Sunday, 10 December 2023

10.12 2023 கிருஷ்ணகிரியைச் சேர்ந்த "உணர்வுகள்" தன்னார்வ தொண்டு நிறுவனம், கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் பின்புறம் அமைந்துள்ள "சின்னேரி"-க் கரை முழுக்க மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சியை நடத்தியுள்ளது

கிருஷ்ணகிரியைச் சேர்ந்த "உணர்வுகள்" தன்னார்வ தொண்டு நிறுவனம், கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் பின்புறம் அமைந்துள்ள "சின்னேரி"-க் கரை முழுக்க மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சியை நடத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் சின்னேரியின் கிழக்கு திசையில் அமைந்துள்ள ஒரு கரை நெடுக்க சுமார் 50 மரக்கன்றுகளை நட்டு, கடந்த ஏழு மாதங்களாக பெரும் சவால்களுக்கு மத்தியில் அவற்றை பராமரித்தும், பாதுகாத்தும் வந்த நிலையில், ஏரியின் வடக்கு திசையில் அமைந்துள்ள மற்றொரு கரை நெடுக்க இம்மாபெரும் மரக்கன்றுகள் நடும் விழாவை நடத்தியுள்ளனர். இந்நிகழ்வில், பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். மரக்கன்றுகளை நட்டவர்களை ஊக்குவிக்கும் வகையில்அவர்களுக்கு வீட்டில் வளரும் சிறு செடிகள் வழங்கப்பட்டது. விழாவில் பங்கேற்ற சில நபர்கள் தானாக முன்வந்து மரக்கன்று வளர்ப்பின் பராமரிப்புக்கான பொருட்செலவுகளை ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்தது அங்கு கூடியிருந்த அனைவரையும் நெகிழ வைத்தது குறிப்பிடத்தக்கது. மகிழம், வேப்பம், புங்கம், புன்னை, அரசம், ஆலம், அத்தி, கல் அத்தி, பூவரசம், மந்தாரை, கடம்பம், மகாகனி, தாளி பனை போன்ற பல்வகை மரங்களைக் கொண்டு நடந்த இந்த நடவு செய்யும் நிகழ்ச்சி கிருஷ்ணகிரி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

No comments:

Post a Comment

அங்கனப்பற்று - மகராசகடை - பாறை ஓவியம் -பனரத்து பண்டா- - MAHARAJAKADI -PANAMARATHUPANDA PREHISTORIC ROCK ART ( PAINTING ) புதிய கண்டறிதல்

மேலும் சிறப்பு பெறும் மகராசகடை ( அங்கனப்பற்று )பகுதி - நடன பாறை ஓவியம் -மகராசகடை மலை அடிவாரப்பகுதியில் உள்ள பனமரத்துபண்டா என்ற இடத்தில் ...