Sunday, 17 September 2023

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பழமையான விநாயகர்/ பழமையான சுடுமண் விநாயகர்/தமிழக நாணயங்களில் விநாயகர் #விநாயகர்சதுர்த்தி The oldest Ganesha (vinayagar ) of Krishnagiri district #GaneshaChaturthi #vinayagarchaturthi

காவேரிப்பட்டிணம் அருகே உள்ள தட்டக்கல் கூத்தாண்டேஸ்வர பெருமாள் கோவில் அருகே இரண்டு விநாயகர் சிலைகள் காணப்படுகின்றன அதில் ஒன்று 1200 வருடங்கள் பழைமையானது ஆகும் MUSEUM &KHRDT - HISTORY of KRISHNAGIRI The oldest Ganesha (vinayagar ) of Krishnagiri district #GaneshaChaturthi #vinayagarchaturthi 2023 https://youtu.be/7JN43Uo5oic
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் தொன்மையான விநாயகர் சிலை தட்டக்கல்லில் கண்டுபிடிப்பு நான்காம் நு◌ாற்றாண்டின் மத்தியில் இருந்து தமிழகத்தில் விநாயகர் வழிவாடு தொடங்குகிறது .விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மயிலம் வட்டாரத்தில் உள்ள ஆலகிராம விநாயகர் தமிழகத்திலேயே பழமையான விநாயகர் மூத்தவர்' என, தொல்லியல் அறிஞரும் கல்வெட்டு ஆய்வாளருமான விழுப்புரம் திரு.வீரராகவன் கருதுகிறார். இதற்கு அடுத்ததாக 6 ஆம் நு◌ாற்றாண்டின் பிள்ளையார்பட்டியில் இருந்து தொடங்குவதாக கருதலாம் அதற்கான கல்வெட்டு ஆதாரங்களும் அங்கு காணப்படுகின்றன. அதேப்போல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மிகப்பழமையான விநாயகர் சிலை உள்ளதை கிருஷ்ணகிரி மாவட்ட அருங்காட்சியகமும் , கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் பல்வேறு வரலாற்று சிறப்புக்களைக் கொண்ட தட்டக்கல் ஊரில் நாராயணமூர்த்தி தலைமையில் ஆய்வு மேற்கொண்ட போது கண்டறிந்தது.. தட்டக்கல் கூத்தாண்டவர் கோவில் அருகே வெளிப்பகுதியில் வைக்கப்பட்டு இருந்த விநாயகர் சிலையை கண்டு அதன் பழமை வடிவத்தை காப்பாச்சியர் கோவிந்தராஜ் விளக்கினார் . மிகவும் பழமை வாய்ந்த விநாயகர் சிலை பல்லவர் காலத்து விநாயகர் உருவமைப்பு போல் உள்ளது. பல்லவர்கள் காலத்தில் இப்பகுதியை கங்கர்கள் ஆண்டதற்கான கல்வெட்டுகள் இப்பகுதியில் கிடைத்திருக்கின்றன. எனவே கங்கர் கால விநாயகர்க்கான இலக்கணங்கள் கொண்டுள்ளது. இரண்டரை அடி உயரமுள்ள கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. குட்டியானையின் தலையும் குட்டி மகுடமும் சிறிய காதுகளும் நான்கு கரங்களும் உள்ளவாறு செதுக்கப்பட்டுள்ளது. அமர்ந்தநிலை அமைப்பு வழக்கமாக லலிதானசனமாக இல்லாமல் பத்மாசனமாக ,தமரை இதழ்மேல் அமர்ந்த நிலையில் தோன்றுவது சிறப்பு .இந்த சிலை 8 ஆம் நு◌ாற்றாண்டை சேர்த்ததாக இருக்க வாய்புண்டு என காப்பாச்சியர் தெரிவித்தார். பல்லவமன்னன் மூன்றாம் நந்திவர்மன் காலத்தில் இப்பகுதியை பல்லவர்களுடன் கூட்டணியில் இருந்து கங்கர்கள் ஆட்சிபுரிந்ததை வரலாற்று ஆதாரமாக கொள்ளலாம் (825-850) அதன்படி பார்த்தால் காப்பாச்சியர் கூறுவது போல் 1200 வருடங்கள் பழமையானதாக இருக்கும். தமிழக விநாயகர் சிலைப்பற்றிய ஆய்வில் இது முக்கிய இடத்தை பெறும் என ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் கூறினார் .தற்போது ஊர் கவுண்டர் அந்த சிலையை பாதுகாப்பாக ஊர் கோவிலில் பாதுகாப்பாக வைத்துள்ளது பாராட்ட தக்கது. மாருதி மனோகரன். விஜயகுமார், வரலாற்று ஆய்வாளர் கிருஷ்ணகுமார் ஊர்கவுண்டர் சக்ரவர்த்தி மற்றும் விவசாயசங்கத்தலைவர் கோவிந்தராஜ்,சுதர்சன், சவுந்தர்யா தமிழசெல்வன். ஆகியோர் ஆய்வுப்பணியில் ஈடுபட்டனர் The oldest Ganesha (vinayagar ) of Krishnagiri district #GaneshaChaturthi #vinayagarchaturthi 2023 https://youtu.be/31mZzw5VNK8
விநாயகர் சதுர்த்தி அன்று நாம் தமிழகத்தின் மூன்று பழமையான விநாயகர்சிலையும் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பழமையான விநாயகரும் பற்றி அறிந்து கொள்வோம் MUSEUM&KHRDT https://youtu.be/8CgA_xEupxI
15 - 16ம் நுாற்றாண்டுகளில், இன்றைய கோவைப் பகுதியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த, கொங்கு சேரர்கள், இந்தியாவிலேயே, முதன்முதலில், விநாயகர் உருவம் பொறித்த நாணயங்களை வெளியிட்டனர். அவர்களைத் தொடர்ந்து, தென்னிந்தியாவில் மிகப் பரந்த நிலப்பரப்பை ஆட்சி செய்த விஜயநகரப் பேரரசும், அதன்பின் தலையெடுத்த மதுரை, தஞ்சை, செஞ்சி நாயக்கர்களும், மராட்டியர்களும், ராமநாதபுரம் பகுதியை ஆண்ட சேதுபதிகளும் விநாயகர் நாணயங்களை வெளியிட்டுள்ளனர். கி.பி., 1693 முதல் 1801 வரை, இஸ்லாமிய அரசர்களான ஆற்காடு நவாபுகளின் ஆட்சி, தமிழகத்தில் வலுவாக இருந்தது. அவர்களும், தமிழக நாணயங்களில் கணபதிக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை அறிந்தனர். சமய நல்லிணக்கத்திற்காக, அவர்களின் நாணயங்களில் விநாயகர் உருவங்களை பொறித்தனர். வழக்கமாக, கோவில்களிலும், நாணயங்களிலும் அமர்ந்த நிலையில் இருந்த விநாயகருக்குப் பதிலாக, நிற்கும் விநாயகரான ஆநிருத்த கணபதி உருவத்தை முதன்முதலில் நாணயங்களில் பொறித்தவர்கள், ஆற்காடு நவாபுகள் தான். https://youtu.be/rjngppMNUn8
கீழ்பையூரில் ஆனந் அவர்கள் வீட்டில் நமது மாவட்டத்தில் 400 ஆண்டுகள் பழமையான சுடுமண் விநாயகர் இருக்கிறார் இன்னும் வழிபாட்டில் . நமது மாவட்டத்திலேயே சிறிய பழமையான சுடுமண் சிற்பம் இதுவே https://youtu.be/QGUe-W9M0P0
1490 ல் உடையார்களாலும் அதன் பின்பு நயக்கர்கள், பாளையக்காரர்கள், மன்னர் சேதுபதி ஆகியோர் நாணயங்களில் விநாயகரின் உருவம் பதித்து வெளியிட்டு உள்ளார்கள் இஸ்லாமிய நவாப்பும் கூட விநாயகர் உருவம் பதித்த நாணயங்களை வெளியிட்டுள்ளார் அவை உங்களுக்காக https://youtu.be/aTksqv__pXc

No comments:

Post a Comment

அங்கனப்பற்று - மகராசகடை - பாறை ஓவியம் -பனரத்து பண்டா- - MAHARAJAKADI -PANAMARATHUPANDA PREHISTORIC ROCK ART ( PAINTING ) புதிய கண்டறிதல்

மேலும் சிறப்பு பெறும் மகராசகடை ( அங்கனப்பற்று )பகுதி - நடன பாறை ஓவியம் -மகராசகடை மலை அடிவாரப்பகுதியில் உள்ள பனமரத்துபண்டா என்ற இடத்தில் ...