Sunday, 1 December 2019

72.2500 Years old கற்குவை-நலகுண்டலப்பள்ளி MUSEUM &KHRDT. HISTORY OF KRISHNAGIRI






அந்த இடத்தை 3 கிமி உடன் வந்து காட்டிய அன்பழகன் மற்றும் மகராசகடை பள்ளி மாணவர் திவாகர் அவர்களுக்கு நன்றி
சிதைப்பப்பட்ட கல்திட்டை
 கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வரலாறு, வாழ்வியல் ஆகியவற்றை கண்டறிந்து ஆவணப்படுத்தவும் வெளி உலகிற்கு தெரியபடுத்தவும் ஜே.எஸ்.ஆர் கல்வி அறக்கட்டளை, கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு மற்றும் கிருஷ்ணகிரி  அருங்காட்சியகம். இணைந்து பணிகளை மேற்கொண்டு வருகிறது.

நாராயணமூர்த்தி தலைமையில் நலகுண்டலப்பள்ளி என்ற ஊருக்கு கள ஆய்வுக்கு சென்றபோது நலகுண்டலப்பள்ளியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி அன்பழகன் மற்றும் பள்ளிமாணவர் திவாகர் ஆகியோர் அருகே உள்ள மலையுச்சியில்  (பந்தல் பாறை) வித்யாசமாக கற்களைக் கொண்டு ஏதோ அமைத்துள்ளார்கள் என்று கூறினார் அந்த இடத்தை குழு 3 கி.மீ தொலைவு நடந்து சென்று ஆய்வுசெய்த பின்பு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறுகையில் அவை 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட மனிதர்களின்  வாழ்வியல் முறைகளை விளக்கும் பெருங்கற்கால நினைவு சின்னங்கலென உறுதி படுத்தினார்.
பெருங்கற்கால கற்குவை வட்டவடிவில் இரண்டும்,   சதுரவடிவில் இரண்டும் எண்கோணவடிவில் ஒன்றும் காணப்படுகிறது. வட்டவடிவ கற்குவை ஆறு அடி உயரமும் பத்து அடி சுற்றளவும் கொண்டதாக காணப்படுகிறது. அக்காலத்தில் இறந்தவர்கள் நினைவாக அமைக்கப்படும் பல்வேறு வகையான நினைவு கட்டமைப்புகளில் கற்குவையும் ஒன்று. கற்களை உடைக்க இப்போதுள்ளது போன்ற கருவிகள் இல்லாத காலத்தில் கிடைத்த மற்றும் உடைந்த கற்களைக் கொண்டு சரியான அளவில் சதுர வடிவிலும் . எண்கோணவடிவிலும் (எட்டுபட்ட). வட்டவடிவிலும் சிறப்பான முறையில் அமைத்துள்ளனர். இது போன்ற கற்குவைகள் பாலகுறி அருகே உள்ள மலைகளிலும் சிதைந்த நிலையில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. எனகூறினார்
ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் கூறுகையில் இவை பெரும்பாலும் மலையின் உச்சிப்பகுதியில் அமைக்கப்படுகின்றன. பெருங்கற்கால காலகட்டத்தில் கற்களைக் கொண்டு இறந்தவர்களுக்கான நினைவுச்சின்னங்களை அமைப்பது வழக்கம் அதுபோன்ற கற்குவைத்தான் இது. சில ஒழுங்கற்ற வகையில் கற்களை குவியலாக குவிக்கும் முறையும் உண்டு ஆனால் இவ்விடத்தில் ஒழுங்கான கட்டமைப்பு காணப்படுகிறது. எற்காடு மலைப்பகுதிகளிலும் காணப்படுகின்றன . மலைவாழ் மக்கள் இவற்றினை ஒருகாலத்தில் குறிப்பிட்ட நாட்களில் வழிபட்டு வந்ததாகவும் செவிவழி செய்திகள் கூறப்படுகின்றன. இந்த களப்பயனத்தில் ரவி,மதிவாணன்  விஜயகுமார் , கணேசன் ஆகியோர் பங்கேற்றனர்
ஆசிரியர் பயிற்றுநர் சுரேஷ் ஆருப்பள்ளி மலையில் குத்துக் கல்லுடன் கூடிய கற்குவையை கண்டறிந்துள்ளார். இன்றும் கற்குவை ஏற்படுத்தும் பழக்கம் சில பழங்குடியினரிடையே காணப்படுகிறது.

சதுரவடிவ கல்திட்டை








எங்களால் இயன்றது . நன்றி 
தலைவர் - நாராயணமூர்த்தி-  9442276076

செயலர் டேவீஸ்                               -9487723678

பொருளர் விஜயகுமார்              --9488830969
ஒருங்கிணைப்பாளர் 
தமிழ்செல்வன்                                 -9787536970
தங்கள் பகுதியில் ஏதாவது கல்வெட்டுகள் மற்றும் நடுகற்கள் பழைமையான கோவில்கள் இருப்பின் எங்களுக்கு தெவியுங்கள் நம் கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுக்க வசதியாக இருக்கும்.

No comments:

Post a Comment

அங்கனப்பற்று - மகராசகடை - பாறை ஓவியம் -பனரத்து பண்டா- - MAHARAJAKADI -PANAMARATHUPANDA PREHISTORIC ROCK ART ( PAINTING ) புதிய கண்டறிதல்

மேலும் சிறப்பு பெறும் மகராசகடை ( அங்கனப்பற்று )பகுதி - நடன பாறை ஓவியம் -மகராசகடை மலை அடிவாரப்பகுதியில் உள்ள பனமரத்துபண்டா என்ற இடத்தில் ...