Friday, 15 June 2018

32.history of krishnagiri - DEVARMUKKULAM RANGANATHASWAMI -1014- 1190 HOWSALA KINGS தேவர் முக்குளம் ஶ்ரீரங்கநாதர் கோயில் .

 தேவர் முக்குளம் அருள் மிகு ரங்கநாத பெருமாள் அழகிய தோற்றம் 1014 முதல் 1190 வரையிலான காலப்பகுதியில் ◌ெஹாய்சான மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம்.


திருத்தல சிறப்பு-
கிருஷ்ணகிரி மாவட்டத்திலேயே பள்ளி கொண்ட நிலையில்  ரங்கநாதப்ப பெருமாள் மிகபிரமாண்டண்டமான வடிவத்தில் அமைந்துள்ள பழைமையான திருத்தலம் -ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக கருதப்படுகிறது.
முன்பு தேவர்முக்குளம்  (முசுகுந்தாபுரி பட்டிணம் ) எண்னும் பெறும் நகரமாக இருந்து உள்ளது ஆற்றங்கரையில் அமைந்த ஊராகவும் வரலாறு கூறுகிறது.


திருக்கோயில்  அமைப்பு திருகோயில் முகப்பில் பலிபீடமும் கருட கம்மமும் அமைக்கப்பட்டுள்ளது. 

கோயிலின் விலாசமான மண்டபம் தற்போது அமைக்கப்பட்டுள்ளது. இந்தமண்டபத்தில் 300 பேர் வரை அமர்ந்து கடவுளை தரிச்சனம் .தற்போது திருமணங்களும் இம் மண்டபத்தில் நடைபெறுகிறது.






ஶ்ரீரங்கநாதர் ஆலையமும் பின் புலத்தில்
வெங்கடாஜலபதி ஆலையமும் அமைந்துள்ள எழில் தோற்றம்


        ஒற்றை  பாறை மேல் அமைந்துள்ள வெங்கடாஜலபதி ஆலைய தோற்றம்



மலைமேல் ஏறுவதற்கான நுழைவாயில் விஜயநகரர்கள் காலத்தில் அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
 
பைரவரின் திருஉருவம் 
மலை ஏறும் போது முதலில் காணப்படும் பைரவர் திருகோயில்    கோயிலின் பக்கவாட்டில் கன்னட மொழி கல்வெட்டு காணப்படுகிறது

பைரவர் கோவிலின் எதிரில் காணப்படும் கருடகம்பத்தில் கன்னட கல்வெட்டுகள் விஜயநகரத்தாரின் கட்டுமானத்தை உறுதி செய்கின்றன.

 அடுத்து வருவது ஆஞ்சநேயர் திருகோயில்

இங்கு அமைக்கப்பட்டுள்ள வீர ஆஞ்சநேயர் தன் பக்தர்களுக்காக இறைவனிடம் வேண்டுவதாக கூறப்படுகிறது.

                                     கோயிலின் முன்பக்க தோற்றம்
மேலே உள்ள கோவிலில் உள்ள துளசியம்மன் திருஉருவம்  

◌ஹௌசாலமன்னரின் சின்னம் துளசியம்மன் கோவில் சுவற்றில்   பொறிக்கப்பட்டுள்ளது.

 மலைமேலுள்ள பெருமாள் திருஉருவம்

 கோவிலின் உட்புறத்தோற்றம்




அருங்காட்சியக காப்பாளர் திரு கோவிந்தராஜ் ,கணேசன். மதிவாணன்.செல்வராஜ்











மிகப்பழமையான எழுத்துக்கள் உடைய கல் வெட்டு கர்பகிரகத்தின் வாசலின்மேல் உள்ளது





 படங்களில் உள்ள து◌ாண்களின் வடிவங்கள் ஆய்வுக்காக படம் பிடிக்கப்பட்டது.



கோவிலைச்சுற்றி 7 தீர்த்தங்கள் உள்ளன
1.கீழ்கோயியல் சின்ன சுணை (விநாயகர் தீர்த்தம்)
2.. வால்சுணை  (ஆழ்வார் தீர்த்தம்
3. லட்சுமி தீர்த்தம்
4.மேல்மேற்கு வெங்கடாஜலபதி தீர்த்தம்
5.கிழக்கு பாபநாச தீர்த்தம்
6.கீழ் கிழக்கு புறம் துளசி தீர்ததம்
7.கிடடுக்கான் கொல்லையாண்ட அனுமன்தீர்த்தம்

 
 மலை ஏறும் இடத்தில் உள்ள ஆஞ்சநேயர் திருகோயில்  கோவிலில் உள்ள அனைத்து ஆஞ்சநேயர்சிலைகளும் கும்பிடும் நிலையிலேயே உள்ளது இக் கோவிலின் சிறப்பாகும்


கிருஷ்ணகிரி அருங்க◌ாட்சியக காப்பாளர் திரு கோவிந்தராஜ் அவர்கள்

மாற்றம் இருப்பினோ குறை இருப்பினோ தொடர்பு கொள்ளவும் 9787536970

3 comments:

அங்கனப்பற்று - மகராசகடை - பாறை ஓவியம் -பனரத்து பண்டா- - MAHARAJAKADI -PANAMARATHUPANDA PREHISTORIC ROCK ART ( PAINTING ) புதிய கண்டறிதல்

மேலும் சிறப்பு பெறும் மகராசகடை ( அங்கனப்பற்று )பகுதி - நடன பாறை ஓவியம் -மகராசகடை மலை அடிவாரப்பகுதியில் உள்ள பனமரத்துபண்டா என்ற இடத்தில் ...