விவசாய நிலத்தில் 700 ஆண்டு பழமையான இரண்டு சோழர் கால பைரவர் சிலைகள் கண்டெடுக்கப்பட்டது .
கிருஷ்ணகிரியின் வரலாற்றை வெளிக்கொண்டு வரும் நோக்கில் நாராயணமூர்த்தி தலைமையில் செயல்பட்டு வரும் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வுமற்றும் ஆவணப்படுத்தும் குழு அருங்காட்சியக காப்பாச்சியர் , தொல்லியல் ஆய்வாளர் சுகவணமுருகன் , வரலாற்று ஆசிரியர் ரவி ஆகியோருடன் கீழ் பையூர் என்ற ஊரில் ஆய்வு மேற்கொண்டது.
பையூர் இந்து ஊர் வரலாற்று சிறப்புடைய இடமாக குறிக்கப்படுகிறது. இது பையூர் நிலையுடையான். பையூர் பற்று . பையூர் சீமை என பலவாறாக கல்வெட்டுகளில் காணப்படுகிறது. மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் மிக சிறப்பு வாய்ந்த ஊராக இருந்துள்ளது. இந்த ஊரின் நடுவில் சிவன் கோவில் இருந்ததற்கான அடையாளம் காணப்படுகிறது. இக் கோவிலின் நந்தி வேறு ஒரு இடத்திலும் .விநாயகர் சிலை ஒரு இடத்திலும் காணப்படுகிறது. அதேப்போல் மத்வ மட மதகுருமார்கள் சமாதிநிலையடையும் பிருந்தாவணம் ஒன்றும் அழிந்த நிலையில் காணப்படுகிறது .
மணிகுண்டு என்பவரின் தோட்டத்தில் இரண்டு பைரவர் சிலைகள் புதைந்து இருந்ததாகவும் சிறிது வெளியே தெரிவதாகவும் ஊர் மக்கள் கூறினார்கள் . அவரின் அனுமதி பெற்று சிலைகளை வெளியே எடுத்து ஆய்வு செய்யப்பட்டது...அவை இரண்டும் பைரவர் சிலைகள் ஆகும் பைரவர் என்பது சிவவடிவின் அகோர வடிவம் என்பார்கள்.
அகோர வடிவங்களின் இலக்கணங்களாக சுடர்முடி என்று சொல்லக்கூடிய முடியானது மேல்நோக்கி தீச்சுடர் போல் மேல் நோக்கி செல்வது போல் இருவருக்கும் காட்டப்பட்டுள்ளது . கோரப்பல்லும் கண்களும் உக்கிரநிலையில் இருக்கிறது . வேறு அடையாளங்களாக உடுகை பிச்சைப்பாத்திரம் பாசக்கயிறு ,சூலம் வாகனமான நாய் காட்டப்பட்டுள்ளது. பைரவர் நிர்வாணநிலையில் காட்டப்பட்டுள்ளார். மற்றொன்று நாகத்தை இரண்டு பக்கங்களிலும் கொண்டுள்ளார் இவர் நாக பைரவர் என அழைக்கப்படுகிறார். சுமார் இவை 700 ஆண்டுகளுக்கு முற்பட்ட பிற்கால சோழர் அல்லது வைசாளர் கால சிவன் கோவிலைச் சேர்ந்த சிற்பங்கள் என அருங்காட்சிய காப்பாட்சியர் கோவிந்த ராஜ் அவர்கள் கூறினார் இந்த ஆய்வுப்பணியில் பேராரியை வாசுகி விஜயகுமார் , பிரகாஷ் ,கணேசன், டேவீஸ். மதிவாணன், தமிழ் செல்வண், மதிமணியன் மணோகரன் காவேரி ஆகியேர் ஈடுப்ட்டனர்
அருகே இருந்த விநாயகர்