Friday, 19 June 2020

100 .தமிழகத்தின் மிக நீண்ட நடனமாடும் தொடர் செஞ்சாந்து ஓவியம் MUSEUM &KHRDT - HISTORY of KRISHNAGIRI




https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2020/mar/16/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3382446.html

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=571817




இந்தியாவிலேயே  மிக நீண்ட பாறை ஓவியம் கண்டுபிடிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஜிஞ்சுப்பள்ளி பஞ்சாயத்தில் மேலுர் முனிஸ்வரன் கோவில் அருகே உள்ள பணிகுண்டு பாறை அடியில் தொல்லியல் ஆய்வாளர் சதாநந்தகிருஷ்ணகுமார் கண்டறியப்படட்டது அதை அருங்காட்சியகமும் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவுக்கும் ஆய்வு செய்ய கேட்டுக் கொண்டார் அதன் பேரில் தலைவர் நாராயணமூர்த்தி தலைமையில் ஆய்வு செய்தனர். அருங்காட்சியக காப்பாச்சியர் கூறும் போது இது ஒரு அரிய வகை பாறை ஓவியம்என்றே கூறலாம். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செஞ்சாந்து ஓவியங்களே இல்லை என்பதை இக்குழு  மாற்றி வருகிறது .படிப்படியாக  செஞ்சாந்து ஓவியங்களை இக்குழு கண்டறிந்து ஆவணப்படுத்தி வருகிறது .அதிகமாக வெண்சாந்து ஓவியங்களே அதிகமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காணப்படுகிறது. செந்சாந்து ஓவியங்கள் குறைந்த அளவிலே காணப்படுகின்றன . இதில்  முழு ஓவியமும் வெளிரிய செஞ்சாந்து ஓவியம் ஆகும். 7 மீட்டர் நீளத்துக்கு குழு நடனம் போன்று  வளைந்து வளைந்து காணப்படுகிறது. பல இடங்களில் பாறை கீழே உதிர்ந்து விட்டதால் தொடர் விட்டுப்போய்உள்ளது.இவை கி.மு 2000 ஆண்டுவாக்கில் வரையப்பட்டு இருக்கலாம் அதாவது 4000 அல்லது 4500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஓவியங்களாகும் இவை  . இதில் ஒரு குடிசையை காட்டி உள்ளார்கள் வட்ட வடிவில வீடுகளை அமைத்து அதன் மேல் குச்சியால் ஆன கூறையை அமைத்துள்ளது போல் பையம்பள்ளி அகழ்வாராட்சியில் கிடைந்த புதிய கற்கால வீடு போன்றே இந்த பாறை ஓவியத்தில் ஒரு குடிசை காட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். குதிரையின் உருவம் காட்டப்பட்டு உள்ளது. நான்கு கால்களுடன் திரும்பிபார்பது போல் உள்ளது. செவ்வக அமைப்பினுள் மனிதன் உள்ளதுபோல் காட்டப்பட்டுள்ளது இது தெய்வமாகவோ தலைவனாகவோ இருக்கலாம் என்று கூறினார் .தொல்லியல் ஆய்வாளர் சதாநந்த கிருஷ்ணகுமார் கூறும் போது இந்த நடனக்காட்சியில் மனிதர்கள் தங்கள் கைகளை கோர்த்துக் கொண்டு பெரும் கூட்டம் நின்று நடனமாடி இருக்கலாம் அதைபார்த்த மனிதன் அதேபோன்று வரைந்திருக்கலாம் ஒரு அடிக்கு 10 நபர்கள் வரையப்பட்டு இருக்கிறார்கள் 200 மேற்பட்ட மனித கூட்டத்தை இதில் வரைந்துள்ளான். இது சிதையாமல் இருந்தால் இன்னும் சிறப்பாகவே இருக்கும். இதுவரை இந்தியாவில் இவ்வளவு நீண்ட நடன செஞ்சாந்த ஓவியல் கண்டறியப்படவில்லை .இதன் அருகிலே நீர்நிலையிம் 1 கிமி தொலைவில் ஆறும் உள்ளதால் இங்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதர் வழ்ந்திருகிறார்கள்  இந்த தொடர் குழு நடனபாறை ஓவியம் உலகிலேயே நீண்ட தொடர் நடனக்காட்சியாக இருக்கும் என்றும் இதை மேலும் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் கூறினார். ஜீஞ்சுப்பள்ளி பஞ்சாயத்து தலைவர் சுரேஷ் அவர்களை தொடர்தொடர்பு கொண்டு இந்த இடம் மிக மோசமான நிலையில் உள்ளது இதை சுத்தப்படுத்தி ஆய்வு செய்ய உதவ கேட்டுக் கொண்டோம் உடனே அடுத்த ஒருமணிநேரத்தில் அந்த இடத்தை ஆட்களை வைத்து புதர்களை வெட்டி சரிசெய்து கொடுத்ததாலே இந்த ஓவியத்தை முழுமையாக ஆய்வு செய்ய முடிந்தது. அவருக்கு குழு தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறது

கூறும் போது இந்த நடனக்காட்சியில் மனிதர்கள் தங்கள் கைகளை கோர்த்துக் கொண்டு பெரும் கூட்டம் நின்று நடனமாடி இருக்கலாம் அதைபார்த்த மனிதன் அதேபோன்று வரைந்திருக்கலாம் ஒரு அடிக்கு 10 நபர்கள் வரையப்பட்டு இருக்கிறார்கள் 200 மேற்பட்ட மனித கூட்டத்தை இதில் வரைந்துள்ளான். இது சிதையாமல் இருந்தால் இன்னும் சிறப்பாகவே இருக்கும். இதுவரை இந்தியாவில் இவ்வளவு நீண்ட நடன செஞ்சாந்த ஓவியல் கண்டறியப்படவில்லை

Sunday, 31 May 2020

99. 2000 Years Old Rock Painting அமாவாசை குண்டு பாறை ஓவியம் -MUSEUM &KHRDT - HISTORY of KRISHNAGIRI

https://www.youtube.com/watch?v=hL8pi2ZNKBg


கிருஷ்ணகிரி பெத்ததாளாப்பள்ளி காமராசர் நகரின் மேற்கு பக்கம் உள்ள ஏரியின் அருகே மலை அடிவாரத்தில் உள்ள பாறையின் விதானத்தில் உள்ள பாறை ஓவியம் .
கிருஷ்ணகிரி மாவட்டத்திலேயே தாளாப்பள்ளி மலையில் தான் 11 இடங்களில் பாறை ஓவியங்கள் உள்ளன

பறவை போன்ற தலை உடைய மனித உருவம்
இந்த ஓவியத்தில் கைகளின் 5 விரல்களும் தெளிவாக காட்டப்பட்டுள்ளன . கால்கள் விரல்கள் அழிந்து விட்டது போல் உள்ளது . இந்த ஓவியங்கள் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மனிதர்கள் வரைந்த பாறை ஓவியங்கள் ஆகும் 
எங்களால் இயன்றது .
 நன்றிகளுடன்..
அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் 
அருங்காட்சிய காப்பாச்சியர்
கோவிந்தராஜ்                  -790453987
தலைவர் - நாராயணமூர்த்தி -  9442276076

செயலாளர் டேவிஸ்                     -9487723678

பொருளாளர் விஜயகுமார்              --9488830969
ஒருங்கிணைப்பாளர் 
தமிழ்செல்வன்                                 -9787536970
தங்கள் பகுதியில் ஏதாவது கல்வெட்டுகள் மற்றும் நடுகற்கள் பழமையான கோவில்கள் இருப்பின் எங்களுக்கு தெரிவியுங்கள் நம் கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுக்க வசதியாக இருக்கும்.
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி அருங்காட்சியகத்துடன் இணைந்து வரலாற்றினை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இது தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணிகிருஷ்ணகிரி வட்டாரக்கிளையின் ஜே.எஸ்.ஆர் கிருஷ்ணாஜி கல்வி அறக்கட்டளை நடத்துவதாகும்
இது தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கிருஷ்ணகிரி வட்டாரக்கிளையின் ஜே.எஸ்.ஆர் கிருஷ்ணாஜி கல்வி அறக்கட்டளை நடத்துவதாகும்

Sunday, 3 May 2020

98.பைரவர் கோவிலின் 600 ஆண்டுகளுக்கு முந்தய கல்வெட்டு MUSEUM &KHRDT - HISTORY of KRISHNAGIRI


சிவன் கோயிலின் பொருளாளர் சண்டிகேஸ்வரர். இவர் கோயிலுக்கு தானம் அளிக்கும்படி மக்களுக்கு ஆணை யிடுகிறார். அறம் கொடுத்தல் மற்றும் அறம் காத்தலை வலியுறுத்தும் கல்வெட்டு இது.



 கல்வெட்டு வாசகம்
1. சண்டீசதான ஓலை தாப
2.ரஞ்சூழ் வையத்தில்
3. சண்டீசுரன் கருமம்
4. ஆராய்க பண்டே அறஞ்
5. செய்தான் செய்தான் அற
6.ங்காத்தான் பாதம் திற
7. ம்பாமற் சென்னிமேல்
8. வைத்து.


 தானம் கொடுத்தவன் அந்த தானத்தை காப்பவனின் பாதத்தை தன் தலைமேல் வைத்து போற்றுவான் என்று சண்டீசர் உறுதியளிக்கிறார்.,இக் கல்வெட்டு 600 ஆண்டுகள் பழமையான தோற்றத்தைக் கொண்டுள்ளது 
எங்களால் இயன்றது .
 நன்றிகளுடன்..
அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் 
அருங்காட்சிய காப்பாச்சியர்
கோவிந்தராஜ்                  -790453987
தலைவர் - நாராயணமூர்த்தி -  9442276076

செயலாளர் டேவிஸ்                     -9487723678

பொருளாளர் விஜயகுமார்              --9488830969
ஒருங்கிணைப்பாளர் 
தமிழ்செல்வன்                                 -9787536970
தங்கள் பகுதியில் ஏதாவது கல்வெட்டுகள் மற்றும் நடுகற்கள் பழமையான கோவில்கள் இருப்பின் எங்களுக்கு தெரிவியுங்கள் நம் கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுக்க வசதியாக இருக்கும்.
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு  கிருஷ்ணகிரி அருங்காட்சியகத்துடன் இணைந்து வரலாற்றினை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது

Tuesday, 28 April 2020

97.விஜயநகர மன்னர் முதலாம் தேவராயனின் 1407 ஆண்டு போத்தாபுரம் கல்வெட்டு என்ன சொல்கிறது

இரண்டாம் ஹரிஹரனின் மகனான முதலாம் தேவராயனின் காலத்தில் இக்கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. கி.பி.1407ம் ஆண்டைச் சேர்ந்த இக்கல்வெட்டு காடைய நாயக்கர் குமாரர் வரதைய நாயக்கரும், ஒருபரி நாயக்கர் குமாரர் இம்மடி நாயக்கரும், நாட்டவரும் இணைந்து ஒரு பௌர்ணமி நாளில் பையூர் பற்று பையுர் சீமையில் உள்ள வரதசமுத்திரத்தில் ஏரிகள் உட்பட நஞ்சை, புஞ்சை நிலங்களை பிராமணர்களுக்கு பிரமதேயமாக அளித்ததை இக்கல்வெட்டு விவரிக்கிறது.

விஜயநதரர் காலத்தில் சிறப்புற்றிருந்த சோமப்ப தண்டநாயக்கர் மகன் கண்டரகூளிமாராய நாயக்கன், இருகைய நாயக்கன் மகன் பொம்மைய நாயக்கன்,  ஆரோதன் ராமநாயன் பொன்னிக் கூத்தன், பொம்மைய நாயக்கன் மகன் திம்மைய நாயக்கன் வரிசையில் இக்கல்வெட்டு வாயிலாக காடைய நாயக்கர் குமாரர் வரதைய நாயக்கரும், ஒருபரி நாயக்கர் குமாரர் இம்மடி நாயக்கரும் வரலாற்றின் வெளிச்சத்துக்கு வருகின்றனர். ஏனெனில் இவர்களுக்கும் முறையே மஹாநாலங்க ராச ராயர் ழூவராய பசவஸங்கரன் பாஷைக்கு தப்புவ நாயக்கா,; கண்டந் மற்றும் பாஸரநாரி ஸஹோதர தாநவமுராரி ஆவகத்தாற்று மண்டலீகன் தலைகொண்ட கண்டன் ஆகிய பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளதை இக் கல்வெட்டுத் தெரிவிக்கிறது. இவர்கள் பையூர் பகுதியின் முக்கிய தலைவர்களாக இருந்துள்ளனர்.

அளிக்கப்பட்ட நிலத்தின் நான்கு எல்லைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. மொத்த நிலத்தை 18 பாகங்களாகப் பிரித்து
1.கோயிலுக்கு 2 பாகமும்,
2.காஸ்யப கோத்ரத்து விநாயக பட்டர், சவரி பெருமாள் பட்டருக்கு 2 பாகம்,
3.தந கோத்ரத்து சீராமதேவர், சிங்கபெருமாளுக்கு 1 பாகம்,
4.ஹரித கோத்ரத்து விருப்பணருக்கு 1 பாகம்,
5.ஜாமதக்நி விருஷ கேத்ரத்து நரசிம்ம தேவருக்கு 2 பாகம்,
6.பாரத்வாஜ கோத்ரத்து உமாபதி தம்பிரானுக்கும் எடுத்தமுதயார்க்கும் 2 பாகம், 7.ஷடமர்ஷன கோத்ரத்து திருவேங்கடமுடையார், மண்டலபுருஷர், சீரங்கநாதர் ஆகியோருக்கு 3 பாகம்,
8.காஸ்யப கோத்ரத்து சோனாம்பர பட்டருக்கு 1 பாகம்,
9.ஜமதக்நி கோத்ரத்து திருவேங்கடமுடையாருக்கும், அபிமாருக்கும் 2 பாகம்,
10.குண்டிந கோத்ரத்து பெருமாளுக்கு 1 பாகம்,
11.பாரத்வாஜ கோத்ரத்து பஞ்சநாராயணருக்கு ½ பாகம்,

12.தக் கோத்ரத்து இளையபெருமாளுக்கு ½ பாகம்
என பிரித்து இந்த தானம் அளிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டின் தொடக்கத்திலும் முடிவிலும் சமஸ்கிருத ஸ்லோகங்கள் வெட்டப்பட்டுள்ளன.
ஆய்வின்போது காப்பாச்சியர் கோவிந்தராஜ்  ,  சுரேஷ், அகத்தியன், அருங்காட்சியகப் பணியாளர்கள் கிருஷ்ணன், செல்வகுமார் உடனிருந்தனர்.
நான்கு அடிக்கு எழு அடி 65 வரிகள் கொண்ட அந்த கல்வெட்டின் ஒருபக்க தோற்றம் 





 நன்றிகளுடன்..
அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் 
அருங்காட்சிய காப்பாச்சியர்
கோவிந்தராஜ்                  -790453987
தலைவர் - நாராயணமூர்த்தி -  9442276076

செயலாளர் டேவிஸ்                     -9487723678

பொருளாளர் விஜயகுமார்              --9488830969
ஒருங்கிணைப்பாளர் 
தமிழ்செல்வன்                                 -9787536970
தங்கள் பகுதியில் ஏதாவது கல்வெட்டுகள் மற்றும் நடுகற்கள் பழமையான கோவில்கள் இருப்பின் எங்களுக்கு தெரிவியுங்கள் நம் கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுக்க வசதியாக இருக்கும்.
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி அருங்காட்சியகத்துடன் இணைந்து வரலாற்றினை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது

Thursday, 16 April 2020

96.சைவமும் வைணவமும் இணைந்த ஓர் அற்புதக் கலாசாரம் தட்டக்கல்லில் இருந்ததற்கான ஆதாரம் -MUSEUM &KHRDT - HISTORY of KRISHNAGIRI

தட்டக்கல்லில் சைவமும் வைணமும் ஒற்றுமையாக இருந்ததற்கான அடையாளம் - 200 முந்தய பாறை சிற்பத் தொகுதி  வருடங்களுக்கு முன்பே வைணமும் சைவமும் ஒன்றாக இருந்ததற்கான ஆதாரம் இந்த சிற்பத் தொகுதியே ஆகும் இதில் வைணவ மற்றும் சைவ தெய்வங்கள்
 சிற்பத் தொகுதியின் மேற்கு பகுதியில் உள்ள சூரியன் செதுக்கல்
 பாறைத்தொகுப்பில் நடுவில் காணப்படும் நடனமாடும் பாறை செதுக்கல்
 நடுவே சிவனும் பார்வதியும் அமர்ந்துள்ளது போல் புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.
 கிழக்கு பகுதியில் முதலில் முழுமுதல் கடவுளான விநாயகர் புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.
 நந்தி மேற்கு பகுதியில் நந்தியும்உடுக்கையும்
ஆஞ்சனேயர் நந்திக்கு அருகே செதுக்கப்பட்டுள்ளது .
இதற்கு அருகிலேயே கூத்தாண்டவ ஈஸ்வரர் கோவில் இருப்பது குறிப்பிடத்தக்கது
எங்களால் இயன்றது .
 நன்றிகளுடன்..
அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் 
அருங்காட்சிய காப்பாச்சியர்
கோவிந்தராஜ்                  -790453987
தலைவர் - நாராயணமூர்த்தி -  9442276076

செயலாளர் டேவிஸ்                     -9487723678

பொருளாளர் விஜயகுமார்              --9488830969
ஒருங்கிணைப்பாளர் 
தமிழ்செல்வன்                                 -9787536970
தங்கள் பகுதியில் ஏதாவது கல்வெட்டுகள் மற்றும் நடுகற்கள் பழமையான கோவில்கள் இருப்பின் எங்களுக்கு தெரிவியுங்கள் நம் கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுக்க வசதியாக இருக்கும்.
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி அருங்காட்சியகத்துடன் இணைந்து வரலாற்றினை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இது தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணிகிருஷ்ணகிரி வட்டாரக்கிளையின் ஜே.எஸ்.ஆர் கிருஷ்ணாஜி கல்வி அறக்கட்டளை நடத்துவதாகும்
இது தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கிருஷ்ணகிரி வட்டாரக்கிளையின் ஜே.எஸ்.ஆர் கிருஷ்ணாஜி கல்வி அறக்கட்டளை நடத்துவதாகும்

புலி சின்னத்துடன் கூடிய சோழர் கல்வெட்டு கண்டுபிடிப்பு ஓசூர்

தமிழகத்தில் முதல்முறையாக புலி சின்னத்துடன் கூடிய சோழர் கல்வெட்டு கண்டுபிடிப்பு: கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகம், தமிழக தொல்லியல் துறை, பள்...