Friday, 19 June 2020

100 .தமிழகத்தின் மிக நீண்ட நடனமாடும் தொடர் செஞ்சாந்து ஓவியம் MUSEUM &KHRDT - HISTORY of KRISHNAGIRI




https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2020/mar/16/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3382446.html

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=571817




இந்தியாவிலேயே  மிக நீண்ட பாறை ஓவியம் கண்டுபிடிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஜிஞ்சுப்பள்ளி பஞ்சாயத்தில் மேலுர் முனிஸ்வரன் கோவில் அருகே உள்ள பணிகுண்டு பாறை அடியில் தொல்லியல் ஆய்வாளர் சதாநந்தகிருஷ்ணகுமார் கண்டறியப்படட்டது அதை அருங்காட்சியகமும் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவுக்கும் ஆய்வு செய்ய கேட்டுக் கொண்டார் அதன் பேரில் தலைவர் நாராயணமூர்த்தி தலைமையில் ஆய்வு செய்தனர். அருங்காட்சியக காப்பாச்சியர் கூறும் போது இது ஒரு அரிய வகை பாறை ஓவியம்என்றே கூறலாம். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செஞ்சாந்து ஓவியங்களே இல்லை என்பதை இக்குழு  மாற்றி வருகிறது .படிப்படியாக  செஞ்சாந்து ஓவியங்களை இக்குழு கண்டறிந்து ஆவணப்படுத்தி வருகிறது .அதிகமாக வெண்சாந்து ஓவியங்களே அதிகமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காணப்படுகிறது. செந்சாந்து ஓவியங்கள் குறைந்த அளவிலே காணப்படுகின்றன . இதில்  முழு ஓவியமும் வெளிரிய செஞ்சாந்து ஓவியம் ஆகும். 7 மீட்டர் நீளத்துக்கு குழு நடனம் போன்று  வளைந்து வளைந்து காணப்படுகிறது. பல இடங்களில் பாறை கீழே உதிர்ந்து விட்டதால் தொடர் விட்டுப்போய்உள்ளது.இவை கி.மு 2000 ஆண்டுவாக்கில் வரையப்பட்டு இருக்கலாம் அதாவது 4000 அல்லது 4500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஓவியங்களாகும் இவை  . இதில் ஒரு குடிசையை காட்டி உள்ளார்கள் வட்ட வடிவில வீடுகளை அமைத்து அதன் மேல் குச்சியால் ஆன கூறையை அமைத்துள்ளது போல் பையம்பள்ளி அகழ்வாராட்சியில் கிடைந்த புதிய கற்கால வீடு போன்றே இந்த பாறை ஓவியத்தில் ஒரு குடிசை காட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். குதிரையின் உருவம் காட்டப்பட்டு உள்ளது. நான்கு கால்களுடன் திரும்பிபார்பது போல் உள்ளது. செவ்வக அமைப்பினுள் மனிதன் உள்ளதுபோல் காட்டப்பட்டுள்ளது இது தெய்வமாகவோ தலைவனாகவோ இருக்கலாம் என்று கூறினார் .தொல்லியல் ஆய்வாளர் சதாநந்த கிருஷ்ணகுமார் கூறும் போது இந்த நடனக்காட்சியில் மனிதர்கள் தங்கள் கைகளை கோர்த்துக் கொண்டு பெரும் கூட்டம் நின்று நடனமாடி இருக்கலாம் அதைபார்த்த மனிதன் அதேபோன்று வரைந்திருக்கலாம் ஒரு அடிக்கு 10 நபர்கள் வரையப்பட்டு இருக்கிறார்கள் 200 மேற்பட்ட மனித கூட்டத்தை இதில் வரைந்துள்ளான். இது சிதையாமல் இருந்தால் இன்னும் சிறப்பாகவே இருக்கும். இதுவரை இந்தியாவில் இவ்வளவு நீண்ட நடன செஞ்சாந்த ஓவியல் கண்டறியப்படவில்லை .இதன் அருகிலே நீர்நிலையிம் 1 கிமி தொலைவில் ஆறும் உள்ளதால் இங்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதர் வழ்ந்திருகிறார்கள்  இந்த தொடர் குழு நடனபாறை ஓவியம் உலகிலேயே நீண்ட தொடர் நடனக்காட்சியாக இருக்கும் என்றும் இதை மேலும் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் கூறினார். ஜீஞ்சுப்பள்ளி பஞ்சாயத்து தலைவர் சுரேஷ் அவர்களை தொடர்தொடர்பு கொண்டு இந்த இடம் மிக மோசமான நிலையில் உள்ளது இதை சுத்தப்படுத்தி ஆய்வு செய்ய உதவ கேட்டுக் கொண்டோம் உடனே அடுத்த ஒருமணிநேரத்தில் அந்த இடத்தை ஆட்களை வைத்து புதர்களை வெட்டி சரிசெய்து கொடுத்ததாலே இந்த ஓவியத்தை முழுமையாக ஆய்வு செய்ய முடிந்தது. அவருக்கு குழு தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறது

கூறும் போது இந்த நடனக்காட்சியில் மனிதர்கள் தங்கள் கைகளை கோர்த்துக் கொண்டு பெரும் கூட்டம் நின்று நடனமாடி இருக்கலாம் அதைபார்த்த மனிதன் அதேபோன்று வரைந்திருக்கலாம் ஒரு அடிக்கு 10 நபர்கள் வரையப்பட்டு இருக்கிறார்கள் 200 மேற்பட்ட மனித கூட்டத்தை இதில் வரைந்துள்ளான். இது சிதையாமல் இருந்தால் இன்னும் சிறப்பாகவே இருக்கும். இதுவரை இந்தியாவில் இவ்வளவு நீண்ட நடன செஞ்சாந்த ஓவியல் கண்டறியப்படவில்லை

No comments:

Post a Comment

அங்கனப்பற்று - மகராசகடை - பாறை ஓவியம் -பனரத்து பண்டா- - MAHARAJAKADI -PANAMARATHUPANDA PREHISTORIC ROCK ART ( PAINTING ) புதிய கண்டறிதல்

மேலும் சிறப்பு பெறும் மகராசகடை ( அங்கனப்பற்று )பகுதி - நடன பாறை ஓவியம் -மகராசகடை மலை அடிவாரப்பகுதியில் உள்ள பனமரத்துபண்டா என்ற இடத்தில் ...