சூலம் நமக்கு இது சிவபெருமானின் ஆயுதமாக தெரியும் அதுமட்டுமல்லாமல் பாறைகளிலும்
, கருங்கல்லிலும் சூலம் பொறிக்கப்பட்ட கற்களை சில இடங்களில் பார்க்கலாம் .
பொதுவாகவே
தேவதானமாக வழங்கப்படும் நிலங்களை
அடையாளப்படுத்தும் வகையில்
வைணவ கோயில்களுக்கு (பெருமாள்
கோயில்) சங்கு சக்கர குறியீடு பொறித்த திருவாழிக்கல்லும்,
சமண கோயில் நிலங்களுக்கு முக்குடைக்கல்லும்,சைவக்கோயில்களான
சிவன் , அய்யனார், உள்ளிட்ட கோயில் நிலங்களில் திரிசூலக்குறியுடைய
கற்களும் நடப்பட்டிருப்பது நமது மாவட்டத்தில் பல இடங்களில் காணப்படுகிறது.
இதை சூலக்கல் பற்றி இன்னொன்றையும்
குறிப்பிட வேண்டும் . சோழர்கள் காலத்திலும் இவை நடைமுறையில் இருந்தன .
இராஜராஜன் மற்றும் முதலாம் குலோத்துங்கன்
காலத்தில் நிலம் அளக்கப்பெற்று நிலத்திற்கு எல்லைக்கற்கள் நடப்பட்டதை கல்வெட்டுகள்
வெளிப்படுத்துகின்றன.
அதேபோல் பரகேசரி வர்மன் மூன்றாம் குலோத்துங்க சோழன்
காலத்திலும் இந்நடைமுறை பின்பற்றபட்டதோடு, ஒரு சில கிராமங்களில் ஊரார்களிடம் விவசாய
நிலங்கள் பெறப்பட்டு அவை கோயில்களுக்கு வரிநீக்கப்பட்ட இறையிலி தேவதானமாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலங்களில் இருந்து கிடைக்கும் வருவாய் கோவிலின் தினசரி வழிபாட்டுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.நமது
மாவட்டத்தில் மூன்றாம் குலோத்துங்கசோழன் கட்டிய பென்னைநாதர் (பென்னேஷ்வரமடம்) கோவில்
இருப்பது நமக்கு தெரியும் ...
அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம்
சின்னகானப்பள்ளி கிராமத்தில் உள்ள யுவராஜ் என்பவர் நிலத்தில் கிடைக்கப்பெற்ற சூலக்கல்லில்
1. கோயி
2. ல் கட்டி
3. தேவதா
4.னமா
5.க வி
6.ட்டோம்
கோவிலைக் கட்டி தேவதானமாக விட்ட விரவத்தை கூறுகிறது
.யுவராஜ் அவர்கள் கூறியபடி அங்கிருந்து இரண்டு கிமி தொலைவில் மற்றோர் எல்லைக்கலான சூலக்கல்
இருப்பதும் படமாக்கப்பட்டது . இப்பகுதியில் இன்னும் 2 எல்லைகளை குறிக்கும் சூலக்கல்லும்
ஒருகல்வெட்டும் இருந்திருக்க வேண்டும் காணப்பெற்றால் இன்னும் விவரங்கள் கிடைக்கும்
No comments:
Post a Comment