தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி வரலாற்றை அருங்காட்சியகத்துடன் இணைந்து கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல்
Wednesday, 29 May 2019
Sunday, 19 May 2019
61 -1200 -Years Old Found -HERO STONEவட்டெழுத்து நடுகல் கண்டுபிடிப்பு 1300 years Old -HERO STONE PANAGAMUTULU- பணகமுட்டலு நடுகற்கள் KHRDT HISTORY OF KRISHNAGIRI
page--1200 -Years Old Found -HERO STONEவட்டெழுத்து நடுகல் கண்டுபிடிப்பு 1300 years Old -HERO STONE PANAGAMUTULU- பணகமுட்டலு நடுகற்கள் KHRDT HISTORY OF KRISHNAGIRI
8 ஆம் நுாற்றாண்டு வட்டெழுத்து நடுகல் அருங்காட்சியத்தில் ஒப்படைப்பு
(பணகமுட்டலு வயலில் 8 ஆம் நுாற்றாண்டின் வட்டெழுத்துடன் கூடிய நடுகல் கண்டெடுப்பு .நில உடைமையாளர் அதை அருங்காட்சியத்துள்கு அளித்தார்.)
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பழமையும் தொன்மையும் வெளிக்கொணரும் வகையில் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு மற்றும் கிருஷ்ணகிரி அருங்காட்சியகம் இணைந்து கிருஷ்ணகிரி ஒன்றியவளமையம் கிருஷ்ணகிரியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றும் முரளி கூறியதன் அடிப்படையில்
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் சப்பரம் பஞ்சாயத்தில் உள்ள பணகமுட்டலு கிராமத்தில் அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் மற்றும் நாரயணமூர்த்தி தலைமையில் ஆய்வு மேற்கொணடது . காலப்ப கவுண்டர் - தொட்லன் மகன் முரளி என்பாரின் நிலத்தில் இந்த நடுகல் 1200 ஆண்டுக்கு முற்பட்ட நிலத்தில் மண்ணில் புதைந்திருந்த வட்டெழுத்துடன் கூடிய நடுகல் கண்டெடுக்கப்பட்டது. இதில் ஒரு வீரன் ஒரு கையில் வாளும் மறுகையில் வில்லும் கொண்டு போரிடுவது போன்று வடிக்கப்பட்டுள்ளது. அவனுடைய மார்பின் கீழ் பகுதியில் அம்பு பட்டு இறந்துள்ளான். இப் போரில் அவன் இறந்தன் நினைவாக இக்கல் எடுக்கப்பட்டு இருக்கிறது இவனுடைய மனைவியும் இவனுடன் உடன்கட்டை ஏறி இறந்துள்ளாள் . அக்காலத்தில் கணவன் இறந்த உடன் மனைவியும் உடன் கட்டை ஏறும் வழக்கம் எட்டாம் நுாற்றாண்டில் இருந்ததற்கான சான்றாகவும் இதைக் கொள்ளலாம் .இவனுடன் மற்றோர் விரனுடைய உருவமும் காணப்படுகிறது இவனும் இப்போரில் இறந்திருக்கலாம். இந்த நடுகல் அவனது சுமார் 1200 ஆண்டுகள் பழமையானது ஆகும் . இந்த மாவட்டத்தில் கிடைத்த ஒரு மிகப் பழமையான நடுகல் ஆகும்.
நடுகல்லில் உள்ளசெய்தி - இருவரை எறிந்து பட்டார் (போரில் இரண்டு பேரை கொன்று தானும் இறந்த ) என்ற வரிகள் மட்டும் முழுமையாய் உள்ளன. மேல் உள்ள வரிகளில் நான்று ஐ கரை ஈல்லப்ப என்று முற்று பெறாமல் உள்ளதால் அதன் செய்தியை அறிய இயலவில்லை. மேலே உள்ள தொடக்க வரிகளும் இல்லாததால் " போரில் இருவரைக் கொன்று தானும் இறந்த " செய்தியை இந்த வட்டெழுத்து கல்வெட்டு தெரிவிக்கிறது என அருங்காட்சியக காப்பாட்சியர் தெரிவித்தார். கிருஷ்ணகிரி அருங்காட்சியகத்தில் வட்டெழுத்துடன் கூடிய நடுகல் இல்லை எனவே தாங்கள் அருங்காட்சியத்துக்கு இந்த நடுகல்லை அளிக்க வேண்டும் என்று கோரிக்கக்விடுத்ததன் அடிப்படையில் உரிமையாளரான தொட்லான் என்பவர் இந்த நடுகல்லை அருங்காட்சியத்துக்கு அளித்தார் .இந்த ஆய்வுப்பணியில் தொல்லியல் ஆய்வாளர் சுகவனமுருகன் , நாராணமூர்த்தி , செல்வகுமார் .மதிவாணன். ரவி , கணேசன், தமிழ்செல்வன் ஆகியோருடன் பணகமுட்டலு கிராமத்தின் சிவசங்கர் , செந்தில் .முத்தமிழ் இசான் சர்மா.. சந்திரன் ஆசிரியர் ஆகியோர் பங்கேற்றனர்
https://temple.dinamalar.com/mahamaham/detail.php?id=93215
https://www.dinamalar.com/news_detail.asp?id=2251188
https://m.dailyhunt.in/news/india/tamil/tamil+nadu-epaper-tnadu/1+200+vattezhuthudan+koodiya+nadukal-newsid-116682769
https://youtu.be/L0p4EZWlsGQ
Tuesday, 14 May 2019
60- 2500 Years Old Dolmens in Krishnagiri dam -KHRDT-பெருங்கற்கால ஈமச்சின்னங்கள்
கிருஷ்ணகிரி மாவட்டம் மிகவும் பழமையான வரலாறு கொண்டது. இம்மாவட்டத்தில் தான் வரலாற்று காலத்திற்கு முந்தைய பெருங்கற்படைக்கால மக்களின் நினைவுச் சின்னங்கள் அதிகம் கிடைக்கின்றன. முக்கியமாக கற் திட்டைகள், கல் வட்டங்கள், குத்துக்கற்கள், கற்பதுக்கைகள், வட்டப்புதை குழிகள் என பெருங்கற்கால நாகரீகத்தின் நினைவுச் சின்னங்கள் அனைத்தும் நம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிடைக்கின்றது.
கடந்த 39 வருடங்களில் இல்லாத அளவுக்கு தண்ணீர் வற்றிய அணைகட்டின் நீர் தேக்கும் பகுதியில் பழைய பேயனப்பள்ளி ஊரின் அருகே உள்ள சிறு குன்றின் மேற்கு பகுதியில் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவனப்படுத்தும் குழு தலைவர் நாரயணமூர்த்தி தலைமையில் கிருஷ்ணகிரி அணைப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டது அங்கு பெருங்கற்படைக்காலப் பண்பாட்டைச் சேர்ந்த இறந்தவர்களுக்கான நினைவுச் சின்னங்கள் காணப்படுகின்றன . இது பொதுவாக, மூன்று பக்கங்களில் செங்குத்தான பலகைகற்களும் மேல் தட்டையான கற்பலகை ஒன்றையும் கொண்டிருக்கிறது. இதன் கிழக்கு பகுதியில் உள்ள கல்லில் மட்டும் இடுதுளை காணப்படுகிறது. உடைந்த நிலையில் இருந்தாலும் கிழக்கு நோக்கிய கல்லில் துளை இருப்பது உடைந்த கற்பலகைகளில் இருந்து தெரிய வருகிறது.
சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இச்சின்னங்கள் அமைந்துள்ள பகுதியின் மையப்பகுதியில் சுமார் 150 அடிக்கு 150 அடி அளவுக்கு சதுர வடிவில் வரப்பு போன்று கற்களை வைத்துள்ளனர். இதில் 12 அடி நீளமும் 8அடி அகலமும் 1.25 உயரமுள்ள மிகப் பெரிய மூடுகல்லினைக் கொண்ட கற்பதுக்கையை அமைத்துள்ளது இது ஒரு தலைவனுக்கான ஈமச்சின்னம் என்பதை எடுத்துக் காட்டுகிறது. மேல் உள்ள மூடு கல்லின் எடை 2 to 3 டன் இருக்கும் அனைகட்டப் பட்ட பின் நீர் சூழ்ந்து அந்த இடம் தண்ணிரால் சேராகி மேல் மூடு கல் அதிக எடை காரணமாக மற்ற 4 கல்களைுயும் கீழ் அழுத்தி இக்கல் நில மட்டத்துக்கு சமமாக அழுந்தி விட்டது.
இப்பகுதி மற்ற பகுதிகளை விட சற்று மேடாகவும் உள்ளது. அண்மையில் சிதைக்கப்பட்டுள்ள ஒரு கற்பதுக்கையின் மையத்தில் கருப்பு சிவப்பு மற்றும் சிவப்பு வண்ண ஈமக் கலயங்களின் ஓடுகள் காணப்படுகின்றன. இதனுடைய பழமையை காட்டுகிறது. இதைச்சுற்றி வட்டவடிவில் கல்வட்டங்கள் காணப்படுகின்றன. இவைகள் சுமார் கிமு 500 க்கு முந்தய காலத்தை சேர்ந்தது அதாவது 2500 ஆண்டுகளுக்கு முன் இந்த கல்வட்டங்களோடு கூடிய கற்பதுக்கை ஈமச்சின்னங்கள் அமைக்கப்பட்டு இருக்கலாம் என அருங்காட்சிய காப்பாளர் திரு கோவிந்தராஜ் அவர்கள் கூறினார்கள் .
2014 ல் மேட்டூர் நீர்தேக்கப்பகுதியில் 3000 ஆண்டுகள் பழமையான இதுபோன்ற கல்திட்டைகளை கண்டரிந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வுப்பணியில் , அருங்காட்சியக காப்பாச்சியர் கோவிந்தராஜ் தொல்லியல் ஆய்வாளர் சுகவன முருகன்,நாராயணமூர்த்தி பிரகாஷ், விஜயகுமார், டேவீஸ் , எம்.என்.இரவி மதிவாணன் தமிழ்செல்வன் ஆகியோர் பங்கேற்றனர்.
Subscribe to:
Posts (Atom)
அங்கனப்பற்று - மகராசகடை - பாறை ஓவியம் -பணரத்து பண்டா- - MAHARAJAKADI -PANAMARATHUPANDA PREHISTORIC ROCK ART ( PAINTING ) புதிய கண்டறிதல்
மேலும் சிறப்பு பெறும் மகராசகடை ( அங்கனப்பற்று )பகுதி - நடன பாறை ஓவியம் -மகராசகடை மலை அடிவாரப்பகுதியில் உள்ள பனமரத்துபண்டா என்ற இடத்தில் ...
-
கிருஷ்ணகிரி ரயில்வே ஸ்டேசன் krishnagiri railway station Krishnagiri Train Station, Borivali N...
-
மலைக்கவைக்கும் மல்லப்பாடி பாறை ஓவியங்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் , பர்கூரிலிருந்து கிழக்கே சுமார் 4 கி . மீ . தொலைவில் மல்லபாட...
-
மகராஜகடை ஶ்ரீ திரிபுவன சக்கரவர்த்தி மூன்றாம் இராசராச சோழனின் கால கல்வெட்டு -அங்கண அரசு -Dr. லோகேஷ் அவர்கள் உதவியால் ஜெயங்கொண்ட எயில்நாடாழ்வ...