Friday, 3 October 2025

கிருஷ்ணகிரி நவராத்திரி நிறைவு விழா - பழையபேட்டை -16 தேர் அணிவகுப்பு

-
கிருஷ்ணகிரி பழையபேட்டையில் நவராத்திரி நிறைவு - 2 ஆம் தேதி நல்லிரவு தொடங்கிய தேர் ஊர்வலம் 3 ஆம் தேதி காலை காந்திரோட்டில் 16 தேர்கள் அணிவகுத்து நின்று அருள்பாளித்தன. பின்னர் தேர்களுக்கு முன்பு வன்னி மரம் வெட்டும் நிகழ்ச்சியில் மராத்திய ராஜ வம்சத்தை சேர்ந்தவர் போர் வாளால் வன்னி மரத்தை வெட்டுகிறார் அதன் இலையை பக்தர்கள் எடுத்துக் கொள்கின்றனர். பின் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து பக்தர்கள் வழிபட்டனர். 1.சோமேஸ்வரர் கோயில் 2.கவிஈஸ்வரன் கோயில் 3. லட்சுமிநரசிம்மர் கோயில் 4.மலையப்ப சீனிவாச பெருமாள் கோயில் 5. துர்கா தேவி 6. காட்டினாம்பட்டி முருகர் கோயில் 7. கொசமேடு விநாயகர் கோயில் 8. கிருஷ்ணன் கோயில் 9. காமாச்சி அம்மன் கோயில் 10. முத்துமாரியம்மன் கோயில் 11. ராமர் கோயில் 12. பட்டாளம்மன் கோயில் 13. படிவேட்டம்மன் கோயில் 14 கோல்கட்டா காளி 15. மேல்தெரு மாரியம்மன் 16. ராமானுஜர் களத்தில் பாலாஜி , தமிழ்செல்வன் https://youtu.be/5E115eSMT8s

No comments:

Post a Comment