• தமிழகத்தின் பெரும் பகுதிக்கு ஒரு காலத்தில் தலைநகராக இருந்த சின்ன கொத்துர் எனப்படும் தேவர்குதானியில் காணப்படும் ஒரு நடுகல் வியக்க வைக்கிறது இதுவரை தமிழ்நாட்டிலேயே தித்தமலையில் உடனே தலையை வெட்டு என்ற வாசகத்தோடு எந்த ஒரு நடு கல்லும் கிடைக்கவில்லை அப்படி ஒரு நடுகல் சின்ன கொத்து கோவிலிலே காணப்படுகிறது தன்னை பலியிட வேண்டும் என அந்தப் பெண் விரும்பி தலைபலி கொடுக்கப்படுகிறாள் இதிலிருந்து அவளுடைய தியாகம் நமக்கு தெரிய வருகிறது அமர்ந்த நிலையில் கையில் பூவோடு காணப்படும் இந்தப் பெண்ணை வீரன் ஒருவன் வெட்டுவது போன்ற காட்சி செலுத்தப்பட்டிருக்கிறது இது 15 ஆம் நூற்றாண்டு காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம்.
class="separator" style="clear: both;">
• இந்த பெண் இறந்தவுடன் அவள் கடவுளாக போற்றப்படுவதை அதன் அருகே இருக்கும் மற்றொரு நடுதல் நமக்கு தெரியப்படுத்துகிறது இந்த கல்வெட்டுடன் கூடிய நடுக்கலில் காணப்படும் அதே சிற்பம் மிக அழகாக செதுக்கப்பட்டு சாக்கியம்மாள் என்ற தெய்வமாக வழிபட்டு வருகிறார்கள் நாட்டுக்காகவோ தெய்வத்திற்காகவோ தன்னை பலியிட்டுக் கொண்ட அவளை தெய்வமாக வழிபடும் மரபு நம்மிடையே இருந்தது என்பதையும் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்
சந்தனப்பள்ளி என்ற ஊரின் ஏரிக்கரையில் அமைந்திருக்கும் ஒரு நடுகல் வீட்டில் இருக்கும் நடு கல்லில் மூன்று பெண்கள் குதிரை மேல் அமர்ந்து செல்வது போன்ற காட்சி இது 13 அல்லது 14 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் இந்த பெண்கள் எதோ ஒரு சடங்கிற்காக செல்கின்றனர் இவர்களின் மீது வெண்கொற்றகுடை காட்டப்பட்டுள்ளது அப்படியானால் இவர்கள் முக்கியமான நபர்களாக இருப்பதற்கான வாய்ப்பு உண்டுஇது இந்த பெண்களுக்காக எடுக்கப்பட்ட தனி நடுகல் ஆகும்.
மல்லிகார்சுன துர்கம் அருகே உள்ள அந்தேவனப்பள்ளியில் பெண்னுக்கான தனி நடுகல் எடுக்கப்பட்டுள்ளது . இவர் அமர்ந்து கைகூப்பி இறைவனை வழிபடுவது போல் காட்டப்பட்டுள்ளார் , அருகே சிவலிங்கத்தை வழிபடும் காட்சியும் செதுக்கப்பட்டுள்ளது. மற்றோர்புறம் பணிப்பெண் காணப்படுகிறார் இதிலிருந்து இவர் முக்கியமான ஒருவராகத்தான் இருக்க வேண்டும். இவர் இறந்த பின்பு தேவலோகத்துக்கு செல்லும் காட்சி மேல்பகுதியில் செதுக்கப்பட்டுள்ளது.
class="separator" style="clear: both;">
மல்லிகார்சுன மலைகோவிலில் வைக்கப்பட்டுள்ள இது மலைக்கீழ் உள்ள அம்மையாரின் படமாகக்கூட இருக்க வாய்ப்பு அதிகம்
கிருஷ்ணகிரி மாவட்ட நடுகற்களில் பெண்களுக்கான முக்கியத்துவம் - தொல்லியல்கழகம்31ஆம் ஆண்டு கருத்தரங்கம் தொல்லியல்கழகம்31ஆம் ஆண்டு கருத்தரங்கம் - தி.தமிழ்செல்வன் -கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு https://youtu.be/wec7gZljsk0