Saturday, 23 November 2024

அரசு அருங்காட்சியகம் கிருஷ்ணகிரி சிந்து சமவெளி நூற்றாண்டு விழா மற்றும் குழந்தைகள் தின விழா - ஓவியப்போட்டி 23.11.2024

கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் சிந்து சமவெளி நூற்றாண்டு விழா மற்றும் குழந்தைகள் தின விழா முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப்போட்டி நடைபெற்றது. இந்த ஓவியப் போட்டியில் கிருஷ்ணகிரி மாவட்ட பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 75 மாணவ மாணவியர் கலந்துகொண்டு தங்களுடைய ஓவியத் திறமையை வெளிப்படுத்தினர். மூன்று பிரிவுகளின் கீழ் நடைபெற்ற இந்த போட்டியில் மூன்று பிரிவிலும் முதல் மற்றும் இரண்டு மூன்று ஆகிய நிலைகளில் வந்தவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மற்ற மாணவ மாணவியருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. வந்திருந்த மாணவ மாணவியர் மற்றும் பெற்றோர்களை அருங்காட்சியக காப்பாட்சியர் சிவகுமார் அவர்கள் வரவேற்றார்.ஓவிய போட்டி பணிகளை ஓவிய ஆசிரியர் வானவில் பன்னீர்செல்வம் அவர்கள் மேற்பார்வையிட்டார் நிகழ்வின் முடிவில் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவின் தலைவர் நாராயணமூர்த்தி மற்றும் தமிழ்செல்வன், உஷா, பாலாஜி, திருப்பதி மற்றும் அருங்காட்சியக பணியாளர் செல்வகுமார் ஆகியோர் மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தனர். உயர்நிலைப் பள்ளிகளுக்கான போட்டியில் முதல் பரிசு திவ்யா கம்பம்பள்ளி உயர்நிலைப்பள்ளி, இரண்டாம் பரிசு சோக்காடிஉயர்நிலைப் பள்ளியின் சக்திவேல், மூன்றாம் பரிசு வேதா ஸ்ரீ நகராட்சி நடுநிலைப் பள்ளி அண்ணா நகர் தொடக்க நிலைகளுக்கான முதல் பிரிவு போட்டியில் முதல் பரிசு S.பர்ஹான் கட்டிக்கானபள்ளி, இரண்டாம் பரிசு யாக்ஷிதா -துவரகா மெட்ரிக், மூன்றாம் பரிசு ஹேமச்சந்திரன் நகராட்சி நடுநிலைப் பள்ளி ராஜீவீதி. தொடக்க நிலைகளுக்கான இரண்டாவது பிரிவு போட்டியில் முதல் பரிசு கதிர்ச்செல்வன் கட்டிக்கானபள்ளி புதூர் தொடக்கப்பள்ளி, இரண்டாம் பரிசு பரமேஷ் நகராட்சி நடுநிலைப் பள்ளி பழைய பேட்டை, மூன்றாம் பரிசு பிரீத்திகா துவரகா மெட்ரிக்

புலி சின்னத்துடன் கூடிய சோழர் கல்வெட்டு கண்டுபிடிப்பு ஓசூர்

தமிழகத்தில் முதல்முறையாக புலி சின்னத்துடன் கூடிய சோழர் கல்வெட்டு கண்டுபிடிப்பு: கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகம், தமிழக தொல்லியல் துறை, பள்...