#புதியகற்காலம் இதிலிருந்து #பெருங்கற்படைக்காலம் வந்தது என்பது உண்மை அதேப்போல #நம்பமுடியாவிட்டாலும் #உண்மை - #தூக்கி வச்சான் கல் - நம்ப முடியாவிட்டாலும் உண்மை அது தான்
9. புதிய கற்காலம் என்பது, மனிதரின் தொழில்நுட்ப வளர்ச்சியின் ஒரு காலகட்டத்தைக் குறிக்கும். இக்காலகட்டத்தில் அவன் எந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இவ்வளவு பெரிய கல்லை தூக்கி வைத்திருப்பான் - நம்பமுடியா உண்மை 5 கற்களை கொண்டு 15 அடி நீளம்3அடி உயரம் 7 அடி அகலம் கொண்ட தூக்கி வச்சான் கல் https://youtu.be/P4zpZ8Xa9K0
8. கல்திட்டையின் தொண்மையான வடிவம் ---தொகரப்பள்ளி கற்திட்டை ஆய்வு -வழக்கமாக பார்க்க கூடிய வடிங்களை ஒட்டி இது இல்லை என்றாலும் நாம் பார்க்க கூடிய கற்திட்டைகளின் முன்னோடி வகையாக இது இருக்க கூடும்
7. அங்குசகிரி மலையில் மிகப்பெரிய கல்திட்டை உள்ளது . ,இது ஆராயப்பட வேண்டிய ஒன்று.
6. முதல்வரின் சொன்னதை உறுதி செய்யும் வகையில் மயிலாடும்பாறையில்
புதிய கற்கால கல்திட்டை கண்டுபிடிப்பு
தென்னிந்தியாவை பொருத்தமட்டில் இறந்தவர்களின் நினைவாக எழுப்பபடும் பெருங்கற்படைகள் இரும்புக் காலத்தை சேர்ந்தவை எனக்கருதப்பட்டு வரும் நிலையில் தற்போது அகழாய்வு நடந்துவரும் ஐகுந்தம் பகுதியில் இக்கலாச்சாரக் கூறுகளான கருப்பு சிவப்பு பானை வகை மற்றும் பெருங்கற்படைகள் புதிய கற்காலத்திலேயே தொடங்கிவிட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. இதுபற்றி அருங்காட்சியகக் காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறுவதாவது:
ஐகுந்தம் பகுதியில் சதாம் மற்றும் அண்ணாச்சி ஆகியோரின் உதவியோடு கிருஷ்ணகிரி அருங்காட்சியகமும் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் இணைந்து மேற்கொண்ட கள ஆய்வின்போது -புதிய கற்கால கல்திட்டை கண்டுபிடிப்பு -அருகே செஞ்சாந்து ஓவியத்துடன்
5. நம்பமுடியாத உண்மை - தூக்கி வைச்சான் பாறை - அத்தனை ஆயிரம் வருடங்களுக்கு முன் அவன் எப்படி நகர்த்தி முட்டு கொடுத்து நிறுத்தி இருப்பான் அதற்கு அவன் எதை பயன்படுத்தி இருப்பான் ...........
4. ஓர் 10000 - பத்தாயிரம் எடை உள்ள பாறையை எப்படி மூன்று கற்களை வைத்து நிறுத்தியிருப்பான் - இது நம்பமுடியாத உண்மை எலியன்ஸ் என்று பலர் கூறினாலும். 4000 வருடங்களுக்கு முந்தய மனிதன் இதற்காக என்ன தொழில்நுட்பத்தை பயன்படுத்தினான் என்பதை ஆய்வு செய்ய வேண்டும் . இறந்தவர்கள் நினைவாக வைக்கப்படும் இவ்வகை கற்களை ஆய்வு செய்வது நம் முன்னோர்களின் வாழ்வியல் முறையை மேலும் பின்னோக்கி செல்ல வழிவகை செய்யும்
3. நம்ம முடியா உண்மைகள் நம்ம கிருஷ்ணகிரியில் வியப்புதான் . எப்படி நடந்திருக்கும் , இது எப்படி சாத்தியப்பட்டு இருக்கும் 12000 கிலோ கருங்கலை ஒரு சரிவான பகுதியில் அனைவருக்கும் தெரியும் வண்ணம் நினைவுச்சின்னமாக வைத்திருக்கிறான் - தூக்கிவச்சான் கல் கிருஷ்ணகிரி -பர்கூர் -சின்னமட்டரப்பள்ளி ராஜிலு மலை
2. கல்திட்டையின் முன்னோடி -இவ்வளவு எடையை எப்படி தூக்கி வச்சான் என்பது தான் தெரிய வேண்டும் - நெம்புகோல் தத்துவம் என்று நினைத்தாலும் அந்த நெம்புகோல் எது தொடர் ஆய்வு மட்டும் தான் -மெய்பிக்க உதவும்
அத்தனையும் செய்து மெய்பிப்போம்
1. வியப்பான செய்திதான் 10 ஆயிரம் கிலோ எடை கொண்ட கல்லை 2000 ஆண்டுகளுக்கு முன் தூக்கி வைத்த பெருங்காற்கால மனிதன் திறமையே திறமைதான்
No comments:
Post a Comment