Wednesday, 19 February 2025

பேகாரஹள்ளி தருமபுரி மாவட்ட கல்வெட்டுகள் -ஒய்சாளர்கள் & விஜயநகரர் காலத்தை சேர்ந்தவை

புதிதாக 2வது கல்வெட்டின் பின்பகுதி தோண்டி எடுத்து மாணவர்களுக்கு படித்து காட்டி விளக்கம் அளிக்கப்பட்டது KHRDT https://youtu.be/2qUE9Faj6WU
மேலே இருப்பது ஒய்சாளர்களின் கல்வெட்டு
விஜயநகரர் கால கல்வெட்டு
பெயருக்கு காரணமான நடுகல்
புதியதாக ஒரு கல்வெட்டு சுத்தம் செய்து படிக்கப்பட்டது - பேகாரஹள்ளி ஒய்சாளர் & விஜயநகர கல்வெட்டுகள்-படித்து மாணவர்களுக்கு தங்கள் ஊரின் வரலாறு விளக்கப்பட்டது --- ஊரக வளர்ச்சித்துறை மேநாள் உதவி இயக்குனர் சென்னியப்பன் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கிருஷ்ணகிரி அருங்காட்சியகமும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டது அது குறித்து முன்னாள் அருங்காட்சியகக் காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறும் போது பேகாரஹள்ளி அரசு மேல் பள்ளியின் தெற்கு பகுதியில் உள்ள திம்மராயசாமி கோவிலின் முன்பகுதியில் 2 கல்வெட்டுகள் காணப்படுகிறது இந்த கல்வெட்டுகள் தமிழக தொல்லியல் துறையால் படிக்கப்பட்டு கிருஷ்ணகிரி மாவட்ட கல்வெட்டுகள் புத்தகத்தில் வெளியிடப்பட்டிருந்தாலும் அதில் இரண்டாவது கல்வெட்டின் பின் பகுதியானது படிக்கப்படாமல் இருந்தது. முதல்கல்வெட்டு ஓய்சாளர் காலத்திய கல்வெட்டு அவர்களுடைய சின்னமான கண்டபேருண்டம் மற்றும் புலி காட்டப்பட்டுள்ளது. ஒய்சாள மன்னன் மூன்றாம் வல்லாளன் ஆட்சியில் கங்கநாட்டு தகடூர் நாட்டு வெங்கூரன்பள்ளி என்ற இந்த ஊரில் பல பகுதிகளை தானம் அளித்த செய்தியை தெரிவிக்கிறது . 13 ஆம் நூற்றாண்டில் பேகாரஹள்ளி வேங்கையூர் என்றே அழைக்கப்பட்டிருக்க வேண்டும் 13 ஆம் நூற்றாண்டின் புலிகுத்திப்பட்டான் கல் அதை நமக்கு கூறுகிறது. வேங்கையை கொன்று ஆநிரைகளை காத்தவனின் வாரிசுகளுக்கு இந்த பகுதியை கொடுத்திருக்கின்றனர். வேங்கையை கொன்றதால் கிடைத்த இடத்தினை வேங்கையூர் என பெயரிட்டு அழைத்திருக்கவேண்டும். அது 100 ஆண்டுகளில் மருவி வேங்கூரன்பள்ளி என மாறி இருக்கிறது . அந்த பெயரைத்தான் ஓய்சாளர்கள் காலத்தில் குறிப்பிட்டு இருக்கின்றனர் . எனவே 14 ஆம் நூற்றாண்டில் வெங்கூரன்பள்ளி தற்போது பேகாரஹள்ளி என மாறியிருக்கிறது. அப்போது இந்தபகுதியை ஆண்டவர் தில்லப்ப தெண்ணாயக்கர் என்பதும் குறிப்பிடப்படுகிறது. இரண்டாம் கல்வெட்டு விஜயநகர மன்னன் தேவராயன் (கி.பி 1418) காலத்தில் இதே ஊரை மீண்டும் சிலருக்கு அளித்த தானத்தினைப் பற்றி கூறுகிறது. எனவே இந்த இரண்டு கல்வெட்டுகள் மற்றும் நடுகல் வாயிலாக பேகாரப்பள்ளி என்று இன்று அழைக்கப்படும் ஊரானது 13ம் நூற்றாண்டில் வேங்கையைக் கொன்ற வீரனின் நினைவாக வழங்கப்பட்டதால் வேங்கையூர் என்றும், 14ம் நூற்றாண்டில் இப்பெயர் மறுவி வேங்கூரன்பள்ளி பள்ளி என்றும் இதே பெயர் 15ம் நூற்றாண்டிலும் வழங்கி தற்போது அது மறுவி பேகாரஹள்ளி என அழைக்கப்படுகிறது. மேலும் ஒரே ஊர் 3 காலக்கட்டங்களில் 3 முறை தானம் அளிக்கப்பட்டுள்ள செய்தியையும் அறியமுடிகிறது என்றார். மாணவர்கள் அந்த பகுதியின் வரலாற்றினை அறிந்து கொள்ளும் வகையில் அவர்களுக்கு விளக்கி கூறப்பட்டது. இந்த ஆய்வுப்பணியின் போது சதாநந்தகிருஷ்ணகுமர் பாலாஜி, சென்னியப்பன், தருமன் , ஆய்வுக்குழு ஒருங்கிணைப்பாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் ஆசிரியர் புகழேந்தி பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் , ஊர் பெரியவர்கள் மாணவர்கள் ஆசிரியர்கள் ஆகியோர் உடன் இருந்தனர் . ஊரக வளர்ச்சித்துறை மேநாள் உதவி இயக்குனர் சென்னியப்பன் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கிருஷ்ணகிரி அருங்காட்சியகமும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டது அது குறித்து முன்னாள் அருங்காட்சியகக் காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறும் போது பேகாரஹள்ளி அரசு மேல் பள்ளியின் தெற்கு பகுதியில் உள்ள திம்மராயசாமி கோவிலின் முன்பகுதியில் 2 கல்வெட்டுகள் காணப்படுகிறது இந்த கல்வெட்டுகள் தமிழக தொல்லியல் துறையால் படிக்கப்பட்டு கிருஷ்ணகிரி மாவட்ட கல்வெட்டுகள் புத்தகத்தில் வெளியிடப்பட்டிருந்தாலும் அதில் இரண்டாவது கல்வெட்டின் பின் பகுதியானது படிக்கப்படாமல் இருந்தது. முதல்கல்வெட்டு ஓய்சாளர் காலத்திய கல்வெட்டு அவர்களுடைய சின்னமான கண்டபேருண்டம் மற்றும் புலி காட்டப்பட்டுள்ளது. ஒய்சாள மன்னன் மூன்றாம் வல்லாளன் ஆட்சியில் கங்கநாட்டு தகடூர் நாட்டு வெங்கூரன்பள்ளி என்ற இந்த ஊரில் பல பகுதிகளை தானம் அளித்த செய்தியை தெரிவிக்கிறது . 13 ஆம் நூற்றாண்டில் பேகாரஹள்ளி வேங்கையூர் என்றே அழைக்கப்பட்டிருக்க வேண்டும் 13 ஆம் நூற்றாண்டின் புலிகுத்திப்பட்டான் கல் அதை நமக்கு கூறுகிறது. வேங்கையை கொன்று ஆநிரைகளை காத்தவனின் வாரிசுகளுக்கு இந்த பகுதியை கொடுத்திருக்கின்றனர். வேங்கையை கொன்றதால் கிடைத்த இடத்தினை வேங்கையூர் என பெயரிட்டு அழைத்திருக்கவேண்டும். அது 100 ஆண்டுகளில் மருவி வேங்கூரன்பள்ளி என மாறி இருக்கிறது . அந்த பெயரைத்தான் ஓய்சாளர்கள் காலத்தில் குறிப்பிட்டு இருக்கின்றனர் . எனவே 14 ஆம் நூற்றாண்டில் வெங்கூரன்பள்ளி தற்போது பேகாரஹள்ளி என மாறியிருக்கிறது. அப்போது இந்தபகுதியை ஆண்டவர் தில்லப்ப தெண்ணாயக்கர் என்பதும் குறிப்பிடப்படுகிறது. இரண்டாம் கல்வெட்டு விஜயநகர மன்னன் தேவராயன் (கி.பி 1418) காலத்தில் இதே ஊரை மீண்டும் சிலருக்கு அளித்த தானத்தினைப் பற்றி கூறுகிறது. எனவே இந்த இரண்டு கல்வெட்டுகள் மற்றும் நடுகல் வாயிலாக பேகாரப்பள்ளி என்று இன்று அழைக்கப்படும் ஊரானது 13ம் நூற்றாண்டில் வேங்கையைக் கொன்ற வீரனின் நினைவாக வழங்கப்பட்டதால் வேங்கையூர் என்றும், 14ம் நூற்றாண்டில் இப்பெயர் மறுவி வேங்கூரன்பள்ளி பள்ளி என்றும் இதே பெயர் 15ம் நூற்றாண்டிலும் வழங்கி தற்போது அது மறுவி பேகாரஹள்ளி என அழைக்கப்படுகிறது. மேலும் ஒரே ஊர் 3 காலக்கட்டங்களில் 3 முறை தானம் அளிக்கப்பட்டுள்ள செய்தியையும் அறியமுடிகிறது என்றார். மாணவர்கள் அந்த பகுதியின் வரலாற்றினை அறிந்து கொள்ளும் வகையில் அவர்களுக்கு விளக்கி கூறப்பட்டது. இந்த ஆய்வுப்பணியின் போது சதாநந்தகிருஷ்ணகுமர் பாலாஜி, சென்னியப்பன், தருமன் , ஆய்வுக்குழு ஒருங்கிணைப்பாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் ஆசிரியர் புகழேந்தி பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் , ஊர் பெரியவர்கள் மாணவர்கள் ஆசிரியர்கள் ஆகியோர் உடன் இருந்தனர் அமைவிடம்
https://maps.app.goo.gl/mQoRV1jiZzT3CL8G8
அனைவருக்கும் வணக்கம் உங்கள் ஊரில் இது போன்ற கல்வெட்டுகள் , நடுகற்கள் ஆகியவை இருந்தால் வந்து படித்து அதைப்பற்றிய விளக்கத்தை தருகிறோம் உங்களுக்கு வரலாற்றில் விருப்பம் எனில் எங்கள் குழுவில் இணைந்து வரலாறு பற்றிய தகவல்களை பெறலாம் நன்றி தொடர்பு எண் 9787536970 https://chat.whatsapp.com/EyXDAX0i4KB7eTAbItqtxh

Sunday, 16 February 2025

அடிலம் -தருமபுரி மாவட்டம் கல்வெட்டுகள்

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டம் அடிலம் பஞ்சாயத்து . வீ.எம்.கொட்டாய், சிவன் கோயில். அழிந்த கோயிலின் அதிட்டான குமுதகத்தில் உள்ள கல்வெட்டு. கல்வெட்டு வாசகம் 1. சீ தண்டீச்சரன் ஓலைசாகரஞ் சூழ் வையகத்துத் தண்டிச்சுரன் கர்மமாராய்க பண்டேயறஞ் செய்தாநறங் காத்தாந் பாதந்திறம்பாமற் செந்நிமேற்கொண்டு ஸ்வஸ்தி கங்க நாட்டு தகடூர் நாட்டு அடிலியமான தெசி பட்டணத்து உடையார் தேசிப்பட்டணத்து உடையார் தேசிநாயகர் கோயில் தேசிநாயகந்.. க்காவணத்துக் குறைவறக்கூடி நிறைவற நிறைந்து நிர்ந (சூலக்குறியீடு) ஸ்வஸ்தி ஸ்ரீ உடையார் தேசிநாயகர் எழுந்தருள மறை திருநாளுமுமையுடையா நாவுந்தனயேன். ஆய்வுப்பணியில் சதாநந்த கிருஷ்ணகுமார் ஆய்வாளர் கோவிந்தராஜ் மேநாள் காப்பாச்சியர் சிவக்குமார் அரசு அருங்காட்சியக காப்பாச்சியர் கி.கிரி சென்னியப்பன் ஊரக.வளர்சித் துறை இணை இயக்குனர் ஓய்வு பாலாஜி தமிழ்செல்வன் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும குழு நா இரண்டாம் கல்வெட்டு தனியார் முனியப்பன் கொல்லையில் உள்ள்து. 1. குலோத்துங் 2. கசோழ தே 3. வற்கு இயா 4. ண்டு 25 5. ஆவதில் கன் 6. நநான பெ 7. ருமா,ள் இட்ட 8. வன்

புலி சின்னத்துடன் கூடிய சோழர் கல்வெட்டு கண்டுபிடிப்பு ஓசூர்

தமிழகத்தில் முதல்முறையாக புலி சின்னத்துடன் கூடிய சோழர் கல்வெட்டு கண்டுபிடிப்பு: கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகம், தமிழக தொல்லியல் துறை, பள்...