Wednesday, 6 October 2021

தமிழகத்தின் முக்கியமான வணிகக்கல் வெட்டா இது - ஐகுந்தம் கல்வெட்டு வாசகம்

 











1. ஸ்வஸ்திஸ்ரீ சம

2. ஸ்த பு(வ)ன விக்யாத வீர

3. .ர வீரஸாஸன அனேக கு

4. ன கனாலம்க்ரித ஸ்த்ய ஸே

5. ஸா ஸாரி ஸாரித்ரய ஸமை

6. சம்புன்ன வளஞ்சிய ஸ்ரீ

7. மர்ஹதாரி மக்களாகிய எ

8. யிநாட்டு திருப்பெறு மாடப்ப

9. ள்ளித்தளத்தைஞூற்றுவரோம் அ

10. ய்ங்குன்றத்து அய்கமநான மும்

11முறி தன்மசெட்டிக்கு வீரதாவள

12. மாக வைத்தபடி இவன் இருந்த ஊ

13. ரில் நமக்கள் வீரபெருநிரவிமா

14. ரும் நாட்டு செட்டிகளும் வந்தவன

15. றுமெய் கண்டு சோறு உண்பதாக

16. வும் பணமென்றும் பாவாடை

17. கொங்கவாரெழுநூறும் கண்டழி

18. மூலபத்திரரும் ஐய்யன்பொய்

19. களமடக்கி கீழ் மேற் காக்கை

பின்பக்கம்

20. நாநாதேசியும்

21. கொற்றக்குடைப் படை முன்

22. நூறும்

23. யென்றும் கொள்ளப்பெறு

24. தார்களாகவும் இப்பரிசல்ல

25. து செய்வார்கெங்கை இடை

26. குமரியிடைப்பட மாப்ப

27. ட்ட பாவத்தில் படுவார் இவ

28. ந் சிறிய தம்பபநு தமைய

29. நும் தொறுமீட்டுப்பட்ட

30. நன்மைகண்டு வைத்

31. தோம் இவன் பரியுடைமை

32. கண்டு வைத்தோம் தி

33 ருப்பெறுமாடப்பள்ளித் தளதை

34. ஞூற்றுவரோம் பதிலழிவாந்

35. நமில் வே.

36. ருவந்

37. ந்

38. பழவரி இவீர

39.நும் அப்பி

40. த்தம்பலமும்


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வணிகக்குழு கல்வெட்டு கண்டுபிடிப்பு


கிருஷ்ணகிரி மாவட்ட அருங்காட்சியகமும் கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் இணைந்து இப்பகுதியின் பல்வேறு வரலாற்றுத் தடயங்களை கண்டறிந்து வெளிப்படுத்திவருகிறது. இவ்வகையில் அண்மையில் ஐகுந்தம் சதாம் என்பவர் அளித்த தகவலின்பேரில் அவ்வூரில் உள்ள தனியார் கொல்லையில் கொட்டகை அமைத்து பாதுகாக்கப்பட்டுவரும் கல்வெட்டினை ஆய்வு செய்தனர்.

இக்கல்வெட்டு குறித்து அருங்காட்சியகக் காப்பாட்சியர் கோவிந்தராஜ்  கூறும்போது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிடைத்துள்ள முதலாவது முழு வணிகக்குழு கல்வெட்டு இதுவாகும். 7 அடிக்கு 4 அடி அளவுள்ள கற்பலகையின் இரண்டு பக்கமும் கோடுகள் வரைந்து அதனுள் எழுத்துக்களை 40 வரிகளில் அழகாக வெட்டியுள்ளனர். 12ம் நூற்றாண்டின் எழுத்தமைதியைக் கொண்ட கல்வெட்டின் முடிவில் சாமரம், பூர்ணகும்பம், குத்துவிளக்கு, பசுவும் கன்றும் ஆகிய உருவங்களை செதுக்கியுள்ளனர்.

வணிகக்குழுவினரின் ஒரு  பிரிவினரான வளஞ்சியரின் வடமொழி மெய்கீர்த்தியோடு கல்வெட்டு தொடங்குகிறது. திருப்பெறு மாடப்பளித் தளத்தைச் சேர்ந்த ஐநூற்றுவர் என்னும் வணிகக் குழுவினர் அய்ங்குன்றத்து  மும்முரி தன்மசெட்டி என்பவன் பெயரில் வீரதாவளத்தை உருவாக்குகின்றனர். வீரதாவளம் என்பது வணிகர்களைக் காக்கும் படைவீரர்கள் தங்கும் இடமாகும். பெருநிரவியார், நாட்டு செட்டிகள், கொங்கவார் எழுநூறு, கண்டழி, மூலபத்திரர், ஐம்பொழில், களமடக்கி, கீழ்மேற்காக்கை, நானாதேசி ஆகிய வணிகக் குழுக்கள் குறிப்பிடப்படுகின்றனர். அரசர்கள் வைத்துக்கொள்ளும் கொற்றக்கொடை, முன்னூறு படைவீரர்கள் ஆகியவற்றை இவர்கள் என்றும் வைத்துக்கொள்ள உரிமைப் பெற்றவர்கள். 

கவர்ந்து சென்ற கால்நடைகளை மீட்கும்போரில் தன்மசெட்டி, சிறியதம்பப்பன் மற்றும் இவனது தமையனும்  இறந்துவிட்டனர். இவர்களது உயிர்த்தியாகத்தை போற்றும் வகையில் இவ்வீரதாவளம் திருப்பெறு மாடப்பள்ளித் தளத்து ஐநூற்றுவர் என்ற வணிகக் குழுவினரால் உருவாக்கப்பட்ட செய்தியை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது. இக்கல்வெட்டின் வாயிலாக ஐகுந்தம் என தற்போது அழைக்கப்படும் ஊர் அய்ங்குன்றம் என அழைக்கபட்டது என அறிகிறோம். மேலும் இது வணிகர்கள் பயணம் மேற்கொள்ளும் பண்டைய பெருவழியில் அமைந்துள்ளது என்பதையும் அவ்வாறு பயணம் மேற்கொள்ளும் வணிகர்களின் தங்கும் இடமாகவும் இருந்துள்ளதையும் அறிகிறோம். அவ்வாறு தங்கியிருப்போரின் செல்வத்தை காக்கும் போர் வீரர்களும் உடன் தங்கியிருந்தனர். அவ்வாறு தங்கியிருக்கும்போது அவர்களின் கால்நடைகளை கள்வர்கள் கவர்ந்து சென்றுவிட அதனை மீட்கும் போரில் வீரர்களில் சிலர் இறந்துவிட அவர்களது நினைவாக வீரர்கள் தங்கும் இடத்தை இவ்வணிகக் குழுவினர் உருவாக்கியுள்ள செய்தியை இக்கல்வெட்டுத் தெரிவிக்கிறது. தமிழக வணிகக்குழுக் கல்வெட்டுக்களில் அய்குந்தம் வணிகக்குழுக் கல்வெட்டு சிறப்பிடம் பெறும் ஒன்றாக உள்ளது எனத் தெரிவித்தார். இது இம்மாவட்டத்துக்கு கிடைத்த மற்றுமொரு சிறப்பாகும்.

தருமபுரி அகழ்வைப்பக தொல்லியல் அலுவலர் பரந்தாமன், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும்குழு ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், விஜயகுமார் மற்றும்...ஆகியோர் இக்கள ஆய்வின்போது உடனிருந்தனர்.      

300 படைவீரர்கள் அந்த  வணிகர்களுக்குபாதுகாப்பாக இருந்தனர். அவர்கள் தங்க இடம் உணவு…………. – இப்படி பட்ட ஒரு கல்வெட்டு ஐகுந்தம் சதாம்உசேன், அண்ணாச்சி ஆகியோரால்  கண்டறியப்பட்டு படிக்கப்பட்டது.

https://youtu.be/oJvE7mwvTmo

 

1000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வணிக முக்கியத்துவம் வாய்ந்த இடம் கிருஷ்ணகிரிகல்வெட்டு ஆதாரத்துடன்

https://youtu.be/eM2ttghCXdM


1 comment:

  1. மிக அருமையான வரலாற்றுப் பெட்டகம்.

    ReplyDelete

அங்கனப்பற்று - மகராசகடை - பாறை ஓவியம் -பனரத்து பண்டா- - MAHARAJAKADI -PANAMARATHUPANDA PREHISTORIC ROCK ART ( PAINTING ) புதிய கண்டறிதல்

மேலும் சிறப்பு பெறும் மகராசகடை ( அங்கனப்பற்று )பகுதி - நடன பாறை ஓவியம் -மகராசகடை மலை அடிவாரப்பகுதியில் உள்ள பனமரத்துபண்டா என்ற இடத்தில் ...