 
ஒரு கழனியையும் நீர்வார்த்து தானமாகக் கொடுத்த 
செய்தியை இக்கல்வட்டு தெரிவிக்கிறது..

10 ஆம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனுடைய ஆட்சியின்போது  சிதம்பரம் கோயிலிலே கவனிப்பாரற்றுக் கிடந்த திருமுறைகள் பூச்சிகளால் அரிக்கப்பட்டு அழிந்தவை போக எஞ்சியவற்றை, நம்பியாண்டார் நம்பி என்பவர் திருமுறைகளாகத் தொகுத்தார். அவற்றில் திருநாவுக்கரசர் எழுதிய ஆறாம் திருமுறை , திருவையாறுதிருத்தாண்டகத்தில்


ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும்
அனலாடி ஆரமுதே யென்றேன் நானே
கூரார் மழுவாட் படையொன் றேந்திக்
குறட்பூதப் பல்படையா யென்றேன் நாதனே
பேரா யிரமுடையா யென்றேன் நானே
பிறைசூடும் பிஞ்ஞகனே யென்றேன் நானே
ஆரா அமுதேயென் ஐயா றன்னே
யென்ணென்றே நானரற்றி நைகின் றேனே
 இதில் குறிப்பிடப்படும் திருவையாறு சிவனை திருநாவுக்கரசர் பேராயிரமுடையார் என்று குறிப்பிடுகிறார்
அந்த கோவிலுக்கு சென்றுவந்த சிவனடியார் இந்த கோவிலுக்கு பேராயிரமுடையார் கோவில் என பெயர் வைத்து இருக்கலாம். அல்லது சோழர் வழிவந்த ஒருவர் அப்பெயர் வைத்திருக்கலாம் . அதற்கு ஒரு கழனி நிலம் தானமாக கொடுத்திருக்கிறார் பாலபாத துணியார் என்பவர் 


கல்வெட்டு வாசகம் 
1. ஸ்ரீமது வெகுதானிய வருஷத்து ஆஷாட
2. மாதம் 10ம் தேதி பாலபாத
3. துணியார் செல்லப்பிள்
4. ளையாற்கு குடுத்த கழனி
5. இரண்டும் தாராபூறுவம்
6. இதன் மேற்கு கழனி ஒன்றும்
7. பேராயிர உடையாற்கு
8. தாரா பூறுவம்.

https://www.youtube.com/watch?v=Z0P1hfym9JQ





கோவிலின் வெளியில் பழைய கோவிலின் நந்தியும், கோவில் விமானத்தின் மேல்பகுதியும் உள்ளது.
கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள செல்லப்பிள்ளையார் சிலை இதுவாகவும் இருக்க வாய்புகள் உள்ளது.  அதேபோல் பேராயிரஉடையார் சுயம்பு லிங்கமும் இதுவாக இருக்க வாய்ப்பு உண்டு.இவை சின்ன ஒரப்பம் கோயிலில் உள்ளது
இந்த கோவில் 1870 (தோராயமாக) ஆண்டில் மறுகட்டமைப்பு செய்யப்படும் போது சிவத்தாண்ட தேவர்  ஆக கல்வெட்டில்குறிப்பிடப்படுகிறது ஆதாரம் 

 https://jsrkrishnaji.blogspot.com/2020/04/150-museum-history-of-krishnagiri.html

களப்பணியில் காப்பாட்சியர் கோவிந்தராஜ், நாராயணமூர்த்தி, டேவிஸ், விஜயகுமார் ஆகியோருடன் தமிழ்ச்செல்வன்.


எங்களால் இயன்றது . 
நன்றிகளுடன்..அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் 
அருங்காட்சிய காப்பாச்சியர்
கோவிந்தராஜ்                  -790453987
தலைவர் - நாராயணமூர்த்தி -  9442276076

செயலாளர் டேவிஸ்                     -9487723678


பொருளாளர் விஜயகுமார்              --9488830969
ஒருங்கிணைப்பாளர் 
தமிழ்செல்வன்                                 -9787536970
தங்கள் பகுதியில் ஏதாவது கல்வெட்டுகள் மற்றும் நடுகற்கள் பழமையான கோவில்கள் இருப்பின் எங்களுக்கு தெரிவியுங்கள் நம் கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுக்க வசதியாக இருக்கும்.
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி அருங்காட்சியகத்துடன் இணைந்து வரலாற்றினை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இது தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, கிருஷ்ணகிரி வட்டாரக்கிளையின் ஜே.எஸ்.ஆர் கிருஷ்ணாஜி கல்வி அறக்கட்டளை நடத்துவதாகும்



படித்து மற்றவர்களுக்கும் பகிரவும்

வாட்சப் லிங்

https://chat.whatsapp.com/I4EcVZsGimD7EO0x1Xsgpj

Saturday, 20 April 2019

59- Snake bite dead -HERO STONEபாம்புகுத்திப்பட்டான் கல் - - ஓசூர் KHRDT HISTORY OF KRISHNAGIRI

 

Being a warrior was a snake bite.  This stone may have been remembered.

போர் வீரனாக இருந்த ஒருவன் பாம்பு கடித்து இறந்ததன் நினைவாக இந்த கல் எடுக்கப்பட்டு இருக்கலாம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மூக்க◌ாண்டப்பள்ளியில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே உள்ள அரசு பார்க்கின் கிழக்கு புறத்தில் இந்த நடுகல் உள்ளது. இது வழிபாட்டில் உள்ளது சிலர் அனுமார் என்றும் . சிலர் முனிஸ்வரன் என்று கூறுகிறார்கள்


Tuesday, 9 April 2019

59- HERO STONE PANAGAMUTULU- பணகமுட்டலு நடுகற்கள் 1 KHRDT HISTORY OF KRISHNAGIRI

பனகமுட்லுன் பெயர்  500 ஆண்டுகளுக்கு முன்னர் வண்ணக்கமுட்டல்
1. வண்ணக்கமுட்டலி லூரழியலி
2. ல் பட்ட காமிண்டர் கோவிந்
3. தாண்டை ஆந்தையந் அடியா
4. ன் பணிக்கமாராயன் மகன் படலன்
5. தாமய தண்ணாக்கன் படையை கெடு
6. த்திக் குத்தினதுக்கு உருபம் அடிப்பித்தா
7. ந் கோவிந்தாண்டை காணிகாத்தாண்
8. நட்டா
9. ன்.

பனகமுட்லுன் பெயர்  500 ஆண்டுகளுக்கு முன்னர் வண்ணக்கமுட்டல்
கிருஷ்ணகிரி மாவட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும் இப்பகுதியில் அதிக அளவிலான நடுகற்கள் காணப்படுகின்றன. இவற்றில் கல்வெட்டுக்களுடன் இருக்கும் நடுகற்கள் அப்பகுதியின் பெயர் மற்றும் போர் யார் யாருக்கும் முன்டது போன்ற முக்கிய தகவல்களை கொண்டதாக இருக்கும் இதன் மூலம் அக்கலாத்திய வரலாற்றினை அறிந்து கொள்ள முடிகிறது. இந்த வரலாற்றினை வெளி உலகிற்கு கொண்டு வரும் முயற்சியை கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு எடுத்துள்ளது அதனடிப்படையில்
கிருஷ்ணகிரி அருங்காட்சியக காப்பாச்சியர் மற்றும் தொல்லியல் ஆய்வாளர்  சுகவணமுருகன் , ஆய்வுக்குழுவின் தலைவர் நராயணமூர்த்தி செயலர் டேவீஸ் ஆகியோர் எற்பாடு செய்திருந்த கிருஷ்ணகிரி மாவட்டம் சாப்பரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பனகமுட்லு என்ற கிராமத்தில் அரசு மருத்துவமனைக்கு மேற்கே தொட்லாகவுண்டர் மகன் சுரேஷ் .என்பவரின் மாந்தோப்பில் சுமார் 500 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுடன் கூடிய நடுகல் இருப்பதை அறிந்து அதை படி எடுத்தனர்.

இந்த நடுகல்லில் வீரன் ஒருவன் வில்லேந்தி போரிடுவது போன்று வடிக்கப்பட்டுள்ளது. மேல்புறம் 9 வரிகளில் கல்வெட்டு உள்ளது.
இக் கல்வெட்டின் வாயிலாக தற்போது பனகமுட்லு என்று தற்போது அழைக்கப்படும் இந்த ஊர் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் வண்ணக்கமுட்டல்  என்று அழைக்கப்பட்ட செய்தி தெரியவருகிறது. அப்போது இந்த ஊரின்மீது படையெடுத்து வந்த தாமய தண்ணாக்கன் என்பவனது படையை அழித்து தானும் இறந்து போனான் காமிண்டர் கோவிந்தாண்டை ஆந்தையந் அடியான் பணிக்கமாராயன் மகன் படலன் என்ற வீரன். இவனது உயிர்த் தியாகத்தினை போற்றும் வகையில் இவனது உருவத்தை கல்லில் வடிக்கச செய்தார் கோவிந்தாண்டை. காணிகாத்தான் இக் கல்லை நட்டு வைத்தார் என்ற செய்திகளைத் தெரிவிக்கிறது இந்த கல்வெட்டு. இதன் அருகே இரண்டு நடுகற்கள் உடைந்த நிலையில் காணப்படுகின்றன.
இந்த ஆய்வுப்பணியில் தமிழ்செல்வன். மதிவாணன்,  காவேரி ,ரவி. விஜயகுமார் , பிரகாஷ், கணேசன், விமலநானன் ஆகியோர் ஈடுபட்டனர். ஊர் மக்கள் இப்பணிக்கு பெரு உதவியாக இருந்தனர்














58-Rock Painting -KALYANAKUNDU- கல்யாணகுண்டு பாறை ஓவியங்கள் KHRDT HISTORY OF KRISHNAGIRI




























கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு அருங்காட்சியக காப்பாளர் திரு கோவிந்தராஜ் தலைமையில் அவதானப்பட்டி ஏரியின் மேற்கு பக்கத்தில் உள்ள மலையில் சுகவனமுருகன் அவர்கள் கூறியபடி  இராமானுஜன் ஆசிரியர் அவர்களின் குறிப்பில் உள்ள மளவராயனம்பட்டிணம் கல்வெட்டை தேடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 1947 ஆம் ஆண்டு இப்பாறை ஓவியம் பார்வையிடப்பட்டு இருக்கலாம் என எண்னும்படி குறிப்பு உள்ளது கிருஷ்ணகிரி அவதானப்பட்டி ஏரியின்  மேற்கு புறத்திலும் கிருட்டினகிரி அணை ஒட்டி அமைந்துள்ள  கொத்தப் பள்ளி மலையில் உள்ள  காட்டு பெருமாள் சாமி கோவிலின் தெற்கு பக்கமாக மலை மீது 1 கி.. மி தொலைவு சென்றால் இயற்கையாய் அமைந்த நீர் சுணையும் அருகே கல்யாண  குண்டு  என்ற பாறையின் அடியில் சுனையின் நீர் ஊற்று ஓடி பாறை அடியில் 4 அடி விட்டத்தில் நின்று பின் மலையின் கீழ் இறங்குகிறது அந்த கல்யான குண்டின் தெற்கு பகுதியில் 10 மனிதர்கள் ஓய்வு எடுக்கும் படி இடம் அமைந்துள்ளது அந்த விதானப்பகுதியில் பாறை ஓவியங்கள் மூன்று கட்டங்களாக வரையப்பட்டு உள்ளன இவற்றில் சில  2000 ஆண்டு முற்பட்ட பாறை ஓவியங்கள் காணப்படு கின்றது  .  முக்கியமாக ஒரு மனிதனின் தலைப்பகுதியில் இரு ஆண்டனாக்கள் போல் வரையப்பட்டுள்ள ஓவியம் பழமையானதாக காணப்படுகின்றது அவனின் பக்கத்தில் ஒரு விலங்கு தலைகீழாக வரையப்பட்டுள்ளது ..அவனின் கீழ் பகுதியில் விலங்குகள் ஆங்காங்கே காணப்படுகின்றன . இது மேய்தல் தொழிலைக்குறிப்பதாக இருக்கலாம் . பாறையின் தென்மேற்கு பகுதியில் குடில் போன்ற அமைப்பும் அதன் அருகே விலங்குகளின் படமும் குறியீடகளும் பாண்டில் விளக்குபோல் ஒரு ஓவியமும் வரையப்பட்டுள்ளது . மலைமுகடுகளை குறிக்கும் படமும் அதில் காணப்படுகிறது   கீழ் பகுதியில் இரு கட்டங்களுக்கு மேல் கோலம் போன்று வரையப்பட்டுள்ளது அது குடியிருப்பாகவோ அல்லது இறந்தவர்களை அடக்கம் செய்வது போன்றதாகவோ இருக்கலாம் பக்கத்தில் இரு மனித உருவங்கள் காணப்படுகின்றன.
குழுவின் தலைவர் நாராயனமூர்த்தி ஏற்பாடுகள் செய்திருந்தார் . பொருளாளர் விஜயகுமார் உடன் ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் , ரவி ,மதிவாணன் டேவீஸ் ,பிரகாஷ் , செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதன் அருகே ஒரு தீப் பாறை (நூரம்பு )மழைமற்றும்
இயற்கை கால ஓட்டத்தில் இரண்டாக பிளந்து ஒரு பெண் முகத்தின் பின் ஓரு ஆண்முகம் இருஷ்ணகிரி அணையை நோக்கி ஓரு காதல் ஜோடி பார்ப் Uது போல் அமைந்துள்ளது இப்பாறை 30 அடி உயரம் கொண்டதாக உள்ளது

தூராத்திலிருந்து பார்த்தாலும் தெரியாது, பக்கத்தில் போய் பார்த்தாலும் தெரியாது....குறிப்பிட்ட இடத்தில் நின்று பார்த்தால் ஒரு ஆணும் பெண்ணும் அழகாய் பார்க்கும் பாஸ்போர்ட் சைஸ் அளவுக்கு முகங்கள் மட்டும் தெரியும் அளவில்...கற்பாறையில் அழகாய் காண முடியும்.


அங்கனப்பற்று - மகராசகடை - பாறை ஓவியம் -பணரத்து பண்டா- - MAHARAJAKADI -PANAMARATHUPANDA PREHISTORIC ROCK ART ( PAINTING ) புதிய கண்டறிதல்

மேலும் சிறப்பு பெறும் மகராசகடை ( அங்கனப்பற்று )பகுதி - நடன பாறை ஓவியம் -மகராசகடை மலை அடிவாரப்பகுதியில் உள்ள பனமரத்துபண்டா என்ற இடத்தில் ...