அண்ணன் சதாநந்தகிருஷ்ணகுமார் சப்பானிப்பட்டி அருகே இருந்த வளைக்காரப்பட்டி கரிமலையின் கிழக்கு பக்கத்தில் சுமார் 80 அடி உயர்த்தில் இரண்டு பக்கமும் கவிபோன்ற அமைப்புடன் இருந்த பாறை விதானப்பகுதியில் வெண்சாந்து ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது. இவை 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இருக்கலாம்.இது பற்றி துரைசாமி அவர்கள் புத்தகத்தில் கூறி உள்ளார்
பாறையின் தெற்கு பகுதி விதானத்தில் வாளுடன் ஒரு வீரனும் அவன் அருகே இரு கையையும் து◌ாக்கியவண்ணம் ஒருவனும் இவர்களுக்கு மேற்பகுதியில் வாள் அம்புறா , வாள் கொண்ட வீரனின் படமும் அழகாக வரையப்பட்டுள்ளது
அருகே பாண்டில் விளக்கு வரையப்பட்டுள்ளது.
குறியீடு வரையப்பட்டுள்ளது.
இதில் பாறைக்கீரல்கள் உள்ளன.
வடக்கு பகுதியில் உள்ள விதானப்பகுதியில் மனிதர்களின் படங்கள் உள்ளது.
இரண்டு மனித உருவங்கள் முன் வளையம் போன்ற ஒன்றினை வைத்து ஒரு மனித உருவம் காட்டுகிறது. அது சாட்டையாக கூட இருக்கலாம்
இரண்டு மனிதஉருவங்கள் வரையப்பட்டுள்ளது.
பாறையின் வடக்கு பகுதி
பாறையின் தெற்கு பகுதி
எங்களால் இயன்றது . நன்றி
தலைவர் - நாராயணமூர்த்தி- 9442276076
செயலர் டேவீஸ் -9487723678
பொருளர் விஜயகுமார் --9488830969
ஒருங்கிணைப்பாளர்
தமிழ்செல்வன்
-9787536970
தங்கள் பகுதியில் ஏதாவது கல்வெட்டுகள் மற்றும் நடுகற்கள் பழைமையான கோவில்கள் இருப்பின் எங்களுக்கு தெவியுங்கள் நம் கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுக்க வசதியாக இருக்கும்.
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும்
ஆவணப்படுத்தும் குழு
இது தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கிருஷ்ணகிரி வட்டாரக்கிளையின் ஜே.எஸ்.ஆர் கிருஷ்ணாஜி கல்வி அறக்கட்டளை நடத்துவதாகும்
No comments:
Post a Comment