கிருஷ்ணகிரி மாவட்டம் மிகவும் பழமையான வரலாறு கொண்டது. இம்மாவட்டத்தில் தான் வரலாற்று காலத்திற்கு முந்தைய பெருங்கற்படைக்கால மக்களின் நினைவுச் சின்னங்கள் அதிகம் கிடைக்கின்றன. முக்கியமாக கற் திட்டைகள், கல் வட்டங்கள், குத்துக்கற்கள், கற்பதுக்கைகள், வட்டப்புதை குழிகள் என பெருங்கற்கால நாகரீகத்தின் நினைவுச் சின்னங்கள் அனைத்தும் நம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிடைக்கின்றது.
கடந்த 39 வருடங்களில் இல்லாத அளவுக்கு தண்ணீர் வற்றிய அணைகட்டின் நீர் தேக்கும் பகுதியில் பழைய பேயனப்பள்ளி ஊரின் அருகே உள்ள சிறு குன்றின் மேற்கு பகுதியில் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவனப்படுத்தும் குழு தலைவர் நாரயணமூர்த்தி தலைமையில் கிருஷ்ணகிரி அணைப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டது அங்கு பெருங்கற்படைக்காலப் பண்பாட்டைச் சேர்ந்த இறந்தவர்களுக்கான நினைவுச் சின்னங்கள் காணப்படுகின்றன . இது பொதுவாக, மூன்று பக்கங்களில் செங்குத்தான பலகைகற்களும் மேல் தட்டையான கற்பலகை ஒன்றையும் கொண்டிருக்கிறது. இதன் கிழக்கு பகுதியில் உள்ள கல்லில் மட்டும் இடுதுளை காணப்படுகிறது. உடைந்த நிலையில் இருந்தாலும் கிழக்கு நோக்கிய கல்லில் துளை இருப்பது உடைந்த கற்பலகைகளில் இருந்து தெரிய வருகிறது.
சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இச்சின்னங்கள் அமைந்துள்ள பகுதியின் மையப்பகுதியில் சுமார் 150 அடிக்கு 150 அடி அளவுக்கு சதுர வடிவில் வரப்பு போன்று கற்களை வைத்துள்ளனர். இதில் 12 அடி நீளமும் 8அடி அகலமும் 1.25 உயரமுள்ள மிகப் பெரிய மூடுகல்லினைக் கொண்ட கற்பதுக்கையை அமைத்துள்ளது இது ஒரு தலைவனுக்கான ஈமச்சின்னம் என்பதை எடுத்துக் காட்டுகிறது. மேல் உள்ள மூடு கல்லின் எடை 2 to 3 டன் இருக்கும் அனைகட்டப் பட்ட பின் நீர் சூழ்ந்து அந்த இடம் தண்ணிரால் சேராகி மேல் மூடு கல் அதிக எடை காரணமாக மற்ற 4 கல்களைுயும் கீழ் அழுத்தி இக்கல் நில மட்டத்துக்கு சமமாக அழுந்தி விட்டது.
இப்பகுதி மற்ற பகுதிகளை விட சற்று மேடாகவும் உள்ளது. அண்மையில் சிதைக்கப்பட்டுள்ள ஒரு கற்பதுக்கையின் மையத்தில் கருப்பு சிவப்பு மற்றும் சிவப்பு வண்ண ஈமக் கலயங்களின் ஓடுகள் காணப்படுகின்றன. இதனுடைய பழமையை காட்டுகிறது. இதைச்சுற்றி வட்டவடிவில் கல்வட்டங்கள் காணப்படுகின்றன. இவைகள் சுமார் கிமு 500 க்கு முந்தய காலத்தை சேர்ந்தது அதாவது 2500 ஆண்டுகளுக்கு முன் இந்த கல்வட்டங்களோடு கூடிய கற்பதுக்கை ஈமச்சின்னங்கள் அமைக்கப்பட்டு இருக்கலாம் என அருங்காட்சிய காப்பாளர் திரு கோவிந்தராஜ் அவர்கள் கூறினார்கள் .
2014 ல் மேட்டூர் நீர்தேக்கப்பகுதியில் 3000 ஆண்டுகள் பழமையான இதுபோன்ற கல்திட்டைகளை கண்டரிந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வுப்பணியில் , அருங்காட்சியக காப்பாச்சியர் கோவிந்தராஜ் தொல்லியல் ஆய்வாளர் சுகவன முருகன்,நாராயணமூர்த்தி பிரகாஷ், விஜயகுமார், டேவீஸ் , எம்.என்.இரவி மதிவாணன் தமிழ்செல்வன் ஆகியோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment