Friday, 8 March 2019

தானைத்தலைவர் கிருஷ்ணாஜி அவர்கள் மகளிர் தினத்தில் வரலாற்று களப்பயணத்தை தொடக்கி வைத்தார்

ஜே.எஸ்.அர் கிருஷ்ணாஜி கல்வி அறக்கட்டளையும் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு இணைந்து பள்ளி மாணவிகள் அவர்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுடன் வரலாற்று களப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது.  மாணவிகளுக்கு கிருஷ்ணாஜி அவர்கள் குடிநீர் பாட்டில் வழங்கி தொடக்கி வைத்தார்




















Wednesday, 6 February 2019

நாட்டாமைக் கொட்டாய் நடுகல் HISTORY OF KRISHNAGIRI -KHRDT

 Underground Hero Stone .He was in his four  wifes
நிலத்துக்கடியில் ஓர் நடுகல். வீரனுடன் உடன்கட்டை ஏறிய 4 மனைவியரின் நடுகல்
https://www.youtube.com/watch?v=zltSHKDYrVY

 நாமம் சங்கு சக்கரம் இது இவன் ஒரு வைனவன் என்பதை காட்டுகிறது
 அருங்காட்சியக காப்பாளர் திரு கோவிந்தராஜ்

பத்திரிக்கை நண்பர்கள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வரலாற்று தடையங்கள் அதிகம் அறியப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் அதிகமான நடுகற்களை கொண்ட மாவட்டமாகவும் கிருஷ்ணகிரி மாவட்டம் உள்ளது. இந்த நடுகற்கள் மூலம் அந்த காலத்தில் வாழ்ந்த மக்களின் பண்பாட்டு முறைகளை அறிந்து கொள்ள முடிகிறது. அவ்வகையில்
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப் படுத்தும் குழுவினர் கிருஷ்ணகிரி -அவதானப்பட்டியை அடுத்த நாட்டாண்மை கொட்டாய் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஐயம் பெருமாள் கொட்டாய் வேடியப்பன் என்பவரின் வீட்டுக்கு வடக்கு புறத்தில்  பூமி மட்டத்திற்கு கீழே சுமார் 4.5 அடி உயரம் கொண்ட நடுகல் முன்று புறம் சுவர்போல் கற்ளை அமைத்து அதன் மேற்பகுதியில் 5 அடிக்கு 8 அடி அளவுகொண்ட பெரிய பலகை கல்லால் மூடப்பட்டுள்ளது அக்கல்லானது ஏறக்குறைய ஆயிரம் கிலோ எடை கொண்டதாக இருக்கும் .அதன் கிழக்கு புறம் வாசல் உள்ளது போல் அமைக்கப்பட்டுள்ள  நடுகல்லுடன் கூடிய கல்லறையை ஆய்வு செய்தனர். இது சுமார் 400 ஆண்டுகளுக்கு முற்பட்டது என அருங்காட்சியகக் காப்பாட்சியர் கோவிந்தராஜ் தெரிவித்தார். மேலும் இந்த நடுகல்லானது இறந்துபட்ட வீரனுடன் அவனது மனைவியர் நால்வரும் உடன்கட்டை ஏறியதற்காக எடுக்கப்பட்டுள்ளது.இந்த வீரன் படைத்தளபதியாகவோ .வீரர் கூட்டத்தின் தலைவனாகவோ இருக்கலாம். வீரனுக்கு இருபுறமும் இரண்டிரண்டு மனைவியர் காட்டப்பட்டுள்ளனர். இருவரது கைகளில் மதுக்குடம் உள்ளது. நடுகல்லின் மேல் நாமம் மற்றும் சங்கு சக்கரம் காட்டப்பட்டுள்ளன. இறந்த வீரன் ஒரு வைணவ பக்தன் என்பதை இது குறிக்கிறது.  கல்லரை மூடு கல்லின் மேல் சுற்றிலும் சிறு சிறு குழிகள் உள்ளன. இவை விளக்கெரிக்க பயன்பட்டிருக்கலாம் என காப்பாட்சியர் . தெரிவித்தார்.  ,இந்த இடத்தின் உரிமையாளர் வேடியப்பன் கூறுகையில் பரம்பரை பரம்பரையாக இந்த நடுகல்லை வழிவட்டு வருவதாகவும்  2007 ஆம் ஆண்டு முழுவதுமாக மண் மூடப்பட்ட நிலையில் சென்று விட்டபோது சாமி கணவில் வந்ததாகவும் அதன் பின் இதை செப்பணிட்டு வழிவட்டு வருகிறார்கள் . இந்த நடுகல் வீட்டின் அடிப்பகுதியில் இப்பொழுதும் நீர் தேங்கிய நிலையில் உள்ளது. இவ்வாய்வில் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவனப்படுத்தும்  ஆய்வுக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் எம்.என் ரவி. நாராயனமுர்த்தி, மதிவாணன், விஜயகுமார், பிரகாஷ் விமலநாதன் ஆகியோர் இடம்பெற்றனர். நாட்டாண்மைக் கொட்டாய் லட்சுமணன் இவர்களுக்கு உதவியாக இருந்தார்.








எங்களால் இயன்றது . நன்றி 
தலைவர் - நாராயணமூர்த்தி-  9442276076

செயலர் டேவீஸ்                               -9487723678

பொருளர் விஜயகுமார்              --9488830969
ஒருங்கிணைப்பாளர் 
தமிழ்செல்வன்                                 -9787536970
தங்கள் பகுதியில் ஏதாவது கல்வெட்டுகள் மற்றும் நடுகற்கள் பழைமையான கோவில்கள் இருப்பின் எங்களுக்கு தெவியுங்கள் நம் கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுக்க வசதியாக இருக்கும்.
MUSEUM &KHRDT - HISTORY of KRISHNAGIRI

https://youtu.be/zltSHKDYrVY
https://maps.app.goo.gl/79LXQuTN7PmhZWAd8

Monday, 21 January 2019

53. Different OLD GANGALARI ROCK PAINTING - கங்கலேரி பாறை ஓவியங்கள் -HISTORY OF KRISHNAGIRI -KHRDT

 கங்கலேரி தேன் மலை, பாறை ஓவியங்கள் . கிருஷ்ணகிரி ராயகோட்டை சாலையில் மலை சந்து என்ற இடத்தில் உள்ள மலையில் இந்த ஓவியங்கள் காணப்படுகின்றன. Kangaleri honey( thean)mountain, rock paintings. The paintings are found on the hill of Mali chandu  on the Krishnagiri Rayakottai road.
 இவை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மற்ற பாறை ஓவியங்களை விட மாறுபட்டு காணப்படுகின்றன . இதில் காணப்படும் இரு மனித உருவங்கள் தலை வட்ட வடிவமாக காட்டப்பட்டும் கண் , காது, மூக்கு  தனித்தனியே காட்டப்பட்டுள்ளன. தலையில் கொண்டை போன்ற அமைப்பு வரையப்பட்டுள்ளது.These are different from other rock paintings in Krishnagiri district. The two human figures are shown in the head circular shape and are shown separately from the eye, ear and nose. Head-like structure is drawn. இரு உருவங்களின் மேற்பகுதியில் விலங்கின் மீது மனிதன் உள்ளது போல் ஒரு ஓவியம் உள்ளது.At the top of both shapes

  Man on the animal   There is a painting like that.

 வட்ட முகம் கண் மூக்கு வரையப்பட்டு ஓர் மனிதன் நிற்பது போல் வரையப்பட்டுள்ளது.The circular face is drawn to the eye of a nose and a man is drawn
 தேன் மலை அடிவார மூனிஸ்வரன் கோவில் பின் இந்த ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன .These paintings are drawn after the  back Mountain base
 இந்த பாறையின் அடியில் தான் ஓவிங்கள் வரையப்பட்டுள்ளன.The
Rock's Ovens are drawing on the bottom



https://www.youtube.com/watch?v=dlmNG87SjKA
அன்புடன்
கோவிந்தராஜ்
எம்,என்.ரவி
விஜயகுமர்
கணேசன்
பிரகாஷ்
மதிவாணன்
தமிழ்செல்வன்


Friday, 18 January 2019

52.-779 (Hoysala Empire)ஆண்டுகளுக்கு முந்தய சோமீஸ்வரர் ஆலையம் பெல்லம் பள்ளி

779 ஆண்டுகளுக்கு முந்தய சோமீஸ்வரர் ஆலையம் பெல்லம் பள்ளி
"ஹோய்சாளப் பேரரசின் (Hoysala Empire) இரண்டாம் வீர நரசிம்மன் மகன்
வீர சோமேசுவரன் (1235–1254) காலத்தில் கட்டப்பட்டு இருக்க வேண்டும்"
 சதுர ஆவுடையார் கொண்ட லிங்கம் பழமையானதாக கருதப்படுகிறது.
இதுபோன்ற லிங்கங்களை சித்தர்கள் வழிபட்டதாக கூறுகிறார்கள். 


அழகான கருடகம்பம் நான்கு பக்கமும் சிவனுக்கான அடையாளங்கள்
கோலாட்டம் . பசு லிங்கத்துக்கு பால் சுரத்தல் , நடனமாடும் கலைனர்கள்
யானைகள்

சிவலிங்கத்துக்கு எதிரே அழகிய வேலைப்பாடுகளுடன் 1.5 அடி உயரத்தில் நந்தி கானப்படுகிறது.











கோவிலின் வெளிப்பக்கத் தோற்றம் .தெற்கு புற வாசலுடன் அமைக்கப்பட்டுள்ளது.
கோவிலின் து◌ாணில் அமைக்கப்பட்டுள்ள மானின் வடிவம்
#மானின் தத்துவம் :
மானின் நான்கு கால்களும் நான்கு வேதங்கள். சிவபெருமான் தாமே வேதப்பொருளாக உள்ளவர். இதை உலகிற்கு உணர்த்துவதற்காகவே மானை கையில் ஏந்தினார். வேதநாயகன் ஈசன் என்பதை அவரின் கையில் உள்ள மான் உணர்த்துகின்றது.





தருகா வனத்து முனிவர்களின் ஆணவத்தினை அழிக்கச் சிவபெருமான் திகம்பர மூர்த்தியாகச் சென்றார். அவருடைய அழகில் முனிவர்களின் மனைவிகள் மயங்க, கோபம் கொண்ட முனிவர்கள் தங்களுடைய யாகவலிமையால்  யானையை அனுப்ப, அதன் தோலினை ஈசன் போர்த்தார்.அந்த வடிவம் செதுக்கப்பட்டுள்ளது.

ஒருமுறை தர்மதேவதை.. இந்த உலகில் தான் அழியாமல் இருக்க வேண்டும் என்று எண்ணினாள். இதற்காக பரம்பொருளாகிய சிவபெருமானை வேண்டி கடும் தவம் இருந்தாள். சிவபெருமானும் தர்மதேவதையின் தவத்தால் மனம் மகிழ்ந்தார். பின்னர் அவள் முன் தோன்றிய சிவபெருமான், தர்மதேவதையிடம் தவம் இருந்ததற்கான காரணத்தைக் கேட்டார்.

அப்போது தர்மதேவதை சிவபெருமானை நோக்கி இரு கரம் கூப்பி வணங்கினாள். பின்னர், ‘எம்பெருமானே! எல்லா உயிரின் தேவ வடிவமானவரே! நான் தங்களின் வாகனமாக தங்களுக்கு பயன்பட வேண்டும்’ என்றாள். இறைவனும் அந்த வரத்தை அவருக்கு அருளினார். தர்மதேவதை ரிஷப உருவம் கொண்டவள். இதனால் சிவ பெருமான் ரிஷப வாகனத்தில் எழுந்தருளினார்.இது சாதாரண கருத்தை உணர்த்தவில்லை. இதனுள் மாபெரும் உண்மை உள்ளடங்கியுள்ளது. சிவன் வீற்றிருக்கும் வாகனம் சிவனுடைய பொருள் ஆகும். எனவே தர்மதேவதையின் ரிஷப வாகனமும் சிவபொருளாகி விடுகிறது. அதனால் அதற்கு அழிவு என்பது கிடையாது. உலகில் உள்ள எல்லா பொருட்களுக்கும் அழிவு உண்டு. ஆனால் தர்மத்திற்கு மட்டும் அழிவு என்பது இல்லை. இதனை உணர்த்தவே சிவபெருமான் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி உள்ளார்.




கருடகம்பத்தைச்சுற்றி அமைக்கப்பட்ட வடிவங்கள்

ஒருதலையுடன் கூடிய மூன்று மீன் உருவங்கள்
 
மேலும் விவரங்களுக்கு
https://www.youtube.com/watch?v=6P2FOeHDObY
 இப்பயணத்தில்
அருங்காட்சியக காப்பாளர் திரு . கோவிந்தராஜ்
 நாராயனமூர்த்தி
எம்.என் ரவி
கணேசன்
மதிவாணன்
விஜயகுமார்
பிரகாஷ் ஆகியோர்க்கு நன்றி .
இடம் கிருஷ்ணகிரியில் இருந்து ராயகோட்டை சாலையில் மாதேப்பட்டி கூட்டுரோடு சென்று அங்கிருந்து பெல்லம்பள்ளி செல்லவேண்டும் . அரசு ஆரம்பசுகாதார நிலையம் அருகே உள்ள வழியில் 1 கிமி சென்றால் சிவன் கோவில் உள்ளது
நன்றி
தவறு இருப்பின் 9787536970
அன்புடன் தமிழ்