வீரன் இரண்டு கைகளிலும் வாள் வைத்துள்ளான். இவன் பாம்பு கடித்து இறந்திருக்கலாம் , அவன் மனைவியும் உடன் கட்டை ஏறியுள்ளதால் இது ஒரு சதிக்கல் -பாம்பு குத்திப்பட்டான் கல்
வீரன் சிறந்த வில் வீரனாக இருக்க கூடும் இவன் போரில் இறந்ததன் நினைவாக எடுக்கப்பட்டு இருக்கலாம் , அவன் மனைவியும் உடன் கட்டை ஏறியுள்ளதால் இது ஒரு சதிக்கல் - வீரன் சிறந்த வில் வீரனாக இருக்க கூடும் இவன் ஆநிறையை மீட்கும் பொருட்டோ காக்கும் பொருட்டோ இறந்ததன் நினைவாக எடுக்கப்பட்டு இருக்கலாம் , அருகே மாடு ஒன்று காட்டப்பட்டுள்ளது-
வீரன் சிறந்த வில் வீரனாக இருக்க கூடும்.ஒரு கையில் அருவா வைத்திருப்பதால் விவசாயப்பணியிம் செய்திருகலாம் இவன் ஆநிறையை மீட்கும் பொருட்டோ காக்கும் பொருட்டோ இறந்ததன் நினைவாக எடுக்கப்பட்டு இருக்கலாம் , அருகே மாடு ஒன்று திமில் உடன் காட்டப்பட்டுள்ளது-
கோவிலின் கிழக்கு பக்கம் நடுகல் வீட்டினுல் இந்த சதிக்கல் வைக்கப்பட்டுள்ளது.கையில் வாளும்கேடையமும கொண்டுள்ளான்.
வேட்டனப்பள்ளியில் இருந்து அரியனப்பள்ளி அருகே உள்ளது கீரையம்மன் கோவில் . ஆந்திர எல்லையில் அமைந்து இருந்தாலும் இங்குள்ள நடுகற்கள் தமிழக பகுதியில் உள்ள நிலங்களை சீர் செய்தபோது கோவிலில் வைத்ததாக கூறுகிறார்கள். அங்குள்ளவர்கள் இவை பேரிகை பாளையகாரர்களின் வீரர்கள் என்று கூறுகின்றனர். கோவிலின் தெற்கு பக்கம் 5நடுகற்கள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன.
அதன் அருகே நான்கு தேர்சக்கரங்கள் (கல்லால் ஆனவை) வைக்கப்பட்டுள்ளது ஒருகாலத்தில் இந்த கோவிலுக்குதேர் இருந்துள்ளது அதன் சக்கரமாகும். தற்போதும் வேப்பணப்பள்ளி ராமர் கோவிலின் தேர் கருங்கல்லால் ஆனதாக கூறப்படுகிறது.
14 ஆம் நூற்றாண்டை சேர்ந்த விஜயநகர அரசன் வீர கம்பண்ணன் ஆண்டதாகவும் தெரிகிறது.
அமைவிடம் - https://maps.app.goo.gl/pohjeuweSJjfM7vEA
No comments:
Post a Comment