Thursday, 6 June 2024

பெண்களுக்கான சிறப்பு நடுகற்கள் கிருஷ்ணகிரி

பெண்களைப் போற்றுவோம் கிருஷ்ணகிரி மாவட்ட நடுகற்கள்
பெண்களைப் போற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட நடுகற்கள்
கிருஷ்ணகிரி மாவட்ட நடு கற்களில் பெண்களுக்கு அளிக்கப்பட்டுள்ள முக்கியத்துவம் பற்றி பார்க்கலாம் ஓசூர் பச்சை குளத்துக்கு அருகே பெண்ணுக்காக எடுக்கப்பட்ட ஒரு நடுகல் உள்ளது இந்த நடு கல் மிகுந்த சிறப்புடையது ஏனென்றால் பெண்ணுக்காக எடுக்கப்பட்ட நடுகல் மட்டுமல்ல இந்தப் பெண் ஒரு அரியாசனத்தில் அமர்ந்திருக்கிறார் அதுவும் மகாராஜ விலாசனத்தில் இளவரசி போன்று அமர்ந்துள்ளார் அவருடைய கையில் வளமையின் சின்னமான கிளி காட்டப்பட்டுள்ளது இருபுறமும் மலர்களை ஏந்திய சிறு உருவங்களும் இருபுறமும் சாமரம் வீசும் இரண்டு பெண்களும் காட்டப்பட்டுள்ளது இவருக்கான முக்கியத்துவத்தை நமக்கு தெரிவிக்கிறது. ஓசூர் பெண்ணுக்கு எடுக்கப்பட்ட நடுகல் -The heroine stone https://youtu.be/TASO4x0Nqf8
பெண்னுக்கு ஆண்களுக்கு நிகரான இடத்தை ஆயிரம் வருடங்களுக்கு கொடுத்தான் என்பதற்கு ஆதாரமாக கிருஷ்ணகிரி சோமேஷ்வரர் கோவிலில் வைக்கப்பட்டுள்ள நடுகல் நமக்கு கூறுகிறது கோவிலை கட்டிய குனபதாசரின் மனைவிகளான சிறிய காமவை , பெரிய காமவை என்பது கல்வெட்டிலும் குறிப்பிடப்பட்டுள்ளது . பெண்களின் சிறப்பு - கிருஷ்ணகிரி மாவட்ட நடுகற்களில் - தொல்லியல்கழகம்31ஆம் ஆண்டு கருத்தரங்கம் தொல்லியல்கழகம்31ஆம் ஆண்டு கருத்தரங்கம் - தி.தமிழ்செல்வன் -கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு https://youtu.be/wec7gZljsk0
இந்த பெண் இறந்தவுடன் அவள் கடவுளாக போற்றப்படுவதை அதன் அருகே இருக்கும் மற்றொரு நடுதல் நமக்கு தெரியப்படுத்துகிறது இந்த கல்வெட்டுடன் கூடிய நடுக்கலில் காணப்படும் அதே சிற்பம் மிக அழகாக செதுக்கப்பட்டு சாத்தியம்மாள் என்ற தெய்வமாக வழிபட்டு வருகிறார்கள் நாட்டுக்காகவோ தெய்வத்திற்காகவோ தன்னை பலியிட்டுக் கொண்ட அவளை தெய்வமாக வழிபடும் மரபு நம்மிடையே இருந்தது என்பதையும் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
தமிழகத்தின் பெரும் பகுதிக்கு ஒரு காலத்தில் தலைநகராக இருந்த சின்ன கொத்துர் எனப்படும் குந்தாணையில் காணப்படும் ஒரு நடுவில் வியக்க வைக்கிறது இதுவரை தமிழ்நாட்டிலேயே உடனே தலையை வெட்டு என்ற வாசகத்தோடு எந்த ஒரு நடு கல்லும் கிடைக்கவில்லை அப்படி ஒரு நடுவில் சின்ன கொத்து கோவிலிலே காணப்படுகிறது தன்னை பலியிட வேண்டும் என அந்தப் பெண் விரும்பி தலைவலி கொடுக்கப்படுகிறாள் இதிலிருந்து அவளுடைய தியாகம் நமக்கு தெரிய வருகிறது அமர்ந்த நிலையில் கையில் பூவோடு காணப்படும் இந்தப் பெண்ணை வீரன் ஒருவன் வெட்டுவது போன்ற காட்சி செலுத்தப்பட்டிருக்கிறது இது 15 ஆம் நூற்றாண்டு காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம் ஆச்சரியம் சின்னகொத்தூரை ஒரு பெண் ஆட்சி செய்தாரா? மாவட்டத்தில் இரண்டாவது பெண்ணுக்கான நடுகல் https://youtu.be/fNjGLPU-2Eo சுதந்திர தினத்தில் தியாகம் பற்றி பேசுகிறோம் ஆனால் அதற்கு 400 வருடங்களுக்கு முன்பே தன் உணிரை தியாகம் செய்த ஓர் வீர மங்கை நமது தலைநகராம் தேவர்ந்தானியில் இருந்தருக்கிறார். அவர் பலியிடப்படுவதும் அதன் பின் தெய்வமாக வழிபட்டதற்கான ஆதாரங்கள் இன்னும் அங்கே https://youtu.be/PWY4R3bxi5A
. சந்தனப்பள்ளி என்ற ஊரின் ஏரிக்கரையில் அமைந்திருக்கும் ஒரு நடுகல் வீட்டில் இருக்கும் நடு கல்லில் மூன்று பெண்கள் குதிரை மேல் அமர்ந்து செல்வது போன்ற காட்சி இது 13 அல்லது 14 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் இந்த பெண்கள் எதோ ஒரு சடங்கிற்காக செல்கின்றனர் இவர்களின் மீது வெண்கொற்ற குடை காட்டப்பட்டுள்ளது அப்படியானால் இவர்கள் முக்கியமான நபர்களாக இருப்பதற்கான வாய்ப்பு உண்டுஇது இந்த பெண்களுக்காக எடுக்கப்பட்ட தனி நடுகல் ஆகும்.
மல்லிகார்சுன துர்கம் அருகே உள்ள அந்தேவனப்பள்ளியில் பெண்னுக்கான தனி நடுகல் எடுக்கப்பட்டுள்ளது . இவர் அமர்ந்து கைகூப்பி இறைவனை வழிபடுவது போல் காட்டப்பட்டுள்ளார் , அருகே சிவலிங்கத்தை வழிபடும் காட்சியும் செதுக்கப்பட்டுள்ளது. மற்றோர்புறம் பணிப்பெண் காணப்படுகிறார் இதிலிருந்து இவர் முக்கியமான ஒருவராகத்தான் இருக்க வேண்டும். இவர் இறந்த பின்பு தேவலோகத்துக்கு செல்லும் காட்சி மேல்பகுதியில் செதுக்கப்பட்டுள்ளது. பெண்ணுக்கு எடுக்கப்பட்ட நடுகல் - தவநிலையில் உள்ள வீரனின் நடுகல் அந்தேனவப்பள்ளி கிருஷ்ணகிரி மாவட்டம் https://youtu.be/rCOsAiA3rUQ மல்லிகார்சுன துர்கம் (சிவன்கோவில்)கோவிலுக்காக தன் உயிரை கொடுத்த பெண்ணும் https://youtu.be/t_AjmK09d1w கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பெண்களுக்கான தனி நடுகற்கள் -மகளிர்தின சிறப்பு தொகுப்பு அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள் -திருமதி .ஜெயலட்சுமி தமிழாசிரியை காமன்தொட்டி https://youtu.be/KkDNUljTw
தொட்ட ஆர்தள்ளி நடுகற்கள் - முன்னால் மாணவர்கள் உலக தமிழாராய்ச்சி நிறுவனம் -கிருஷ்ணகிரி மாவட்ட களப்பயணம் . https://youtu.be/oEm6y15HNcs

No comments:

Post a Comment

அங்கனப்பற்று - மகராசகடை - பாறை ஓவியம் -பனரத்து பண்டா- - MAHARAJAKADI -PANAMARATHUPANDA PREHISTORIC ROCK ART ( PAINTING ) புதிய கண்டறிதல்

மேலும் சிறப்பு பெறும் மகராசகடை ( அங்கனப்பற்று )பகுதி - நடன பாறை ஓவியம் -மகராசகடை மலை அடிவாரப்பகுதியில் உள்ள பனமரத்துபண்டா என்ற இடத்தில் ...