அவர் பெயர் ராலே ''ltikal " இந்த ஊர் இன்றும் இட்டிக்கல் அகரம் என அழைக்கப்படுகிறது.
கோட்டையின் நுழைவு வாயில் ஒருவரே ஒருசமையம் எறும் படி உள்ளது மேல் உள்ளவர்களுக்கு எதிரியாயின் கோட்டைக்குள் செல்ல இயலாது
நுழைவாயிலின் தோற்றம் நுழைந்தஉடன் சிறு அம்மன் சிலை அமைத்துள்ளார்கள்.இன்றும் வழிபாடு நடக்கிறது.
மலை மேல் சென்றபின் ஒரு சிறு ஓய்வு
ஓய்வுக்கு பின் மீண்டும் மீண்டும் தேடல்
மலையின் உச்சிப்பகுதியில் தேடல்
மலைஏற்றத்துக்கு முன் ஒரு செல்பி OUr team 1.டேவீஸ் 2காவேரி.3.கணேசன் .4.மதிவாணன். 5 ஶ்ரீராமன் 6.பாலாஜி. 7.சென்னப்பன் .8.முபாரக் 9. சுந்தரம் .10 சுந்தரம். 11. நான் (தமிழ்செல்வன்) 12 ரவி கீழ் படத்தில் குச்சியுடன்
மலையின் மேற்கு பகுதி
மலையின் சரிவான பகுதியான வடமேற்கில் 10 அடி உயரமுள்ள சுவரை பா வடிவில் கட்டி மழைநீர் சேகரிப்பு அப்போதே செய்யப்பட்டுள்ளது. .
சுவர் செங்கல் மற்றும் கருங்கல் ஆகியவற்றால் கட்டப்பட்டுள்ளது. கட்டிடம் கட்ட காரை பயன்படுத்தப்பட்டுள்ளது . காரை அரைக்கபயன்படட கல்
கோட்டையின் சுவர் .
உச்சிப்பகுதியில் ஒரு செங்கல் கட்டிடம் கட்ட தொடங்கப்பட்டு அப்படியே உள்ளது.
மலைமீது இருந்து பார்த்தால் சுமார் 15 கி.மி தொலைவு வரை பார்க்கமுடிகிறது. மலையை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது .எதிரிகள் படை வருகிறதா என பார்க்க சரியான இடம் இராயகோட்டையில் இருந்து வந்தால் இங்கிருந்து பார்த்தாலே தெரிந்து விடும்
மலையை சுற்றிலும் 4 அடி அகலமுள்ள சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது.
எந்த பகுதியிலும மலை மீது ஏறி உள் வருவது மிக கடினம் அதனால் தான் இந்த மலையை தேர்ந்து எடுத்துள்ளனர்.
இது பற்றிய சில தகவல்கள் அளித்த துணை செயலர் சாதிக் அவர்களுக்கு நன்றி
மலைப்பாறையில் அமைக்கப்பட்டுள்ள உரல்
மலை ஏற்றம்பால் ராவ் என்பவரின் ஆட்சியின் கீழ் இந்த மலைக்கோட்டை இருந்ததால் இட்டிப்பால் துர்க்கம் என்றும் இது அழைக்கப்படுகிறது.
இது மைசூர் அரசினி முதலாம் நசரஉடையார் (1638-1659) கைப்பற்றும் வரை மராட்டியர் வசமே இருந்தது அப்போது தான் போரின் முக்கியத்துவம் கருதி இட்டிப்பால் ராவ் இந்த மலையை தேர்தெடுத்து ஒரு கோட்டையை கட்ட தொடங்கி மைசூர் அரசிடம் சென்றபின் இது கைவிடப்பட்டுள்ளது. எப்படிப்பார்த்தாலும் அவர் பெயர் இன்றும் நிலைப்பெற்று இட்டிகல் அகரம் என்ற ஊரின் பெயரில் இன்னும் வாழ்ந்து வருகிறது. இவரைப்பற்றிய குறிப்புகள் சேலம் கெசட்டில் உள்ளது.
இந்த ஊர் 1650 களிலே அமைக்கப்பட்டு இருக்கலாம் என ஆவணங்களில் இருந்து தெரிய வருகிறது
எங்களால் இயன்றது .
நன்றிகளுடன்..
அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ்
அருங்காட்சிய காப்பாச்சியர்
கோவிந்தராஜ்
-790453987
தலைவர் - நாராயணமூர்த்தி - 9442276076
செயலாளர் டேவிஸ்
-9487723678
பொருளாளர் விஜயகுமார் --9488830969
ஒருங்கிணைப்பாளர்
தமிழ்செல்வன்
-9787536970
தங்கள் பகுதியில் ஏதாவது கல்வெட்டுகள் மற்றும் நடுகற்கள் பழமையான கோவில்கள் இருப்பின் எங்களுக்கு தெரிவியுங்கள் நம் கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுக்க வசதியாக இருக்கும்.
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி அருங்காட்சியகத்துடன் இணைந்து வரலாற்றினை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இது தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, கிருஷ்ணகிரி வட்டாரக்கிளையின் ஜே.எஸ்.ஆர் கிருஷ்ணாஜி கல்வி அறக்கட்டளை நடத்துவதாகும்
இது தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கிருஷ்ணகிரி வட்டாரக்கிளையின் ஜே.எஸ்.ஆர் கிருஷ்ணாஜி கல்வி அறக்கட்டளை நடத்துவதாகும்
அருமை நண்பா
ReplyDeleteதருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒரே பாராமகால் கோட்டை வீரபத்திர துர்க்கம். இது பாலக்கோடு வட்டாரத்தில் அமைந்துள்ளது. மராத்திய மன்னர் இட்டிப்
ReplyDeleteபால் ராவ் என்பவரின் ஆட்சியின் கீழ் இந்த
மலைக்கோட்டை இருந்ததால் இட்டிப்பால்
துர்க்கம் என்றும் இது அழைக்கப்படுகிறது.
நீண்ட மலையரண்களுடன் ஐந்து நுழைவு
வாயில்களைக் கொண்ட பெரும் கோட்டை
இது.மலையின் மேலே வீரபத்திரர் கோயிலும் இடிபாடுகளுடன் கூடிய பெருமாள்
கோயிலும் உள்ளன.ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்டத்தின் முதல் ஆங்கில
கலெக்டரான கேப்டன் அலெக்சாண்டர் ரீடு
திப்புவிற்கு எதிரான மைசூர் போரின் போது
தனது படைப் பிரிவை இங்கு வைத்திருந்தார்.அதன் அடையாளமாக மலை
உச்சிக்கு சற்று கீழ் சமவெளிப் பகுதியில்
இடிபாடுகளுடன் கூடிய வெடிமருந்து கிடங்கும்,உச்சியில் நல்ல நிலையில் தானியக் கிடங்கும் உள்ளன.வற்றாத பெரும்
நீர்ச்சுணையான ராம லட்சுமி சுணையும்
வீரபத்திரர் கோயிலருகே உள்ளது.கொண்டு
சென்ற குடிநீர் மலையேற்றத்தின் போது பாதியிலேயே
தீர்ந்துவிட வேறுவழியின்றி சுணை நீரை
குடித்தேன்.தொல்லியல் பயணத்தில்
இவையெல்லாம் நிகழக்கூடியவைதான்.பதிவிட்டிருப்பது ஆங்கிலேயர்கள் வரைந்த வீரபத்திர துர்க்கம்
பாடம்.
PC: Anbalagan Arumugam