Sunday, 19 May 2019

61 -1200 -Years Old Found -HERO STONEவட்டெழுத்து நடுகல் கண்டுபிடிப்பு 1300 years Old -HERO STONE PANAGAMUTULU- பணகமுட்டலு நடுகற்கள் KHRDT HISTORY OF KRISHNAGIRI

page--1200 -Years Old Found -HERO STONEவட்டெழுத்து நடுகல் கண்டுபிடிப்பு 1300 years Old -HERO STONE PANAGAMUTULU- பணகமுட்டலு நடுகற்கள் KHRDT HISTORY OF KRISHNAGIRI

 8 ஆம் நுாற்றாண்டு வட்டெழுத்து நடுகல் அருங்காட்சியத்தில் ஒப்படைப்பு
(பணகமுட்டலு வயலில் 8 ஆம் நுாற்றாண்டின் வட்டெழுத்துடன் கூடிய நடுகல் கண்டெடுப்பு .நில உடைமையாளர் அதை அருங்காட்சியத்துள்கு அளித்தார்.)
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பழமையும் தொன்மையும் வெளிக்கொணரும் வகையில் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு மற்றும் கிருஷ்ணகிரி அருங்காட்சியகம் இணைந்து கிருஷ்ணகிரி ஒன்றியவளமையம் கிருஷ்ணகிரியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றும் முரளி கூறியதன் அடிப்படையில்
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம்  சப்பரம் பஞ்சாயத்தில் உள்ள பணகமுட்டலு கிராமத்தில் அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் மற்றும் நாரயணமூர்த்தி தலைமையில் ஆய்வு மேற்கொணடது . காலப்ப கவுண்டர் -  தொட்லன் மகன் முரளி என்பாரின் நிலத்தில் இந்த நடுகல் 1200 ஆண்டுக்கு முற்பட்ட   நிலத்தில் மண்ணில் புதைந்திருந்த வட்டெழுத்துடன் கூடிய நடுகல் கண்டெடுக்கப்பட்டது.  இதில் ஒரு வீரன் ஒரு கையில் வாளும் மறுகையில் வில்லும் கொண்டு போரிடுவது போன்று வடிக்கப்பட்டுள்ளது. அவனுடைய மார்பின் கீழ் பகுதியில் அம்பு பட்டு இறந்துள்ளான். இப் போரில் அவன் இறந்தன் நினைவாக இக்கல் எடுக்கப்பட்டு இருக்கிறது இவனுடைய மனைவியும் இவனுடன் உடன்கட்டை ஏறி இறந்துள்ளாள் . அக்காலத்தில் கணவன் இறந்த உடன் மனைவியும் உடன் கட்டை ஏறும் வழக்கம் எட்டாம் நுாற்றாண்டில் இருந்ததற்கான சான்றாகவும் இதைக் கொள்ளலாம் .இவனுடன் மற்றோர் விரனுடைய உருவமும் காணப்படுகிறது இவனும் இப்போரில் இறந்திருக்கலாம்.  இந்த நடுகல் அவனது சுமார் 1200 ஆண்டுகள் பழமையானது ஆகும் . இந்த மாவட்டத்தில் கிடைத்த ஒரு மிகப் பழமையான நடுகல் ஆகும்.
நடுகல்லில் உள்ளசெய்தி  - இருவரை எறிந்து பட்டார்  (போரில் இரண்டு பேரை கொன்று தானும் இறந்த ) என்ற வரிகள் மட்டும் முழுமையாய் உள்ளன. மேல் உள்ள வரிகளில் நான்று  ஐ கரை ஈல்லப்ப   என்று  முற்று பெறாமல் உள்ளதால் அதன் செய்தியை அறிய இயலவில்லை.  மேலே உள்ள தொடக்க வரிகளும் இல்லாததால் " போரில் இருவரைக் கொன்று தானும் இறந்த " செய்தியை இந்த வட்டெழுத்து கல்வெட்டு தெரிவிக்கிறது என அருங்காட்சியக காப்பாட்சியர் தெரிவித்தார். கிருஷ்ணகிரி அருங்காட்சியகத்தில் வட்டெழுத்துடன் கூடிய நடுகல் இல்லை எனவே தாங்கள் அருங்காட்சியத்துக்கு இந்த நடுகல்லை அளிக்க வேண்டும் என்று கோரிக்கக்விடுத்ததன் அடிப்படையில்  உரிமையாளரான தொட்லான் என்பவர் இந்த நடுகல்லை அருங்காட்சியத்துக்கு அளித்தார் .இந்த ஆய்வுப்பணியில் தொல்லியல் ஆய்வாளர் சுகவனமுருகன் , நாராணமூர்த்தி , செல்வகுமார் .மதிவாணன். ரவி , கணேசன், தமிழ்செல்வன்  ஆகியோருடன் பணகமுட்டலு கிராமத்தின் சிவசங்கர் , செந்தில் .முத்தமிழ் இசான் சர்மா.. சந்திரன் ஆசிரியர் ஆகியோர் பங்கேற்றனர்







https://temple.dinamalar.com/mahamaham/detail.php?id=93215
https://www.dinamalar.com/news_detail.asp?id=2251188
https://m.dailyhunt.in/news/india/tamil/tamil+nadu-epaper-tnadu/1+200+vattezhuthudan+koodiya+nadukal-newsid-116682769

https://youtu.be/L0p4EZWlsGQ

No comments:

Post a Comment

அங்கனப்பற்று - மகராசகடை - பாறை ஓவியம் -பனரத்து பண்டா- - MAHARAJAKADI -PANAMARATHUPANDA PREHISTORIC ROCK ART ( PAINTING ) புதிய கண்டறிதல்

மேலும் சிறப்பு பெறும் மகராசகடை ( அங்கனப்பற்று )பகுதி - நடன பாறை ஓவியம் -மகராசகடை மலை அடிவாரப்பகுதியில் உள்ள பனமரத்துபண்டா என்ற இடத்தில் ...