Friday, 18 January 2019

52.-779 (Hoysala Empire)ஆண்டுகளுக்கு முந்தய சோமீஸ்வரர் ஆலையம் பெல்லம் பள்ளி

779 ஆண்டுகளுக்கு முந்தய சோமீஸ்வரர் ஆலையம் பெல்லம் பள்ளி
"ஹோய்சாளப் பேரரசின் (Hoysala Empire) இரண்டாம் வீர நரசிம்மன் மகன்
வீர சோமேசுவரன் (1235–1254) காலத்தில் கட்டப்பட்டு இருக்க வேண்டும்"
 சதுர ஆவுடையார் கொண்ட லிங்கம் பழமையானதாக கருதப்படுகிறது.
இதுபோன்ற லிங்கங்களை சித்தர்கள் வழிபட்டதாக கூறுகிறார்கள். 


அழகான கருடகம்பம் நான்கு பக்கமும் சிவனுக்கான அடையாளங்கள்
கோலாட்டம் . பசு லிங்கத்துக்கு பால் சுரத்தல் , நடனமாடும் கலைனர்கள்
யானைகள்

சிவலிங்கத்துக்கு எதிரே அழகிய வேலைப்பாடுகளுடன் 1.5 அடி உயரத்தில் நந்தி கானப்படுகிறது.











கோவிலின் வெளிப்பக்கத் தோற்றம் .தெற்கு புற வாசலுடன் அமைக்கப்பட்டுள்ளது.
கோவிலின் து◌ாணில் அமைக்கப்பட்டுள்ள மானின் வடிவம்
#மானின் தத்துவம் :
மானின் நான்கு கால்களும் நான்கு வேதங்கள். சிவபெருமான் தாமே வேதப்பொருளாக உள்ளவர். இதை உலகிற்கு உணர்த்துவதற்காகவே மானை கையில் ஏந்தினார். வேதநாயகன் ஈசன் என்பதை அவரின் கையில் உள்ள மான் உணர்த்துகின்றது.





தருகா வனத்து முனிவர்களின் ஆணவத்தினை அழிக்கச் சிவபெருமான் திகம்பர மூர்த்தியாகச் சென்றார். அவருடைய அழகில் முனிவர்களின் மனைவிகள் மயங்க, கோபம் கொண்ட முனிவர்கள் தங்களுடைய யாகவலிமையால்  யானையை அனுப்ப, அதன் தோலினை ஈசன் போர்த்தார்.அந்த வடிவம் செதுக்கப்பட்டுள்ளது.

ஒருமுறை தர்மதேவதை.. இந்த உலகில் தான் அழியாமல் இருக்க வேண்டும் என்று எண்ணினாள். இதற்காக பரம்பொருளாகிய சிவபெருமானை வேண்டி கடும் தவம் இருந்தாள். சிவபெருமானும் தர்மதேவதையின் தவத்தால் மனம் மகிழ்ந்தார். பின்னர் அவள் முன் தோன்றிய சிவபெருமான், தர்மதேவதையிடம் தவம் இருந்ததற்கான காரணத்தைக் கேட்டார்.

அப்போது தர்மதேவதை சிவபெருமானை நோக்கி இரு கரம் கூப்பி வணங்கினாள். பின்னர், ‘எம்பெருமானே! எல்லா உயிரின் தேவ வடிவமானவரே! நான் தங்களின் வாகனமாக தங்களுக்கு பயன்பட வேண்டும்’ என்றாள். இறைவனும் அந்த வரத்தை அவருக்கு அருளினார். தர்மதேவதை ரிஷப உருவம் கொண்டவள். இதனால் சிவ பெருமான் ரிஷப வாகனத்தில் எழுந்தருளினார்.இது சாதாரண கருத்தை உணர்த்தவில்லை. இதனுள் மாபெரும் உண்மை உள்ளடங்கியுள்ளது. சிவன் வீற்றிருக்கும் வாகனம் சிவனுடைய பொருள் ஆகும். எனவே தர்மதேவதையின் ரிஷப வாகனமும் சிவபொருளாகி விடுகிறது. அதனால் அதற்கு அழிவு என்பது கிடையாது. உலகில் உள்ள எல்லா பொருட்களுக்கும் அழிவு உண்டு. ஆனால் தர்மத்திற்கு மட்டும் அழிவு என்பது இல்லை. இதனை உணர்த்தவே சிவபெருமான் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி உள்ளார்.




கருடகம்பத்தைச்சுற்றி அமைக்கப்பட்ட வடிவங்கள்

ஒருதலையுடன் கூடிய மூன்று மீன் உருவங்கள்
 
மேலும் விவரங்களுக்கு
https://www.youtube.com/watch?v=6P2FOeHDObY
 இப்பயணத்தில்
அருங்காட்சியக காப்பாளர் திரு . கோவிந்தராஜ்
 நாராயனமூர்த்தி
எம்.என் ரவி
கணேசன்
மதிவாணன்
விஜயகுமார்
பிரகாஷ் ஆகியோர்க்கு நன்றி .
இடம் கிருஷ்ணகிரியில் இருந்து ராயகோட்டை சாலையில் மாதேப்பட்டி கூட்டுரோடு சென்று அங்கிருந்து பெல்லம்பள்ளி செல்லவேண்டும் . அரசு ஆரம்பசுகாதார நிலையம் அருகே உள்ள வழியில் 1 கிமி சென்றால் சிவன் கோவில் உள்ளது
நன்றி
தவறு இருப்பின் 9787536970
அன்புடன் தமிழ்


No comments:

Post a Comment

அங்கனப்பற்று - மகராசகடை - பாறை ஓவியம் -பனரத்து பண்டா- - MAHARAJAKADI -PANAMARATHUPANDA PREHISTORIC ROCK ART ( PAINTING ) புதிய கண்டறிதல்

மேலும் சிறப்பு பெறும் மகராசகடை ( அங்கனப்பற்று )பகுதி - நடன பாறை ஓவியம் -மகராசகடை மலை அடிவாரப்பகுதியில் உள்ள பனமரத்துபண்டா என்ற இடத்தில் ...