Friday, 28 February 2020

81-2000 ஆண்டுக்கு முன் மனிதன் வாழிடம் குகை என்பதற்கான ஆதாரம் பாறைஓவியங்கள் MUSEUM &KHRDT - HISTORY of KRISHNAGIRIMUSEUM &KHRDT - HISTORY of KRISHNAGIRI

மூங்கில் குட்டை குகைகள் வளைகாரப்பட்டி -இது காவேரிப்பட்டிணம் ஒன்றியம் சப்பானிப்பட்டி அருகே உள்ளது.பழங்கால மனிதன் குகைகளில் வாழ்ந்ததற்கான ஆதாரம் 
இந்த பாறையின் விதானப்பகுதியில் மனித உருவங்களும் குறியீடுகளும் காணப்படுகின்றது

இவை குறியீடுகளாக உள்ளன
ஒரு குகையிலிருந்து வெளிவரும்  மனிதனும் அதற்கு மேல் ஒரு மனிதன் ஓடுவது போலவும் வரையப்பட்டுள்ளது.


சதாநந்தன் மற்றும் விஜயகுமார் , தமிழ்செல்வன்

















எங்களால் இயன்றது . நன்றி 
தலைவர் - நாராயணமூர்த்தி-  9442276076

செயலர் டேவீஸ்                               -9487723678

பொருளர் விஜயகுமார்              --9488830969
ஒருங்கிணைப்பாளர் 
தமிழ்செல்வன்                                 -9787536970
தங்கள் பகுதியில் ஏதாவது கல்வெட்டுகள் மற்றும் நடுகற்கள் பழைமையான கோவில்கள் இருப்பின் எங்களுக்கு தெவியுங்கள் நம் கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுக்க வசதியாக இருக்கும்.
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு

இது தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கிருஷ்ணகிரி வட்டாரக்கிளையின் ஜே.எஸ்.ஆர் கிருஷ்ணாஜி கல்வி அறக்கட்டளை நடத்துவதாகும் 

80-2000 ஆண்டு பழமையான வளைகாரப்பட்டி பாறை ஓவியங்கள் Rock Painting MUSEUM &KHRDT - HISTORY of KRISHNAGIRI

அண்ணன் சதாநந்தகிருஷ்ணகுமார் சப்பானிப்பட்டி அருகே இருந்த வளைக்காரப்பட்டி  கரிமலையின் கிழக்கு பக்கத்தில் சுமார் 80 அடி உயர்த்தில் இரண்டு பக்கமும் கவிபோன்ற அமைப்புடன் இருந்த பாறை விதானப்பகுதியில் வெண்சாந்து ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது. இவை 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இருக்கலாம்.இது பற்றி துரைசாமி அவர்கள் புத்தகத்தில் கூறி உள்ளார்
 பாறையின் தெற்கு பகுதி விதானத்தில் வாளுடன் ஒரு வீரனும் அவன் அருகே இரு கையையும் து◌ாக்கியவண்ணம் ஒருவனும் இவர்களுக்கு மேற்பகுதியில் வாள் அம்புறா , வாள் கொண்ட வீரனின் படமும் அழகாக வரையப்பட்டுள்ளது
அருகே பாண்டில் விளக்கு வரையப்பட்டுள்ளது.
குறியீடு வரையப்பட்டுள்ளது.

இதில் பாறைக்கீரல்கள் உள்ளன.

வடக்கு பகுதியில் உள்ள விதானப்பகுதியில் மனிதர்களின் படங்கள் உள்ளது.
இரண்டு மனித உருவங்கள் முன் வளையம் போன்ற ஒன்றினை வைத்து ஒரு மனித உருவம் காட்டுகிறது. அது சாட்டையாக கூட இருக்கலாம்
இரண்டு மனிதஉருவங்கள் வரையப்பட்டுள்ளது.









 பாறையின் வடக்கு பகுதி

பாறையின் தெற்கு பகுதி
எங்களால் இயன்றது . நன்றி 
தலைவர் - நாராயணமூர்த்தி-  9442276076

செயலர் டேவீஸ்                               -9487723678

பொருளர் விஜயகுமார்              --9488830969
ஒருங்கிணைப்பாளர் 
தமிழ்செல்வன்                                 -9787536970
தங்கள் பகுதியில் ஏதாவது கல்வெட்டுகள் மற்றும் நடுகற்கள் பழைமையான கோவில்கள் இருப்பின் எங்களுக்கு தெவியுங்கள் நம் கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுக்க வசதியாக இருக்கும்.

கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு
இது தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கிருஷ்ணகிரி வட்டாரக்கிளையின் ஜே.எஸ்.ஆர் கிருஷ்ணாஜி கல்வி அறக்கட்டளை நடத்துவதாகும் 

Wednesday, 5 February 2020

79- தட்டக்கல் ஒரு வரலாற்று பொக்கிஷம்- கி.பி1291 வீரராமநாதன் கால புலி குத்திப்பட்டான் கல் MUSEUM &KHRDT கிருஷ்ணகிரி வரலாறு கல்வெட்டு

தட்டக்கல் பல வரலாற்று தடயங்களை கொண்டது.அதன் படி ஊருக்கு மேற்கு பக்கம் உள்ள ஒரு புலியைகுத்திய வீரன் நடுகல் கல்வெட்டுடன் உள்ளது.அது வீரராமநாதனின் காலத்தியது ஆகும் கி.பி 1291 எடுக்கப்படட கல்வெட்டு ஆகும்
இக்கல்வெட்டு  ஊர் நாட்டாண்மை செய்யும்  (நாயகம்)தித்தாழ்வார் மகன் விதியப்பிள்ளை தன் மக்களையும் கால்நடைகளையும் காக்கும் பொருட்டு புலியோடு போராடி அதை கொன்று தானும் இறந்து போனான் என்பதை குறிக்கிறது.


வீர இராமநாதன் (ஆட்சிக்காலம் 1254-1295) என்பவன் ஒரு போசாள மன்னனாவான்.
இவனது தந்தையான வீர சோமேசுவரன் தனது பேரரசை இரண்டாகப் பிரித்து நாட்டின் வடக்குப் பகுதியான கர்நாடகப் பகுதியைத் தன் மகன் மூன்றாம் நரசிம்மனுக்கும் தெற்குப் பகுதியான தமிழ்நாட்டின் வடக்குப் பகுதியை மற்றொரு மகனான இராமநாதனுக்கும் அளித்தான். நாடு விரிவாக இருந்ததாலும், நிர்வாக வசதிக்காகவும் அமைதியான முறையில் நாடு இரண்டாகப் பிரிக்கப்பட்டது.
வீர இராமநாதன் குந்தாணியை (இன்றைய கிருட்டிணகிரி வட்டம் சின்னகொத்தூர் கிராமம்) தன் தலைநகராகக் கொண்டான். [1] இவனது ஆறாம் ஆட்சியாண்டு முதல் நாற்பத்தொன்றாம் ஆட்சியாண்டுவரையான கல்வெட்டுகள் இங்குக் கிடைக்கின்றன


எங்களால் இயன்றது . நன்றி 
தலைவர் - நாராயணமூர்த்தி-  9442276076

செயலர் டேவீஸ்                               -9487723678

பொருளர் விஜயகுமார்              --9488830969
ஒருங்கிணைப்பாளர் 
தமிழ்செல்வன்                                 -9787536970
தங்கள் பகுதியில் ஏதாவது கல்வெட்டுகள் மற்றும் நடுகற்கள் பழைமையான கோவில்கள் இருப்பின் எங்களுக்கு தெவியுங்கள் நம் கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுக்க வசதியாக இருக்கும்.
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு

78 கதிரிபுரம் தேர்குண்டு பாறை ஓவியம் rock art





77. தட்டக்கல் கானப்பாறை பெருங்கற்கால பாறைஓவியம் Rock art- MUSEUM &KHRDT கிருஷ்ணகிரி வரலாறு


காவேரிப்பட்டிணம் எம் தட்டக்கல் –வேலப்பட்டி டு வீரமலை போகும் பகுதியில் கானப்பாறையில் பெருங்கற்கால பாறைஓவியம் காணப்படுகிறது. இது பெருங்கற்கால பாறை ஒவியம் என்பதற்கான சான்றுகளும் உள்ளது அதாவது இதன் அருகே கல்திட்டைஒன்று காணப்படுகிறது. பாறைஓவியத்தில் நான்கு மனிதர்கள் அமர்ந்தவாறு காட்டப்பட்டு இறந்த மனிதன் கிடையாக காட்டப்பட்டுள்ளான் . இவன்இறந்து விட்டபின் நடைபெறும் சாங்கியத்தை காட்டுகிறது. .இது பெருங்கற்கால நினைவுச்சின்னத்துடன் இணைத்து பார்க்க வேண்டியிருக்கிறது..

76-2500 Years Old தட்டக்கல் இருளன் கவி பாறை ஓவியங்கள் Rock Arts -MUSEUM &KHRDT

அண்ணன் சதானந்தகிருஷ்ணகுமார் மற்றும் தட்டக்கல் விவசாய சங்கத்தலைவர் கோவிந்தசாமி ஆகியோருடன் . தட்டக்கல் இருளன் கவியில்

1500 -200 ஆண்டுகள் பழைமையான காலத்தில் வேட்டையாடுதல் முக்கிய தொழிலாக இருப்பதற்கான ஆதாரம் இருளன் கவியில் உள்ளது.தட்டக்கல் பள்ளி மாணவிகளும் அவரின் தந்தையும் .
எறக்குறைய 18 இஞ்ச் உயரம் கொண்ட வீரன் படம் வெண்சாந்து ஓவியம் .அக்கலா மனிதன் மழை மற்றும் வெயில் இவற்றில் இருந்து தன்னை பாதுகாக்க மலையிலும் தன்னை பாதுகாத்துகொள்ள பாறைஇருக்குகளிலும் குகைகளிலும் வாழ்ந்தான் என்பதற்கு ஆதாரம் .

இது நடனக்காட்சி அல்லது சண்டைக்காட்சியாக இருக்கலாம்
வில்லோடு மற்றொரு வீரன்
வில் ஏந்திய வீரன் அருகே சிறிய விலங்கும் அருகே உள்ள பெரிய உருவம்  நீண்ட கழுத்துடையாதாக இருப்பது இது என்ன விலங்கு என்ற ஐயப்பாட்டை ஏற்படுத்துகிறது ( டைனசர்)


வில் ஏந்திய வீரன் அருகே விலங்குகள் காட்டப்பட்டுள்ளன

இரு வில் ஏற்திய வீரர்கள்
எங்களால் இயன்றது . நன்றி 
தலைவர் - நாராயணமூர்த்தி-  9442276076

செயலர் டேவீஸ்                               -9487723678

பொருளர் விஜயகுமார்              --9488830969
ஒருங்கிணைப்பாளர் 
தமிழ்செல்வன்                                 -9787536970
தங்கள் பகுதியில் ஏதாவது கல்வெட்டுகள் மற்றும் நடுகற்கள் பழைமையான கோவில்கள் இருப்பின் எங்களுக்கு தெவியுங்கள் நம் கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுக்க வசதியாக இருக்கும்.

கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு




அங்கனப்பற்று - மகராசகடை - பாறை ஓவியம் -பணரத்து பண்டா- - MAHARAJAKADI -PANAMARATHUPANDA PREHISTORIC ROCK ART ( PAINTING ) புதிய கண்டறிதல்

மேலும் சிறப்பு பெறும் மகராசகடை ( அங்கனப்பற்று )பகுதி - நடன பாறை ஓவியம் -மகராசகடை மலை அடிவாரப்பகுதியில் உள்ள பனமரத்துபண்டா என்ற இடத்தில் ...