சோழரின் இறுதி கால கல்வெட்டு கண்டெடுப்பு
கிருஷ்ணகிரியின் வரலாற்றை வெளிக்கொண்டு வரும் நோக்கில் நாராயணமூர்த்தி தலைமையில் செயல்பட்டு வரும் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வுமற்றும் ஆவணப்படுத்தும் குழு அருங்காட்சியக காப்பாச்சியர் , தொல்லியல் ஆய்வாளர் சுகவணமுருகன் , வரலாற்று ஆசிரியர் ரவி ஆகியோருடன வேப்பனப்பள்ளி ஒன்றியம் தம்மாண்ரஅள்ளி என்ற ஊரில் பசவராஜ் ஆசிரியர் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டது..
கல்வெட்டு வாசகம்...
1. ஸ்வஸ்திஸ்ரீ சித்றபானு ஸம்வத்ச
2. ரத்து வீரராஜேந்திரசோழ தேவற்
3. க்கு யாண்டு எட்டாவது விரியூர் நா
4. ட்டார் மூவுடையார் கோமறு உடை
5. யார் கோயில் திருப்பணிய் செய்வ
6. தாகவும் அத்திமல்லநாந பூர்
7. வாதராயன் பேரது சித்திரமே
8. ழியாந பெரியநாட்டோம்
9. எம்மிலிசைந்து திருப்பணி
10. ய் செய்யக்கடவதாகவும் அ
11. முதுபடிய் பூசைய் செய்
12. வதாகவும் நாங்கள் வைத்
13. துக் குடுத்தபடியாவது சிறு
14. ஊர் ஒரு பணமும் பெரிய
15.வூர் இரண்டு பணமும் இட
16. பேரும் பெரிய்யோரும் இ
17. ன்று வர தேவப்பாதம் எம்
18. மில் இசைந்து வச்சுகுடு
19. த்தோம் பெரிய நாட்
20. டோம் இதுக்கு விக்கிநஞ்
21. செய்தவன் கங்கை க
22. ரையில் குரல் பசுவை
23. க்கொன்ற பாவங்கொள்வான்.
அருங்காட்சியக காப்பாச்சியர் கூறும் போது வழக்கம் போல் நாம் கண்டறியும் கல்வெட்டுகள் யாவும் வரலாற்றுக்கு ஒரு புதிய வெளிச்சத்தை தருவதாகவே உள்ளன. இக்கல்வெட்டும் அதற்கு ஏற்றார் போலவே உள்ளது. இதில் இரண்டு முக்கிய வரலாற்று செய்திகள் உள்ளன. முதலாவதாக பூர்வதராஜர் என்ற குறுநில மன்னர்கள் பற்றியது. நமது மாவட்டத்தில் இவர்களைப் பற்றிய தனித்த கல்வெட்டுக்களே அதிகம். ஓரிரண்டு ஒய்சாசாள கல்வெட்டுகளில் இவர்களது பெயர்கள் காணப்பட்டதால் சாந்த லிங்கம் அவர்கள் பூர்வா தராயர்களை ஓய்சளர்களின் குறுநில தலைவர்கள் என்றார். ஆனால் நாம் பார்த்த இந்த இக்கல்வெட்டில் முதன்முறையாக சோழர் ஆட்சி ஆண்டில் பூர்வாத ராயரின் பெயர் வந்துள்ளது.
கல்வெட்டுச் வீர ராஜேந்திரனின் 8 வது ஆட்சியண்டில் அத்திமல்லன் பூர்வதராயன் பேரில் இருந்த சித்திரமேழி பெரியநாட்டார் என்ற வணிகக்குழு விரியூர் நாட்டில் கோமறு உடையார் என்ற கோயிலில் திருப்பணி பூசை முதலியவற்றை செய்ய பணம் தானமளித்த செய்தியை இக்கல்வெட்டு தெறிவிக்கிறது
மூன்றாம் ராஜராஜனின் ஆட்சியாண்டோடு ஒத்துவருவதால் இவருக்கும் வீரராஜேந்திரன் என்ற பெயர் இருந்திருக்கலாம்.(இருக்க வாய்ப்பில்லை என்பதை நீக்கிவிடவும்). அத்திமல்லன் (கி.பி.1260) குறிப்பிடப்படுவதால் தமிழ் ஆண்டை கருத்தில் கொள்ளாமல் இவனை மூன்றாம் ராஜேந்திரன் எனக்கொள்ளலாம். எனவே சோழர் வரலாற்றின் இறுதிகட்டத்தில் நிலவிய குழப்பமான சூழ்நிலையை இக்கல்வெட்டு வெளிச்சமிட்டு காடுவதாகக் கருதலாம். மேலும் விரிவான ஆய்வுக்கு இக்கல்வெட்டு அடித்தளம் இட்டிருக்கிறது.
மூன்றாம் ராஜராஜனின் ஆட்சியாண்டோடு ஒத்துவருவதால் இவருக்கும் வீரராஜேந்திரன் என்ற பெயர் இருந்திருக்கலாம்.(இருக்க வாய்ப்பில்லை என்பதை நீக்கிவிடவும்). அத்திமல்லன் (கி.பி.1260) குறிப்பிடப்படுவதால் தமிழ் ஆண்டை கருத்தில் கொள்ளாமல் இவனை மூன்றாம் ராஜேந்திரன் எனக்கொள்ளலாம். எனவே சோழர் வரலாற்றின் இறுதிகட்டத்தில் நிலவிய குழப்பமான சூழ்நிலையை இக்கல்வெட்டு வெளிச்சமிட்டு காடுவதாகக் கருதலாம். மேலும் விரிவான ஆய்வுக்கு இக்கல்வெட்டு அடித்தளம் இட்டிருக்கிறது.
எங்களால் இயன்றது . நன்றி
தலைவர் - நாராயணமூர்த்தி- 9442276076
செயலர் டேவீஸ் -9487723678
பொருளர் விஜயகுமார் --9488830969
ஒருங்கிணைப்பாளர்
தமிழ்செல்வன் -9787536970
தங்கள் பகுதியில் ஏதாவது கல்வெட்டுகள் மற்றும் நடுகற்கள் பழைமையான கோவில்கள் இருப்பின் எங்களுக்கு தெவியுங்கள் நம் கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுக்க வசதியாக இருக்கும்.
No comments:
Post a Comment