இக்கல்வெட்டு ஊர் நாட்டாண்மை செய்யும் (நாயகம்)தித்தாழ்வார் மகன் விதியப்பிள்ளை தன் மக்களையும் கால்நடைகளையும் காக்கும் பொருட்டு புலியோடு போராடி அதை கொன்று தானும் இறந்து போனான் என்பதை குறிக்கிறது.
வீர இராமநாதன் (ஆட்சிக்காலம் 1254-1295) என்பவன் ஒரு போசாள மன்னனாவான்.
இவனது தந்தையான வீர சோமேசுவரன் தனது பேரரசை இரண்டாகப் பிரித்து நாட்டின் வடக்குப் பகுதியான கர்நாடகப் பகுதியைத் தன் மகன் மூன்றாம் நரசிம்மனுக்கும் தெற்குப் பகுதியான தமிழ்நாட்டின் வடக்குப் பகுதியை மற்றொரு மகனான இராமநாதனுக்கும் அளித்தான். நாடு விரிவாக இருந்ததாலும், நிர்வாக வசதிக்காகவும் அமைதியான முறையில் நாடு இரண்டாகப் பிரிக்கப்பட்டது.
வீர இராமநாதன் குந்தாணியை (இன்றைய கிருட்டிணகிரி வட்டம் சின்னகொத்தூர் கிராமம்) தன் தலைநகராகக் கொண்டான். [1] இவனது ஆறாம் ஆட்சியாண்டு முதல் நாற்பத்தொன்றாம் ஆட்சியாண்டுவரையான கல்வெட்டுகள் இங்குக் கிடைக்கின்றன
எங்களால் இயன்றது . நன்றி
தலைவர் - நாராயணமூர்த்தி- 9442276076
செயலர் டேவீஸ் -9487723678
பொருளர் விஜயகுமார் --9488830969
ஒருங்கிணைப்பாளர்
தமிழ்செல்வன்
-9787536970
தங்கள் பகுதியில் ஏதாவது கல்வெட்டுகள் மற்றும் நடுகற்கள் பழைமையான கோவில்கள் இருப்பின் எங்களுக்கு தெவியுங்கள் நம் கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுக்க வசதியாக இருக்கும்.
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும்
ஆவணப்படுத்தும் குழு
No comments:
Post a Comment