கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கண்டறியப்பட்ட முதல்
உரல் கல்வெட்டு
உலகத்தில் இருந்து ராயகோட்டை செல்லும் வழியில்
3 கிமி தொலைவில் இலகம்பதி என்ற இடம் உள்ளது அந்த இடத்தில்
பழைமையான கோவில் இருப்பதாக கூறினார்கள் அவ்விடத்தை கிருஷ்ணகிரி வரலாற்று
ஆய்வுக்குழு ஆய்வு செய்தது ஆய்வின் போது அந்த கோவில் மண்மேடாகத்தான்
காட்சியளித்தது 500 வருடங்களுக்கு முன்
கட்டப்பட்டு இருக்கலாம் என்பதை அருங்காப்பாச்சியர் கூறினார். அந்த இடந்தினை ஆய்வு
செய்த போது பூதேவி சிலை ஒன்று பாதி மண்ணில் புதைந்திருந்தது இந்த சிலை 500
வருடங்கள் பழைமையானது இது இந்த கோவிலுக்கு சொந்தமானதாக இருக்கும் என கூறினார் .சரவணக்குமார்
அவர்கள் உரலில் ஓர் கல்வெட்டு இருப்பதை கண்டறிந்தார். கோவிந்தராஜ் அவர்கள் கூறும்
போது உடனே அந்த இடத்தினை சுத்தம் செய்து அந்த கல்வெட்டு படிஎடுக்கப்பட்டு தற்போது
போல அக்காலத்தில் எண்ணை ஆட்ட இயந்திரங்கள் கிடையாது இதுபோன்ற உரல் செக்கில்
மாடுகட்டியே எண்ணை எடுத்தார்கள். இந்த உரலின் கிழக்குபக்கத்தில் 8 வரிகளை கொண்ட
தமிழ்கல்வெட்டு ஆகும் .இது 250 முதல் 300 ஆண்டுகள் பழைமையானதாகும் .இந்த செக்கு
உரலை பார்த்திப வருசத்தில ஆடி மாதம் முன்றாம் தேதி இலம்பாதன் என்பவருக்காக உரல்
செய்து தானமாக அளித்த செய்தியை கூறுகிறது இந்த பகுதி இன்றும் இக்கம்பதி என்று
அழைக்கப்படுவதாக ஊர் பெரியவர்கள் தெரிவித்தனர் இது இந்த ஆய்வில்
சதாநந்தகிருஷ்ணகுமார் , சரவணகுமார், தமிழ்செல்வன் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment