தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி வரலாற்றை அருங்காட்சியகத்துடன் இணைந்து கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல்
Sunday, 26 October 2025
Saturday, 25 October 2025
ராமிநாயனப்பள்ளி நடுகற்கள் -ஆத்துக்காவா – விஜயநகரர் காலத்தில் செதுக்கப்பட்ட நடுகற்கள் ஆகும்.
கிராம மக்களால் வண்ணம் தீட்டப்பட்டு வழிபாட்டில் உள்ளது. வீரன் வாள் மற்றும் வில்வைத்துக் கொண்டு புலியே◌ாடு போராடும் காட்சி செதுக்கப்பட்டுள்ளது. கட்டாரியை புலியின் வாயில் குத்துவது போல் செதுக்கப்பட்டுள்ளது . அவனுலடய இரண்டு வளர்ப்பு வேட்டை நாய்களும் புலினயாடு போராடுகின்றன.அணிகலன்கள் அனிந்து காணப்படுகிறான். இவன் கால்நடைகளையும், ஊர் மக்களையும் காக்க புலியோடு போராடி புலியைக் கொன்று தானும் இறந்ததால் அவனுக்கு இந்த நடுகல் எடுக்கப்பட்டுள்ளது . இவரின் இரண்டு மனைவியரும இவனுடன் உடனகட்டை ஏறியுள்ளனர் . ஆகவே இது சதிக்கல் . பகுதியின் வளத்தை குறிக்கும் வகையில் கிளிகள் காட்டப்பட்டுள்ளன.
2 வருடங்களுக்கு முன் மண்ணில் புதையுண்டு இருந்த மூன்று நடுகற்களையும் ராமிநாயனப்பள்ளி ஊர் மக்கள் பாதுகாத்திருப்பது பாராட்டுக்குறியது புலிகுத்திப்பட்டான் கல் சிறப்பு
https://youtu.be/Z0vHjVuz_3Y
இரண்டாவது நடுகல் ஒரு சதிக்கல் ஆகும் ஊருக்காக நடந்த பூசலில் போராடி இறந்துள்ளான். ஒருகையில் வாளும் ஒருகையில் கட்டாரியும் வைத்துள்ளான் . இடையில் ஒரு குறுவாள் காணப்படுகிறது. அவனோடு அவனின் இரண்டு மனைவியரும் உடன்கட்டை ஏறியுள்ளனர் வளத்தினை குறிக்கும் வகையில் கிளிகள் காட்டப்பட்டுள்ளன
மூன்றாவது நடுகல் ஒரு சதிக்கல் ஆகும் ஊருக்காக நடந்த பூசலில் போராடி இறந்துள்ளான். ஒருகையில் வாளும் ஒருகையில் கடடாரியும் வைத்துள்ளான் இடையில் ஒரு குறுவாள் காணப்படுகிறது. அவனோடு அவனின் இரண்டு மனைவியரும் உடன்கட்டை ஏறியுள்ளனர் . வளத்தினை குறிக்கும் வகையில் கிளிகள் காட்டப்பட்டுள்ளன.
https://maps.app.goo.gl/NRJuqmFun8bGzffr9
Subscribe to:
Comments (Atom)
-
1978 தமிழக்த்தில் கண்டறியப்பட்ட முதல் #பாறைஓவியம் 2000 ஆண்டுகளுக்கும் முற்பட்டது #மல்லப்பாடி . இது தமிழகத்தில் பாறை ஓவியத்தேடலை அதி...








