Sunday, 23 July 2023

எங்க ஊரு வரலாற்றுச் -சிறப்பு கிருஷ்ணகிரி மாவட்டத்தல் பெண்களுக்கான நடுகற்கள் #நடுகற்கள் #பெண்கள் #அரசி #heroine #herostone #krishnagiri #history #கிருஷ்ணகிரி #வரலாறு

• பெண்னுக்கு ஆண்களுக்கு நிகரான இடத்தை ஆயிரம் வருடங்களுக்கு கொடுத்தான் என்பதற்கு ஆதாரமாக கிருஷ்ணகிரி சோமேஷ்வரர் கோவிலில் வைக்கப்பட்டுள்ள நடுகல் இருக்கிறது கோவிலை கட்டிய குனபதாசரின் மனைவிகளான சிறிய காமவை , பெரிய காமவை என்பது கல்வெட்டிலும் குறிப்பிடப்பட்டுள்ளது இதிலிருந்து பெண்களுக்கு இராசேந்திர சோழன் II ( கி.பி 1050 ) ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே செதுக்கப்பட்டது கல்வெட்டு ஆதாரத்துடன் .
• அடுத்து ஓசூர் பச்சை குளத்துக்கு அருகே பெண்ணுக்காக எடுக்கப்பட்ட ஒரு நடுகல் உள்ளது இந்த நடு கல் மிகுந்த சிறப்புடையது ஏனென்றால் பெண்ணுக்காக எடுக்கப்பட்ட நடுகல் மட்டுமல்ல இந்தப் பெண் ஒரு அரியாசனத்தில் அமர்ந்திருக்கிறார் அதுவும் மகாராஜ லிலாசனத்தில் இளவரசி போன்று அமர்ந்துள்ளார் அவருடைய கையில் வளமையின் என் சின்னமான கிளி காட்டப்பட்டுள்ளது இருபுறமும் மலர்களை ஏந்திய சிறு உருவங்களும் இருபுறமும் சாமரம் வீசும் இரண்டு பெண்களும் காட்டப்பட்டுள்ளது இவருக்கான முக்கியத்துவத்தை நமக்கு தெரிவிக்கிறது.
• நடுகல்லின் மேற்பகுதியில் சிவலிங்கம் நந்தியும் சங்கும் காட்டப்பட்டுள்ளது அதன் அருகே ஒரு பூஜாரி பூஜையில் ஈடுபடுவது போன்று காணப்படுகிறது நடு கல்லில் காணப்படும் பெண் அந்த சிவனை வழிபடுவது போலவும் மற்ற மூன்று பணிப்பெண்களும் அவர் அருகே நிற்கின்றனர் நாடுகல்லின் கீழ் உள்ள பகுதியில் பூரண கும்பமும் குத்து விளக்கு இரண்டும் மங்கள சின்னமாக காட்டப்பட்டுள்ளது
• தமிழகத்தின் பெரும் பகுதிக்கு ஒரு காலத்தில் தலைநகராக இருந்த சின்ன கொத்துர் எனப்படும் தேவர்குதானியில் காணப்படும் ஒரு நடுகல் வியக்க வைக்கிறது இதுவரை தமிழ்நாட்டிலேயே தித்தமலையில் உடனே தலையை வெட்டு என்ற வாசகத்தோடு எந்த ஒரு நடு கல்லும் கிடைக்கவில்லை அப்படி ஒரு நடுகல் சின்ன கொத்து கோவிலிலே காணப்படுகிறது தன்னை பலியிட வேண்டும் என அந்தப் பெண் விரும்பி தலைபலி கொடுக்கப்படுகிறாள் இதிலிருந்து அவளுடைய தியாகம் நமக்கு தெரிய வருகிறது அமர்ந்த நிலையில் கையில் பூவோடு காணப்படும் இந்தப் பெண்ணை வீரன் ஒருவன் வெட்டுவது போன்ற காட்சி செலுத்தப்பட்டிருக்கிறது இது 15 ஆம் நூற்றாண்டு காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம்​. class="separator" style="clear: both;">
• இந்த பெண் இறந்தவுடன் அவள் கடவுளாக போற்றப்படுவதை அதன் அருகே இருக்கும் மற்றொரு நடுதல் நமக்கு தெரியப்படுத்துகிறது இந்த கல்வெட்டுடன் கூடிய நடுக்கலில் காணப்படும் அதே சிற்பம் மிக அழகாக செதுக்கப்பட்டு சாக்கியம்மாள் என்ற தெய்வமாக வழிபட்டு வருகிறார்கள் நாட்டுக்காகவோ தெய்வத்திற்காகவோ தன்னை பலியிட்டுக் கொண்ட அவளை தெய்வமாக வழிபடும் மரபு நம்மிடையே இருந்தது என்பதையும் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்
சந்தனப்பள்ளி என்ற ஊரின் ஏரிக்கரையில் அமைந்திருக்கும் ஒரு நடுகல் வீட்டில் இருக்கும் நடு கல்லில் மூன்று பெண்கள் குதிரை மேல் அமர்ந்து செல்வது போன்ற காட்சி இது 13 அல்லது 14 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் இந்த பெண்கள் எதோ ஒரு சடங்கிற்காக செல்கின்றனர் இவர்களின் மீது வெண்கொற்றகுடை காட்டப்பட்டுள்ளது அப்படியானால் இவர்கள் முக்கியமான நபர்களாக இருப்பதற்கான வாய்ப்பு உண்டுஇது இந்த பெண்களுக்காக எடுக்கப்பட்ட தனி நடுகல் ஆகும்.
மல்லிகார்சுன துர்கம் அருகே உள்ள அந்தேவனப்பள்ளியில் பெண்னுக்கான தனி நடுகல் எடுக்கப்பட்டுள்ளது . இவர் அமர்ந்து கைகூப்பி இறைவனை வழிபடுவது போல் காட்டப்பட்டுள்ளார் , அருகே சிவலிங்கத்தை வழிபடும் காட்சியும் செதுக்கப்பட்டுள்ளது. மற்றோர்புறம் பணிப்பெண் காணப்படுகிறார் இதிலிருந்து இவர் முக்கியமான ஒருவராகத்தான் இருக்க வேண்டும். இவர் இறந்த பின்பு தேவலோகத்துக்கு செல்லும் காட்சி மேல்பகுதியில் செதுக்கப்பட்டுள்ளது. class="separator" style="clear: both;">
மல்லிகார்சுன மலைகோவிலில் வைக்கப்பட்டுள்ள இது மலைக்கீழ் உள்ள அம்மையாரின் படமாகக்கூட இருக்க வாய்ப்பு அதிகம்
கிருஷ்ணகிரி மாவட்ட நடுகற்களில் பெண்களுக்கான முக்கியத்துவம் - தொல்லியல்கழகம்31ஆம் ஆண்டு கருத்தரங்கம் தொல்லியல்கழகம்31ஆம் ஆண்டு கருத்தரங்கம் - தி.தமிழ்செல்வன் -கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு https://youtu.be/wec7gZljsk0

No comments:

Post a Comment

அங்கனப்பற்று - மகராசகடை - பாறை ஓவியம் -பனரத்து பண்டா- - MAHARAJAKADI -PANAMARATHUPANDA PREHISTORIC ROCK ART ( PAINTING ) புதிய கண்டறிதல்

மேலும் சிறப்பு பெறும் மகராசகடை ( அங்கனப்பற்று )பகுதி - நடன பாறை ஓவியம் -மகராசகடை மலை அடிவாரப்பகுதியில் உள்ள பனமரத்துபண்டா என்ற இடத்தில் ...