தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி வரலாற்றை அருங்காட்சியகத்துடன் இணைந்து கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல்
Tuesday, 30 September 2025
கிருஷ்ணகிரி மாவட்ட நடுகற்கள் காட்டும் வாழ்வியலும் வரலாறும்
கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகம், தொல்லியல் துறை, பள்ளிக்கல்வித்துறை, கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு இணைந்து மாவட்ட ஆட்சியருடன் கிருஷ்ணகிரி மாவட்ட காலமும் வரலாறும் என்ற தலைப்பில் ஒரு சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி 21.04.2025 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைக்கப்பட்டது அதன் தொடர்ச்சியான மூன்றாவது நிகழ்வு கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் ஞாயிறு அன்று (28.10.2025) நடைபெற்றது.
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு ஒருங்கினைப்பாளர் தமிழ்செல்வன் அவர்கள் ‘‘கிருஷ்ணகிரி மாவட்ட நடுகற்கள் காட்டும் வாழ்வியலும் வரலாறும்’’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நடுகற்களின் வகைகள் நவகண்டம், ஆநிரை கவர்தல், மீட்டல் நடுகல். புலிக்குத்திப்பட்டான் கல் . யானைக்குத்திப்பட்டான் கல். பன்றிக்குந்திப்பட்டான் கல் பாம்புக்குத்திப்பட்டான் கல், மற்றும் வீரர்கள் நடுகற்கள் அதில் உள்ள கல்வெட்டுகள் கூறும் காலம், அரசர்களின் எல்லைப்பகுதி அவர்களின் காலம் இவறினை அறிந்து கொள்வது. அந்த கால மக்களின் உடை, ஆபரணங்கள் , ஆயுதங்களின் வகைகள் மற்றும் ஏறுதழுவுதல் நடுகற்கள், அக்காலத்தில் இருந்து உடன்கட்டை ஏறும் வழக்கத்தினை உறுதிபடுத்தும் பீமாண்டப்பள்ளி நடுகல், அதியமானோடு போரிட்டு உயிர்துறந்த தொகரப்பள்ளி நடுகற்கள் இன்று வரை மார்கழி 27அன்று நடுகற்களை தொடர்ந்து வழிபடும் முறை, இந்த நடுகற்களை இன்றும் குல தெய்வமாக வழிபடும் வழக்கங்கள் கிருஷ்ணகிரி மாவட்த்தில் தொடர்வதர்கான நடுகல் ஆதாரங்களான, சாக்கியம்மாள், சிலைகாரப்பன், வேடியப்பன், குந்தியம்மாள் இவைகளும் விளக்கப்பட்டன, கல்வெட்டுகளின் காணப்படும் வட்டெழுத்து முதல் 3,00 ஆண்டுகளுக்கு முற்பட்ட எழுத்தமைதி பற்றியும் அவற்றினை படி எடுப்பது பற்றியும் மாணவிகளுக்க செய்து காட்டப்பட்டது, இந்நிகழ்வில் கிருஷ்ணகிரி மகளீர் மேநிலைப்பள்ளி நாட்டுநலப்பணித்திட்ட மாணவிகள் ஆசிரியைகள் அம்பிகா, ஜெயந்தி மற்றும் அருங்காட்சிய காப்பாச்சியர் சிவக்குமார், வரலாற்று ஆய்வுக்குழுவின் பாலாஜி, மாருதி மனோகரன், ஆகியோர் பங்கேற்றனர். இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை பணியாளர் பெருமாள் மேற்கொண்டார் ,
Subscribe to:
Post Comments (Atom)
-
கிருஷ்ணகிரி ரயில்வே ஸ்டேசன் krishnagiri railway station Krishnagiri Train Station, Borivali N...
-
இது சாக்கியமாள் என்று இன்றும் வழிபாட்டில் இருக்கும் ஒரு பெண்ணுக்கான நடுகல் இதில் ஒரு கையை உயர்த்தி ஒரு விரலை காட்டும் வகையிலும் ,தோள்மாலை இ...
-
1978 தமிழக்த்தில் கண்டறியப்பட்ட முதல் #பாறைஓவியம் 2000 ஆண்டுகளுக்கும் முற்பட்டது #மல்லப்பாடி . இது தமிழகத்தில் பாறை ஓவியத்தேடலை அதி...
























No comments:
Post a Comment